நடக்குமென்று நினைத்தது நடக்கவில்லை
நம்பிக்கை வைத்து செயல்படவில்ல
நம்பிக்கை என்மீதுமில்லை
நம்பிக்கை இறைவன் மீதுமில்லை
நடக்காமல் போனதும் நன்மையானது
நடக்காததற்கு நானே காரணம் என மனம் சொன்னது
நடந்தாலும் நல்லது ,நடக்காவிட்டாலும் நல்லது
நடப்பது நடக்காது அனைத்தையும் இறைவன் நன்மையாக்கினான்
இறைவன் மீது நம்பிக்கையை வைக்காமல் போனது பாவமானது
இறைவன் மீது வைத்த நம்பிக்கை உந்துதல் சக்தியை தந்து உயர்வானது
பாசம் பரவலானது செயல் விசாலமானது
பாசத்துடன் செய்வது அனைத்தும் இறைவனுக்கானது
நாயகம் கொண்ட நம்பிக்கை இறைவன்மீது
Tuesday, 30 July 2013
தீவிரவாத செயலை திரித்து பேசும் நிலை
காஸ்மீரில் அதிகமாக வசிக்கும் மக்கள் முஸ்லிம்கள் அவர்கள் உருது பேசுகின்றனர். நம் நேரு அவர்களும் காஸ்மீர் வழியில் வந்தவர்தான். அங்கு நடக்கும் ஒரு தீவிரவாத செயலிலும் ஈடுபடும் ஒரு தீவிரவாதியும் முஸ்லிமாக இருக்கலாம் அதற்கு பலியாவதும் முஸ்லிம்தான். தீவிரவாதத்தில் ஈடுபடுவோர் எல்லா மதத்திலும் உள்ளனர் . ஆனால் சில தீவரவாதி நடத்தும் செயலை இஸ்லாமிய தீவிரவாதியால் நடத்தப்பட்டது என்று பெரிதுபடுத்தி எழுதியும் பேசியும் வருவோர்தான் உண்மையான தீவிரவாத்தினை ஊக்குவித்து அதில் ஆதாயம் தேடுபவராக உள்ளனர் . ஊடகங்களும் அதற்க்கு தூபம் போடுகின்றனர்
இஸ்லாம் தீவிரவாத்தினை ஆதரிக்கவில்லை .
ஜிஹாத் என்பது மனதினை கட்டுப்படுத்துவதுதான்.
உலகில் சமாதானத்தையும் அமைதியையும் நீதியையும். நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியே உண்மையான ஜிஹாத்
Sunday, 28 July 2013
அழுக்கான பணம்
நம் உடலில் ஏற்படும் சிறிய காயம் மீது நமக்கு கவனம் வருவதில்லை
நாம் விழுந்த இடத்தில நாம் தேடுவது பையிலிருந்து உதிர்ந்து ஓடிய காசுகளை
காசுகள்(பணத் தாள்கள் ) அழுக்கானாலும் துடைத்து வைத்துக் கொள்கிறோம்
இது தனிச்சையாக அனிச்சை செயலாக நடைபெறும் செயல்.
(உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் ஏற்படுகின்றன. )
அறிந்து தவறான, பாவமான முறையில் சேர்க்கப்படும் பணம் அழுக்கானதுதான்.
செயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.
துயரம் குடலில் அமிலத்தை அதிகமாக்குகிறது
அதிகமான அமிலம் குடலை பாதிக்கிறது
குடலின் பாதிப்பு உடலைப் பாதிக்கிறது
துயரத்தின் அளவைப் பொறுத்து உடலோடு மனதின் பாதிப்பும் அதிகமாகிறது
உப்பு அளவோடு சேர உணவு சுவைக்கிறது
உப்பு அதிகமாக உணவு கைக்கிறது
உப்புக்கு ஒரு சுவை தரவும் உதவுகிறது
உப்பு அதிகமாக சுவையும் கெடுகிறது
உப்பின் தண்மை மாறுவதில்லை
துயரத்தின் தண்மையும் மாறுவதில்லை
துயரத்தை மையப்படுத்தும் தன்மை துவளச் செய்கிறது

ஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கூகுல்+ அல்லது சமூக வலைதளங்களில்

