Monday, 28 April 2014

அவளை மணமுடிக்க நினைத்தேன்! அவள் மற்றவனுக்கு மணமுடிக்கப் பட்டாள்!

நம்பிக்கை வாழ்வின் பிடிப்பு
நம்பிக்கைக்கு ஆதாயம் தேடி அலைவதும்
நம்பிக்கைக்கு ஆதாரம் தேடி அலைவதும்
நம்பிக்கையின் பிடிப்பை போக்கும்

நம்பிக்கை பெறுதல் மகிழ்வானது
நம்பிக்கை பெற்று பலன் அடைதல் வேண்டும்
நம்பிக்கை பெற்றோருக்கே மார்க்கம்
நம்பிக்கை அற்றோர்க்கு மார்க்கமில்லை

நினைத்ததெல்லாம் நடப்பதில்லை
நடக்காதென்ற நினைவோடு முயற்சிப்பதில்லை
முடிக்க நினைத்தது ஒன்று
முடிந்தது நினைக்காத ஒன்று

அவளை மணமுடிக்க நினைத்தேன்
அவள் மற்றவனுக்கு மணமுடிக்கப் பட்டாள்
திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுதல் என்பது
திருமண வாழ்வின் உயர்வு நிலையாலல்ல
திருமண வாழ்வில் வந்து சேர்ந்தவரால்

Sunday, 27 April 2014

பிள்ளைகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது சிறப்பன்று


'அவனைப் பார்
இவனைப் பார்
அவனும் இவனும் உயர்ந்தவர்கள்
உன்னால் மட்டும் ஏன் உயர்ந்தவனாக முடியவில்லை!'

பெற்றோர் மகனை கண்டிக்க
மகன் 'அவர்களை அவ்வாறு உயர்வாக வளர்த்துள்ளார்கள் .நீ என்னை வளர்த்த விதம் அவ்வாறு '. என்று சொல்லிவிடும் நிலையாகி விடும் .

குறை சொல்லி வளர்ப்பதை விட உயர்வை சொல்லி உற்சாகப் படுத்துதல் உயர்வைத் தரும்

தன்னிலையை ஆய்வு செய்ய முயல்வது அவசியம்





தொல்லை கொடுப்பவர் தொலை தூரத்திலிருந்தும் கொடுப்பார்
தொலை தூரத்திலிருந்து கொடுப்பவர் தொல்லையிலிருந்து சாமாளிக்க நேரம் கிடைக்கும்

தொல்லை கொடுப்பவர் அருகிலிருந்துக் கொண்டும் கொடுப்பார்
அருகில் இருந்துக் கொண்டு கொடுப்பவர் தொல்லையிலிருந்து சாமாளிக்க நேரம் கிடைக்காது
அருகில் இருப்பவரோடு அன்பாய் இருப்பதோடு கவனமாய் இருப்பது நல்லது

யாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்!

யாரும் விரும்பாத நீ
யாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்

பிறக்கும்போதே ஒட்டிக்கொண்டு பிறந்து விட்டாய்
இருப்பவரையும் சொல்லிக் கொள்ளாமல் அழைத்து விடுகிறாய்

அழைக்காத விருந்தினன்
விரும்பாத உறவினன்
வருகையை நேசிக்கவில்லை
வருகையை தடுக்க முடியவில்லை
வருகையை விரும்பவில்லையென்றாலும்
விரும்பியதுபோது அழைத்துக் கொள்வாய்

Thursday, 24 April 2014

தேடுதல் வாழ்க்கையில் ஒரு பகுதி

பாதுகாப்பான வாழ்க்கை நாடி
நல்லதை தேடாமல் இருப்பது வாழ்வல்ல
தேடுதல் வாழ்க்கையில் ஒரு பகுதி
வாழ்வில் ஏற்றம் இறக்கம் வருவது இயல்பு

குழந்தை தவழ தடுக்கி விழுதல் இயல்பு
குழந்தை தவழ தடுக்கி விழுமென தவழுதலை தடுக்கமுடியுமோ

