அழுகை இயற்கையாய் கொட்டும் மழை
மனதை இயல்பாய் வைத்திருக்க இமைகளில் வழியும் நீர்
கண்களில் ஊரும் நீர் ஒரு கேலன் நீருள் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றது
கண்களை பாதுகாப்பது விழிகளில் ஊரும் நீர்
மனதின் பாரத்தை,சோகத்தை நீக்க அழுகை உதவுகிறது
அழுகை இயற்கையாக வர மனம் அமைதி பெறுகிறது
அழுகை ஒப்பாரியாகவும் ,ஓலமாகவும் வர அழுகை தன் இயல்பை இழக்கின்றது
மனிதனைத் தவிர மற்ற இனங்கள் தன் உணர்சிகளை கட்டுப்படுத்துவதில்லை
மனிதன் மட்டும் அனைத்தையும் கட்டுபடுத்த அவனுக்கு பல வியாதிகள் வருகின்றது
மனிதன் அனைத்து உபாதைகளையும் கட்டுபடுதுகின்றான்
அழுகையை அடக்குகின்றான்
சிரிப்பை முடக்குகின்றான்
மகிழ்வை காட்டுவதிலும் நேரம் பார்க்கின்றான்
சிறுநீர் வருவதையும் நிறுத்தி வைக்கின்றான்
இறுதியில் வரக் கூடாத வியாதி வந்து வேதனைப் படுகிறான்
உணர்ச்சி இறைவன் தந்த அருள்
மகிழ்வான உணர்ச்சியின் காரணமாக வருவது ஆனந்தக் கண்ணீர்
அடக்க முடியாத சிரிப்பால் வரும் ஆனந்தக் கண்ணீர் ஆரோக்கியமானது
துயரத்தால் வரும் அழுகை மனதை எளிமையாக்குகிறது
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
–குர்ஆன் : 2:29.
இறைவன் படைப்பில் அனைத்தும் உயர்வானதாக இருப்பினும் மனித படைப்பு மேன்மையானதாக உள்ளது. மனிதனது தேவைக்காகவே மற்றவைகள் படைக்கப்பட்டன.
3 பவுண்ட் மனித மூளையின் ஆற்றலில்லாமல் எதுவும் முறையாக இயங்காது. 12,000 மில்லியன் செல்களை உள்ளடக்கிய இவைகளே உணர்வு, மகிழ்வு, சிரிப்பு மற்றும் பல உணர்சிகளால் உந்தப்பட்டு கண்ணீர் மற்றும் அனைத்துக்கும் தொடர்பினை உண்டாக்கி மனிதனை உந்தச் செய்கின்றது. மனித மூளை முறையாக செயல்படுத்தப்படவும், அறிவு ஆற்றலை பெருக்கிக் கொள்ளவும் இந்த நரம்பு மண்டலங்கள் உதவி செய்கின்றன.
No comments:
Post a Comment