அதிகமாக நண்பர்கள் சேர்ப்பது தவறு இல்லை .
சில செய்தித்தாள்கள் தவறாக செய்தி கொடுப்பதுபோல் நாமும் தவறாக செய்திகளை கொடுப்பதுதான் தவறு.
பலதரப்பட்ட மக்களை பார்க்கிறோம்
பலதரப்பட்ட மக்களோடு தொடர்பு உண்டாகின்றது
உலகமே நம் கையில் இருப்பது போல் இருக்கின்றது
மனிதநேயம் உண்டாக்க ஒரு வாய்ப்பு உண்டாகின்றது

Saturday, 27 July 2013
புதிய பொருள். . தேவைதான ! ஆனால் பணம் !
"நல்ல பொருள் உபயோகமாக இருக்கும் அதனை வாங்குங்கள்" என்று மனைவி சொல்ல
"பெருநாளைக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி விட்டாய். அதில் அதிகமாக செலவு ஆகிவிட்டது மேற் கொண்டு வாங்க பணமில்லை " நான் விளக்க .
"ஆமா நான் விரும்பி கேட்டாத்தான் பணம் இருக்காது" என்று மனைவி கோபம் அடைய .
"சரி என்ன செய்வது பணத்திற்கு"
"கடன் வாங்கியாவது வாங்குங்கள்" .
ஒ.கே . வாங்கிடுவோம்
பொருள் வாங்க பணம் போதாது என்பது நம் பெண்களுக்கு தெரிந்தால் நல்லது.
குடும்பம் நலமாக ஒற்றுமையாக இருக்க சில நேரங்களில் கடன் வாங்கியும் வாங்க வேண்டிய கட்டாயம் .
எந்திரங்கள் கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் எந்திரங்கலாக மாருவது இயற்கை,
மனையிவின் முகம் மலர்வதில் பார்ப்பதில் தனி சுகம் கிடைக்கும்.
பணம் வரும் போகும் நமக்கு மனைவியின் மகிழ்வுதான் முக்கியம் .
அழகாய் இன்புற்று வாழ வழிவகுக்கும் .
வல்லமைப்படைத்த இல்லாள் இல்லை என்றால் ஏது இல்லம்!
எல்லாவற்றையும் தந்து அரவணைத்து போகும் அவளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் கொடுக்க வேண்டியதனை கொடுத்து விட வேண்டியது மகிழ்வுதான்.

குடும்பம் என்றால் ஒரு அவியல்தான் .
குடும்பம் என்றால் ஒரு அவியல்தான் . அதில் காரம், புளிப்பு, இனிப்பு அனைத்தும் கொண்டதுதான் .அன்பு, பாசம், இறக்கம், கனிவு எல்லாம் உண்டு.விட்டுக் கொடுத்தால் கெட்டுப்போக வழி இல்லை .
வெளி நாடுகளில் திருமணம் ஆன பின்பு தனி குடுத்தனம் அமைத்து விடுமுறை நாட்களில் ஒன்றாக இருந்து மகிழ்வர்!
குடும்ப கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு அதில் சில. .
கருத்து முரண்பாடு ஏற்படுவது.
உருவாகும் பிரச்சினைகளைப் பொருட்படுத்துவது.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்
வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.இல்லாத மனைவி .
குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரிக்காமலும் அன்புடனும் இல்லாமல் இருப்பது .
கூட்டு குடும்பத்தில் குழந்தைகள் போடும் சண்டையில் இவர்கள் தலையிட்டு பிரச்சனையிணை அதிகமாக்கி அதனால் ஏற்படும் விளைவு .
பணப் பிரச்சினைகளைப் பெரிது படுத்தும் மனைவி
பொருள் வேண்டியும் மற்ற பிற காரணங்கலுக்காகவும் பொய் பேசியே வாழ்கையினை ஓட்ட நினைப்பது
பெண்வீட்டாரிடத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சனை
எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பது.
எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்வது
மனைவியை சந்தேகிக்கும் கணவன்
கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழும் மனைவி
திருமணத்தின் மிகமுக்கிய அம்சம் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் வாழ்வது தான்.
மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன் நினைப்பது. அதனை பொருட்படுத்தாத மனைவி.
வேறொரு குடும்பம் வைத்திருப்பதும் மனைவியை விட்டுப் பிரிந்து இருப்பதும். தனி குடும்பம் நாடி குழப்பம் உண்டாக்குவது .
.மனைவின் ஆசையினை அறியாமல் இருப்பது அல்லது கணவனின் ஆசையினை அலட்சியம் செய்வது.
இல்லற வாழ்வில் நாட்டம் இன்றி தூங்கி வழிவது .
இன்னும் எதனையோ !