சிறிய விபத்தில் கிடைத்த அனுபவம்
பெரிய விபத்து வராமல் பாதுகாக்க உதவும்

பிறப்பே ஒரு விபத்து
விபத்து இல்லாத வாழ்வேது

தேர்வு ஒரு பயிற்சி
தேர்வில் வெற்றி தோல்வி நிகழ்வதுண்டு

கடமையை செய்யாமல் உரிமை கேட்பது முறையல்ல

எனக்கு வாக்குப் போடும் உரிமை கிடைத்த காலத்திலிருந்து நான் வாக்கு போடுகிறேன்
வாக்கு போடுவது எனது கடமை மற்றும் உரிமை
கடமையை செய்து விட்டு உரிமையை நாடுகின்றேன்
கடமையை செய்யாமல் உரிமை கேட்பது முறையல்ல
கடமையை செய்வதனை பெருமையாக பேசுவதிலும் உயர்வில்லை
கடமையை செய்ய விடாமல் தடுப்பதும் உரிமையல்ல
'கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு' இவைகளை பேணுபவருக்கு கிடைக்கும் உரிமை உயர்வானது
கடமையை கண்டு கொள்ளாதவன் தனக்கு மற்றவர் செய்ய வேண்டிய கடமையை விரும்புகின்றான்

ஒன்றுக்கொன்று இடம் கொடுத்து சிந்திக்க வைக்கிறது

இனம்
இயக்கம்
அரசியல்
ஒன்றோடொன்று இடிபட்டு இடிந்துப் போகிறது

சமயம்
மார்க்கம்
ஞானம்
ஆன்மீகம்
ஒன்றோடொன்று இணைந்து இடிந்துப் போகிறது

தத்துவம்
அறிவியல்
வின்ஞானம்
ஒன்றுக்கொன்று இடம் கொடுத்து சிந்திக்க வைக்கிறது

Wednesday, 23 April 2014

மலர மலர மகிழ்ந்துப் போனது பூக்காரி முகம்.

மலர மலர
மகிழ்ந்துப் போனது
பூக்காரி முகம்.

மலர் கருக
வாடிப் போனது
பூக்காரி முகம்.

Monday, 21 April 2014

அனைத்தும் நம் செயலால் வந்த வினை

நேற்று முடிந்தது
முடிந்தது முடிந்ததுதான
வருவது நிச்சயமில்லை

நடப்பது நிகழ்வது
நடப்பது நினைவோடு நகர்வது
நிகழ்வதை மகிழ்வோடு நகர்த்துவோம்

நேற்று நடந்தவை நல்லதும் அல்லதும் கலந்த கலவை
நேற்று நடந்த நல்ல நிகழ்வை நினைத்து மகிழ்வோம்
நேற்று நடந்த கெட்ட நிகழ்வை வைத்து பாடம் பயில்வோம்

Sunday, 20 April 2014

நல்லதைச் சொல் .நயம்படச் சொல்..

நல்லதைச் சொல் .நயம்படச் சொல்..

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல் .

சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டால் அறிவு வளராது

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விட்டால் பயனற்று போகும்..!!
by-Mohamed Ali

இறைவா ! எங்களுக்கு நற்குணங்கள் கொண்டவரை எங்கள் நாட்டை ஆளும் தலைவராகக் கொடு

Wednesday, 16 April 2014

நான் உன்னை நேசிக்கின்றேன்

என் கருத்துக்கு மாறுபடுகிறாய்
உன் கருத்துக்கு நான் மாறுபடுகின்றேன்

உன் கொள்கை வேறு
என் கொள்கை வேறு

உன் கொள்கையில் உனக்கு பிடிப்பு
என் கொள்கையில் எனக்கு பிடிப்பு

உன் கொள்கையை என்னை ஏற்றுக் கொள்ள நீ வற்புறுத்தவில்லை
என் கொள்கையை உன்னை ஏற்றுக் கொள்ள நான் வற்புறுத்தவில்லை

Monday, 14 April 2014

பக்தனின் வேண்டுகோள்

நான் தோறறாலும் பரவாயில்லை அவன் தோற்றாக வேண்டும். அவனது வாக்கைப் பிரிக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்
-----------------------
பக்தனின் வேண்டுகோள்

இறைவன் பக்தனின் முன் தோன்றி' உனக்கு வேண்டியதைக் கேள் தருகிறேன்' என்றான்

'நீ எனக்கு கொடுப்பதைப் போல் எனது பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரு மடங்கு தருவதாய் இருந்தால் கேட்கிறேன்' என்றான்

'உன் விருப்பப் படியே கொடுக்கிறேன் .தயங்காமல் கேள் என்றான்' இறைவன் பக்தனிடம்

பக்தன் இறைவனிடம் உடனே கேட்டான் ' எனது ஒரு கண் பார்வையை போக்கிவிடு '

மனைவியின் அருமை அறியாத கணவனால்...

