Sunday 28 July 2013

செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.

துயரம் குடலில் அமிலத்தை அதிகமாக்குகிறது
அதிகமான அமிலம் குடலை பாதிக்கிறது
குடலின் பாதிப்பு உடலைப் பாதிக்கிறது
துயரத்தின் அளவைப் பொறுத்து உடலோடு மனதின் பாதிப்பும் அதிகமாகிறது

உப்பு அளவோடு சேர உணவு சுவைக்கிறது
உப்பு அதிகமாக உணவு கைக்கிறது
உப்புக்கு ஒரு சுவை தரவும் உதவுகிறது
உப்பு அதிகமாக சுவையும் கெடுகிறது
உப்பின் தண்மை மாறுவதில்லை
துயரத்தின் தண்மையும் மாறுவதில்லை
துயரத்தை மையப்படுத்தும் தன்மை துவளச் செய்கிறது
செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.


'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான். குர்ஆன்: 2:148.

5 comments:

  1. We get what we sow. Yes, life hinges on our thoughts.
    Your brief, but beautiful write inspires me a lot.

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
  3. @Arumugam Easwar
    Thank you for your comment and encouragement

    ReplyDelete
  4. @திண்டுக்கல் தனபாலன்
    உங்கள் கருத்துக்கு நன்றி . நீங்கள் விரும்பியபடி செய்து விட்டேன் .அதுவும் நான் விரும்பியதுதான் .

    ReplyDelete