Wednesday, 24 July 2013
அம்மா! நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்
அம்மா உனை நினையாத நாள் உண்டோ !
அம்மா உனக்காக வேண்டாத நாள் உண்டோ!
அம்மா நீ இல்லாமல் நான் ஏது ?
அம்மா நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்
அம்மா நான் பாசம் அறிய வைத்தவள் நீ தானே
அம்மா நான் தவறு செய்தாலும் அன்போடு அறிய வைத்து திருத்தியவள் நீ தானே
அம்மா உன் மடியில் சுவனம் உள்ளது யென நாயகம் சொல்லியதை உணர்வால் அறிந்தேன்
அம்மா நீ இறைவன் அருளால் சுவனம் சென்று விட்டாய்
அம்மா நான் சுவனத்தை தேடுகிறேன் உனக்கு வழி காட்டிய இறைவன் வழியிலேயே

Monday, 22 July 2013
நாம் யார் என்பதை அறிவோம்!
வந்ததே வந்தாய் பார்த்து படித்து எழுது
எழுதுவது உன்னையும் உயர்த்தட்டும்
எழுதியது என்னையும் உயர்த்தட்டும்
எழுதிதை மற்றவர்களும் பார்க்கட்டும்
நீ யார் என்பதை அறிய உன் கருத்தைச் சொல்
நீ யார் என்பதை அறிய உன் கருத்தே காட்டிவிடும்
நீ எழுதியது உன் உள்மனதை காட்டிவிடும்
நீ எழுதியது உன்னை உருவாக்கும்
நீ எழுதியது என்னையும் உருவாக்க வழி வகுக்கட்டும்
உன் நோக்கம் உன் பக்கம் உன்னை யாரும் பார்க்க உருவாக்கும்
உன் நோக்கமும் என் நோக்கமும் நம்மை நாமே உயர்த்திக் கொள்ள
உன் வழியும் என் வழியும் வெவ்வாராக இருக்கலாம்
உன் வழிக்கும் என் வழிக்கும் நாமே பாதகமாக இருக்கக் கூடாது
உன் வழியும் என் வழியும் மக்களுக்கு சேவை செய்யும் வழியாக அமைய வேண்டும்
நாம் விரும்பி நாம் பிறக்கவில்லை
நாம் வந்தது நம் தாய் தந்தையின் காதலின் விளைவு
நாம் வந்த வழி நாம் அறிவோம்
நாம் போகும் வழியும் நாம் அறிவோம்
நாம் போகும் இடத்திற்கு நாம் நன்மையை எடுத்துச் செல்வோம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பிணக்கு விவாகரத்தின் முடிவா!
கணவன் மனைவிக்குள் அளவிலா அன்பும் அறியமுடிய, அறியமுடியா பிணக்கும் வருவதுண்டு .
கணவன் மனைவிக்குள் இருக்கும் அளவிலா அன்பினை மறைத்து வாழ்வார்.
கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சனைகளை, பிணக்குகளை மட்டும் தங்கள் உறவினர் நண்பர்களிடம் சொல்வதை அல்லது காட்டிக் கொள்வதை தயங்குவதில்லை .
கணவன் மனைவிக்குள் வந்துள்ள பிரச்சனைகளை, பிணக்குகளை முறையாக நன்னோக்கம் கொண்டு தீர்த்து வைக்க முயல்பவர்கள் குறைவு . சமாதானம் செய்ய வருபவர்கள் உணர்ச்சி வசப் படுபவர்களாகவும் ஒரு பக்கம் சார்ந்தவர்களாகவும் மாறி விடுகிறார்கள் .
கணவன் அல்லது மனைவி தங்களுக்குள் இருக்கும் உயர்வை மட்டும் நோக்காமல் தங்களிடம் உள்ள குறைகளையும் அறிய வேண்டும் . குறை அறிந்தால்தான் திருத்திக் கொள்ள முடியும். குறை உடையவர்களின் குணமறிந்து வாழ்கையை தொடர முடியும் .நல்லதும்,கெட்டதும் சேர்ந்தும் ஒரு பொருளுக்கு இருப்பதுபோல் ஒரு மானிடருக்கும் உண்டு என்பதனை நாம் மறக்கிறோம் . ஒரு பொருள் பழுதானால் சீர் படுத்த நாம் எடுக்கும் முயற்சியை மானிடரின் குணத்திற்கு வரும் அழுக்குகளை சீர் படுத்த நாம் முயல்வதில்லை .
அவசர முயற்சி ஆபத்தில் முடியும் . அவசர முடிவும் விவாகரத்தில் முடியும் .
கணவனும் மனைவியும் ஒரு உடன்படிக்கையின் வாழ்வைத் தொடங்கினாலும் தொடங்கும் போது யாரும் உடன்படிக்கை முறிவைப் பற்றி நினைப்பதில்லை . சேர்ந்து இணைந்து வாழவே இல்லறத்தினை தொடக்கி இறக்கும் வரை பொறுமை, அன்பு ,காதல்,பாசம் இவைகளால் பிணைக்கப் படுகிறார்கள் . இடையூருகளை தம்பதிகள் எதிர் கொள்ளும் ஆற்றலும் அறிவும் பெற்றிருப்பது அவசியம். மற்றவர்களால் வரும் இடையூருகள் அவர்களை பிரித்து விடாமல் மற்றவர்கள் அவர்களை இணைந்து வாழ உறுதுணையாக இருப்பது மற்றவர்களின் கடமை
(மனைவிகளாகிய) அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை வெறுத்த போதிலும் (பொறுமையாக இருப்பீராக! ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக்கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை வைத்திடலாம். (அல்குர்ஆன் 4:19)