மனைவியை மறக்கவில்லை
மனைவியை மறைத்து வைத்தேன் மற்றவர் பார்வையிலிருந்து
மனைவியை நான் நேசிக்கவில்லை
மனைவி என்னை நேசித்தாள்
மனைவி என்னை நேசித்தது மற்றவர்களுக்கு காட்டிக் கொடுத்தது
மனைவி என் பார்வையில் அழகாக இல்லை
மனைவி என் பார்வையில் படிக்காதவளாக இருந்தாள்
மனைவி படித்தவளாக மாறினாள்
மனைவி மற்றவளுக்கு பாடம் கற்பிக்கிறாள்
மனைவி உய்ர்ந்தவளாகி விட்டாள்
மனைவியைவிட நான் தாழ்ந்தவானகி விட்டேன்
மனைவியின் உயர்வு உலகம் அறிய வந்ததால்.

பதவி வந்தால் பனிக்கட்டி கரைவது போல் சொல்லியது கரைந்து போகும்


நேசித்து முடித்து வைத்தது நினைவில் நிற்கிறது
நேசிக்காமல் முடித்துக் கொண்டது நினைவில் நிற்கிறது

நேசிக்காமல் முடித்து வைத்ததால் விலகிப் போனது நினைவில் நிற்கிறது
நேசிக்காமல் சேர்த்து வைக்க முயல்வது கசந்து நிற்கிறது

கட்டாயத்தின் நிர்பந்தம் சொல்ல வைக்கிறது
பதுமையான நிலமை சேர்த்து வைக்க முயல்கிறது

சொல்லவைத்தது காதலால் வந்ததல்ல
சொல்லவைத்தது பதவியின் மோகத்தால் வந்தது

தானே உயர்வு என்று தாளம் போட்டாய்

மேகம் போல் வந்து மறைந்தாய்
மேகம் குளிர்ந்து பனிக்கட்டியாய் கொட்டுவதுபோல் கொட்டினாய்
மேகம் வருவதைக் கண்டு மழை வரும்
செடிகள் வளருமென நம்பினோர் ஏமாற்றமடைந்தனர்
பனிக்கட்டியைக் கொட்ட பிடித்திருந்த கொடையும் கிழிந்தது
வானவில் தோன்றி மறைந்தால் நிறங்கள் மறைந்து போகும்

Tuesday, 8 April 2014

கலங்கிய மனமும் மகிழ்வாய் பளிச்சிட

பொய்மை அறிய அறிவு வேண்டும்
ஞானம் வர பொய்மை விலகும்
ஞானம் கிடைக்க தேடல் வேண்டும்
ஞானம் முழுமைப் பெற தொடர் முயற்சி வேண்டும்
ஞானத்தின் திறவுகோல் நாயகத்தின் வாழ்வின் வழியாகும்
ஞானம் கிடைத்து விளங்க இறை அருள் வேண்டும்
இறைவனை அறிய இறை மறை பொருள் அறிந்து ஓத வேண்டும்

அண்ணல் நாளும் செப்பிய உயர்தரு சொற்கள்
நண்ணி நாளும் நடந்திட உயர்பெரு வாழ்வெய்த
எண்ணம் யாவும் உயர்வாய் வந்திட
கலங்கிய மனமும் மகிழ்வாய் பளிச்சிட உணர்வீர்

எதிலும் சந்தேகமும் பயமும் "வஸ்வாசி"


நம்பிக்கையற்ற நிலை
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )

சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்

தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டாதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா

Monday, 7 April 2014

முதுமை கால நிகழ்வுகள் ஆழ் கடலில் சிப்பிகலிருந்து கிடைத்த முத்துகள் .

