மன்னரின் ஆட்சி மிகச் சிறப்பாக இருந்தும் மன்னரின் மனதில் மகிழ்வில்லை.ஞானம் பெற ஞானியை தேடிச் சென்றார் . தம் மனதில் மகிழ்வில்லை அதற்கு நல்வழி சொல்லுங்கள் என ஞானியிடம் விரும்பிக் கேட்டார்
'அதற்கு நான் இல்லை சென்று வாருங்கள் ' என ஞானி சொல்லிவிட்டு அந்த இடத்தை வீட்டு அகன்றார் .
மன்னர் மனதில் விரக்தி வர இவ்வளவு தூரம் வந்து இவருக்கு மரியாதையும் மதிப்பும் கொடுத்து வந்து பார்த்தோம் முறையாக அறிவுரைக் கொடுக்காமல் சென்று விட்டாரே என்ற வருத்தத்தோடு தனது அரண்மனைக்கு திரும்பினார். அவர் மனதில் அது உறுத்திக் கொண்டிருக்க தனது மந்திரியை அழைத்தனுப்பி மன்னர் தன் வருத்தத்தை தெரிவித்தார்.
மந்திரி அதற்கு 'ஞானி சரியாகத்தானே சொன்னார் ' என்று பணிவாகச் சொல்லி ஞானி சொன்ன வாசகத்தில் அடங்கிய உட்பொருளை விளக்கினார் . மன்னர் மகிழ்ந்தார் ,திருந்தினார்,அமைதியானார் ஞானி சொன்னபடியே தனது கடமையையும் வாழ்வையும் தொடர்ந்தார்
'நான்' என்ற மனது இறைவனை மறக்கச் செய்யும்.தற்பெருமையும்,செருக்கும் .அகம்பாவமும் ,அடுத்தவரை மதியா குணத்தையும் பெற்று நிற்கும் .இத்தகைய குணம் நம்மை விட்டகல 'அதற்கு நான் இல்லை' அனைத்துக்கும் இறைவனின் நாட்டப் படியே நடக்கும் என்ற மனம் வேண்டும் என்பதையே அந்த ஞானி சூசகமாக சொல்லிச் சென்றதின் விளக்கமாக அமைந்துள்ளது
தயவு செய்து கீழ் உள்ளதனை சொடுக்கி இரண்டு காணொளியைப் பாருங்கள்
ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா!
ஞானத்தின் திறவுகோல் நாயகம்...

பெருமையை கைவிட வேண்டும். நாம் பயம் மறைய, ஞானம் பெற வேண்டும். நாம் மற்றவர்களின் இதயத்தை புரிந்து கொள்ள முயற்சி வேண்டும். தகுதி உருவாக, அன்பு வளர வேண்டும்.
ReplyDeleteஞானி சொன்னது அருமை... உண்மை...
ReplyDeleteஇணைப்புகளுக்கு நன்றி...