Friday, 19 July 2013
விதி ஒன்றிருக்க அதனை யாரால் மாற்ற முடியும் !
காட்டுக்கு போனான் குருவியைச் சுட
மரத்தின் உச்சி மீது அமர்ந்திருந்த
குருவியைச் சுட குறி வைத்தான்
விட்ட குறி தவறாகி குருவி தப்பித்து பறந்தது .
வேடன் விட்ட அம்பு மேல் சென்று அவன் தலையில் விழ
அம்பு விட்டவன் மாய்ந்தான் ,
அவ்வழி வந்த நரி மாண்ட அவனை தின்ன நினைக்கு முன் ஒரு சபலம்!
மாண்டவன் கிடப்பான் அதற்குள் அவன் கொணர்ந்த வில்லில் உள்ள நானை தின்போம்
என்ற முடிவுக்கு வந்தது .
நரி வில்லின் நானைக் கடிக்க நான் அறுந்து வில்லின் விரிந்த முனை நரியின் பொட்டைத் தாக்க நரி செத்தது .
குருவி தப்பித்தது
வேடன் இறந்தான்
நரி செத்தது .
இதுதான் விதி
விதியை ஆய்வு செய்வோர் இரு கால்களையும் தூக்கி நிற்பவருக்கு சமமாவோர்
விதியை நம்புவது இஸ்லாமிய நம்பிக்கையில் முக்கியமான ஒரு அம்சம்

வழிவகுத்தது வளைகுடா நாடுகளின் திறப்பு !
ஊரெல்லாம் ஊர் சுற்றும் மணமாக வாலிபர்கள்
வீடெல்லாம் வயது வந்த மணமாகா கன்னிப் பெண்கள்
பெண்ணுக்கு மணமுடிக்க பொருத்தமற்ற வாலிபன்
பெண்ணுக்கு மணமுடிக்க வாடும் பெற்றோர்
வாலிபர்கள் வளம் பெற வழிகாட்டியது வளைகுடா நாடுகள்
வாலிபர்கள் படையாக புறப்பட்டனர் வளைகுடா நாடுகள் நோக்கி
வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வாலிபனுக்கு மரியாதை வந்தது
வளைகுடா நாடுகளிலிருந்து வந்த வாலிபனுக்கு பெண்ணை மணமுடிக்க விரும்பினர் பெற்றோர்
தேங்கிக் கிடந்த மணமாகாத பெண்கள் மணமுடிக்கப் பட்டனர்
ஊர் சுற்றும் மணமாக வாலிபர்கள் கூட்டம் குறைந்துப் போனது
வளைகுடா நாடுகளிருந்து விசாவோடு வந்த வாலிபனுக்கே பெண் தரும் காலம் வந்தது
வளைகுடா நாடுகளில் பொருள் ஈட்டியோர் தான் பட்ட சிரமத்தினை தம் பிள்ளைகள் பெற வேண்டாமென பிள்ளைகளை படிக்க வைத்து சிறப்பாக்கினர்