முதுமை கால நிகழ்வுகள் ஆழ் கடலில் சிப்பிகலிருந்து கிடைத்த முத்துகள்  .
சில சிப்பிகளில் உயர்ரக முத்து கிடப்பதில்லை. முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது.இது இயற்கையில் நீரில் வாழு கின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த முத்துச்சிப்பி போன்ற சில உயிரினங் களிலிருந்து பெறப்படுகின்றது

சில சிப்பிகளில் உயர்ரக முத்துகள் கிடைத்து விடுகின்றன
மனிதன் வாழ்ந்த முறைகளில் அவன் வாழ்வே அடுத்தவர்களுக்கு வழிகாட்டி முத்துகளாக அமையக் காணாலாம்
சிலருக்கு முதுமையான வாழ்வு  மகிழ்வாகவும் சிலருக்கு அது வருத்தம் தருவதாகவும் இருக்கிறது .
வருத்தத்தை பகிர்வதில் பகிர்பவரின் மனதிற்கு ஒரு அமைதியைத் தரலாம் .ஆனால் அதுவே பகிரப்படுபவருக்கு வருத்தத்தை தரக் கூடும்.
முடிந்தவரை வருத்தமான நிகழ்வுகளை விழுங்கி விட்டு மகிழ்வை மட்டும் கேட்பவருக்கும் மகிவைக் கொடுக்கும் வகையில்  பகிர்வது சிறப்பு.
ஒருவர் தனது வருத்தத்தை.ஆற்றாமையை ,இயலாமையை பகிரும்போது அதனைக் கேட்பவர்கள் அவருக்கு உதவி செய்ய இயலாமல் போனாலும் இரக்க மனதோடு கேட்கும்போது வருத்த மனம் கொண்டோர் மன அமைதி அடைவர் .அதனால் இருவருக்கும் நன்மையே .

Sunday, 6 April 2014

நான் சொன்னதை நானே அறியவில்லை

நான் சொன்னதை நானே அறியவில்லை
நான் சொன்னதை நீ அறிந்து கொண்டாய்
நான் சொன்னது உன் மனதை புண் படுத்துமென்று நான் நினைக்கவில்லை
நான் சொன்னதால் உன் மனதை புண் படுத்திவிட்டதை நான் அறிகின்றேன்
நான் இனியொரு முறை அவ்விதம் சொல்ல விரும்பவில்லை
நான் சொல்லிய வார்த்தைகளின் பிரதிபளிப்பு உன் முகத்தில் காட்டிக் கொடுத்தது
நான் சொல்லிய வார்த்தைகளுக்கு நீ பதில் வார்த்தைகளை சொல்ல வில்லை
நான் பார்க்கிறேன் உன் முகம் உடைந்த கண்ணாடியாக மாறியதை

வேலையில் வேறுபாடு

white caller jab
உயர்ந்த பதவி
நிறைய ஊதியம்
உடல் உழைப்பு இல்லை
ஜிம்முக்கு போய் செலவு
ஓய்வு அடைய
பெரிய ஊதியம்
வைத்திய செலவுக்கு பயன்படும்
அதற்காகவே
white caller jab பணியாளர்களுக்கு
நிறைய ஊதியம் கிடைக்கிறது
the white-collar worker typically performs work in an office environment and may involve sitting at a computer or desk.
-------------

Friday, 4 April 2014

எங்கிருந்தாலும் வாழ வாழ்த்துகின்றேன்


காயப் படுத்திவிட்டு கடந்து விட்டாய்
காயப் படுத்தியதால் என்னை பலப்படுத்தி விட்டாய்

நேயமாக்கிக் கொண்டவளாய் இருந்த காலத்தில்
மனதை வலுப்படுத்தி விட்டாய்

தனித்து விட்டுச் சென்றாய்
மனதில் தேடலை உருவாக்கினாய்

அவனுக்கென்ன அவ்வளவு அவசரம் !

