Followers

Friday, 30 May 2014

ஏற்றம் வருவது கடினம் இறக்கம் வருவது எளிது

உயர இருப்பதால் பாதுகாப்பு அவசிய மாகின்றது
உயர வந்ததால் பாதுகாப்பின் சிறையில் முடக்கப் பட்டாய்

உன்னையும் பாதுகாத்துக் கொள்ள
மற்றவரையும் பாதுகாக்க கீழே வந்தாக வேண்டும்

ஏற்றம் வருவது கடினம்
இறக்கம் வருவது எளிது

மேலே வருவதற்கு பல முயற்சிகள்
கீழே வருவதற்கு ஏறிய படிகளே உதவி செய்யும்

அடுக்கு மாடி கட்டிடத்தின் உயர் தளத்திற்கு வந்து விட்டால்
மலையில் ஏறி மலையின் உச்சிக்கு வந்தது போல் மன மாற்றம்

உயர் தளத்திலிருந்து அனைத்தையும் பார்க்க முடிகின்றது
உய்ரதிலிருப்பவரை கீழே இருப்பவர் யாரும் பார்க்க முடிவதில்லை

No comments:

Post a Comment