Thursday, 18 July 2013
இருக்குமிடம் மனதை மாற்றியது
அவன் சிரித்தால் புகையின் நாற்றங்கள்
அவள் அழுதால் வாடிய மலர்கள்
அவன் அழுதால் கசங்கிய மலர்கள்
அவள் வந்தால் நன்னீர் நறுமணங்கள்
அவன் வந்தால் டாச்மார்கின் வாசனை
நட்சத்திரத்தை பார்த்த கண்கள் மனம் மகிழ
நட்சத்திர விடுதியை பார்த்த கண்கள் மனம் கனத்தது
கிராமப் புற சேற்றுக் காடுகளில் மண்வாசனை மணக்கும் மழைத் தூரலால்
சென்னைப் புற வாசலின் சாக்கடையில் நாற்றம் வீசும் மழைத் தூரலால்
Wednesday, 17 July 2013
உன் சிரிப்பு இசையாக வருகிறது
நீ சிரித்தால் நான் மகிழ்கிறேன்
நான் சிரித்தால் நீ குதிக்கிறாய்
நீ அழுதால் நான் துடிக்கிறேன்
நான் அழுதால் நீ வியக்கிறாய்
உன் சிரிப்பு இசையாக வருகிறது
நான் சிரிப்பது உனக்கு வேடிக்கையாக இருக்கிறது
நான் சிரித்தால் நீ மறப்பாய்
நீ சிரித்தால் மனதோடு உறைகிறாய்
உன் உள்ளத்தில் ஒளிவு மறைவில்லை
உன்னை சிரிக்க வைத்து மகிழ நான் நடிக்கிறேன்
நீ ஓடி உலகம் பாராமல் உயர்ந்து நிற்கிறாய்
நான் ஓடி உலகம் பார்த்து தாழ்ந்து நிற்கிறேன்
உன் பருவம் உன்னை உயர்வாக்கியது
என் பருவம் என்னை தாழ்வாக்கியது
நீ என் பருவம் வர உன் நிலையும் என் நிலையாகும்
நீ என் பருவம் வந்த பின் உனக்கென உன் பருவத்தில் ஒரு குழந்தை உனக்கும் வரும்
என்நிலையில் நான் உன்னோடு மகிழ்ந்த நிலையை நீயும் பெற்று மகிழ்வாய்.

Monday, 15 July 2013
உன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தில் உனக்கு கிடைக்கும்.
செல்வம், தோற்றம், குழந்தைகள், வீடு, மற்றும் திறமைகள் அனைத்தும் நாம் பெற்றிருந்தும் கவலை ஏன் மனதில் ஆட்டிப்படைகின்றது. பேராசை பெற்ற மனம் இன்னும் அதிகமாக அடைய முயலுகின்றது . அதிகம் பெற முயல்வது நன்மையை நாடி இருப்பின் தவறில்லை. ஆனால் அது அடுத்தவருடன் கணக்குப்போட்டு நமக்குள் ஓர் சோகம் வந்து ஒட்டிக்கொள்வதின் காரணமென்ன. அது மனதில் நிறைவு வராமல் வாட்டிப் படைப்பதுதான். நம்மையே நினைத்து காலத்தை ஒட்டுகின்றோம் நம்மை விட தாழ்ந்தவர் கோடானுகோடி இருப்பதனை நினைவிற்கு கொண்டு வருவதில்லை.
" நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக"
(குர்ஆன் 7:144)
கவலை ,துயரம் இல்லாதவர் யார் !
துன்பம் வர துயலாதே !
துன்பத்தையும் நன்மையாக்கும் ஆற்றல் உன் மனதில் உள்ளது .
துயரமும் நன்மையைத் தரும் ஆற்றல் உள்ளது .அது உன்னை இறைவன் பக்கம் இழுக்கும். துன்பம் துவள இறைவனை அணுகும்போது இறைவனோடு ஒன்றுபடுதல் முழுமையாக இருக்கும் .
நீ விரும்பாத மனைவி உனக்கு கிடைத்து விட்டால் அவளை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை .அதற்கு மாறாக அன்பை கொடுத்து அவளை உன் மனதோடு ஒன்ற வழியை நாடு! .
நம் குழ்ந்தை தவறு செய்தால் நாம் அவனை ஒடுக்குவோமா! அல்லது ஒதுக்கிவிடுவோமா! அவனிடத்து உள்ள பாசம் போய் விடுமா ? நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதால் இறைவனை குறை சொல்வதுபோல் உள்ளது.