மெழுகுவத்தியாய் வெளிச்சம் தந்தாய்
உன்னை வதைத்து என்னை வளர்த்தாய்
பாசத்தைக் காட்டினாய் எதையும் எதிர்பாராமல்
பாசம் உன்னோடு உருவாகியது என்னை உருவாக்கியதிலிருந்து
கண்டிக்கும் மனதிலும் கனிவு உன்னோடு ஒன்றி இருக்கும்
முறைத்துப் பார்ப்பாய் சிரித்துத் தழுவுவேன்

Thursday, 3 April 2014

அனுபவங்கள் - சொல்லாமல் இருக்க முடியவில்லை

முகநூலில் மனதில் உள்ள அழுக்கையும் ,ஆனந்தத்தையும் கொட்டுமிடமாக இருப்பதால் .
செய்த தவறையும் எழுத அடுத்தவர் பாதுகாப்பாக இருக்க உதவும்
நல்லதையும் எழுத அடுத்தவர் செயல் படுத்தவும் உதவலாம்

#மனசு

உலகில் ஒருவரும் முழுமையாக இருக்கமுடியாது

ஒருவரைப் பார்த்து பேசி பழகி நல்லவர் என்றால்
அதற்காக அடுத்தவர் கெட்டவர் என்ற பொருளாகிவிடாது

உலகில் ஒருவரும் முழுமையாக நல்லவரும் கெட்டவரும் ஆக இருக்கமுடியாது

சமுதாயத்தில் ஒரு அங்கமே நாம் .அதில் அனைத்தும் உண்டு
சுவை மாறுபட்டது
நட்பும் மாறுபட்டது
உறவும் வேறுபட்டது
சாலையில் நடக்க தூசி படவும் செய்யும்
தூசி நாசியில் ஏற தும்மல் நம்மை பாதுகாக்கும்
துணியில் அழுக்கு படிய துவைத்து கட்டுகின்றோம்
நம் மனதை தூய்மை படுத்த இறை நேசம் கொண்டு இறைவனைத் தொழ நம் மனது தூய்மை அடைகின்றது
குடியை வெறு குடிகாரனை வெறுக்காதே
முடிந்தால் அவரையும் நல்வழிப் படுத்த நன்மை வந்து சேரும்

விட்டுக் கொடுக்கும் மனமில்லையெனில் அனைத்தும் விலகிப் போகும்

ஒருவர் போட்டார் ஒரு போடு
அவர் எங்கள் ஊர்

அவர் போட்டது
நேரில் பார்த்து பழகிய பின்பு
ஃ பேஸ்புக் ரிகுஸ்ட் பற்றி சிந்திப்பாராம்

அவருக்கு நான் போட்ட ஒரு போடு கீழ்

நேரில் பார்க்கவில்லை
போனில் பேசியதுண்டு
படத்தில் பார்த்ததுண்டு
முகநூலில் முதல் காட்சி
மனதில் நிற்கும் காட்சி

நேரில் பாராமல்
படத்தில் பார்த்து
ஃ பேஸ்புக்கில் ரிகுஸ்ட் தடை
பிறந்த ஊர் வரும்போது
நேரில் பார்த்து பழகிய பின்பு
ஃ பேஸ்புக் ரிகுஸ்ட் பற்றி
மனதில் நினைவு வர
கலந்து ஆய்வு செய்வோம்
அதுவரை அன்பான வாழ்த்துகள்

காதல் மோகம் வீரத்தை போக்கியது

நாட்டை வெல்ல வேண்டும்
நாட்டின் நிலை அறிய வேண்டும்

மறைமுக ஆய்வு அந்த நாட்டின் நிலை அறிய ஒரு தூதர் அனுப்பப் பட்டார் மன்னரால்
இப்பொழுது நிலமை நமக்கு சாதகமாக இல்லை .

ஒருவர் அம்பை வைத்துக்கொண்டு அழுது கொடிருந்தார் .ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு 'நான் விட்ட அம்பு நான் வைத்த குறியிலிருந்து தவறி விட்டது . என் நாட்டிற்குள் எதிரிகள் புகுந்தால் நான் வைத்த ஒரு அம்பின் குறி கூட தவறக் கூடாது' என்றார்.
சிறுவர்கள் கூட அம்பு விடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தூதர் சொன்னார்.இவைகள் அவர்களது தீரத்தையும் ,வீரத்தையும் காட்டி நிற்கின்றது .அவ்வித நோக்கம் கொண்டவர்களை தோல்வியடையச் செய்வது இயலாது என்றார்.