நுண்ணுணர்வின் மாபெரும் சக்தி
கனவும் நினைவும் ஒன்றுபட முடியுமா!
ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் நிகழ்வுகளாக அமைய வாய்ப்பும் உண்டு!
நீங்கள் எந்த உடல் தொடர்பு அல்லது கருவிகளின் பயன்பாடு இல்லாமல் மற்றொரு நபருக்கு தகவலை அனுப்பும் திறன் உங்களிடத்து ஒன்றி இருக்கும் சக்தி .இரண்டு உள்ளங்களில் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக ஏக்கமா! ஒடுக்கமா! ஒதுக்கமா! ஏமாற்றமா ! எதுவும் நடக்கும்.'உன்னை நினைத்தேன் நீ வந்தாய் ஆமாம் நானும் உன்னையே நினைத்தேன்'. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வு இது ஒரு மின்சார தொடர்பு . மின்னலாக வந்து மறையும். மன ஓட்டத்தில் புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை செயல்படுத்துதல் நிலை வர இது தோன்றலாம்

Thursday, 11 July 2013
மக்கா ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை
மக்காவின் தொழுகை நேரம் மற்றும் ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை

குர்ஆன் - ஓதுவதால் அடையும் நன்மைகள், குர்ஆன் தலைப்புகள், மற்றும் தப்ஸீர் ,விளக்கங்கள்
இவைகளை ஆங்கிலத்தில் அறிய இங்கு Quran சொடுக்குங்கள்
இவைகளை தமிழில் அறிய இங்கு.தமிழில் குர்ஆன் சொடுக்குங்கள்

Wednesday, 10 July 2013
நன்மையைத் தேடுவதில் ஆரோக்கியமான போட்டி தேவை.
அவர் வீடு கட்டிவிட்டார் அதை விட சிறப்பான வீடு நாமும் கட்ட வேண்டும் .
அவர் கார் வாங்கி விட்டார் அதை விட உயர்வான கார் நாமும் வாங்க வேண்டும் .
அவர் பணக்காரர் ஆகி விட்டார் அவரை விட நாம் பெரிய பணக்காரர் ஆக வேண்டும் .
இம்மாதிரியான போட்டி மனப்பான்மை பொறாமையின் விளைவு .
பொறாமை என்பது ஒருவித மனநோய் என்றுதான் கூற வேண்டும். தான் பெறாத ஒன்றை பிறர் பெறும் போது ஏற்படும் ஒருவகை உணர்வே பொறாமை உணர்வாகும். சிலர் தாம் பெற்றிருப்பதைத் தனக்குக் கீழே உள்ளவர்கள் பெறும் போதும் பொறாமை கொள்வர்.
அவர் வீடு கட்டினாலும் அவர் மற்றவர்களுக்கும் வீடு கட்ட உதவுகிறார் . நாமும் அம்மாதிரி மற்றவர்களுக்கு உதவ வேண்டும்
அவர் கார் வாங்கினாலும் அவர் தனது காரை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுகிறார் . நாமும் அம்மாதிரி வாகனம் வாங்கி மற்றவர்களுக்கு உதவ வேண்டும்
அவர் பணக்காரர் ஆனாலும் அவரது பணம் பலருக்கு உதவுகிறது அதனால் அவரை அனைவரும் வாழ்த்துகிறார்கள் .அம்மாதிரி நாமும் வர வேண்டும் .முடிந்தால் அவரைவிட சிறப்பாக மக்களுக்கு உதவ வேண்டும் .
இம்மாதிரியான நல்ல நோக்கத்தோடு போட்டி போடுவது நமக்கும் மற்றவருக்கும் பலன் தரும் .

Tuesday, 9 July 2013
பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார் !
பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார்
பிறை வடிவ புருவம் பிறைபோல் இருப்பதனைப் பார்க்க முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்
நம்மில் ஒளிந்திருக்கும் அற்புதத்தினை அறிய இறைவனை அறியும் வழியைப்
பார்
வந்த வழி தெரிந்தால் போகும் வழி அறியலாம்
ஞானம் கிடைக்க குர்ஆனை பொருள் அறிந்து ஓதுதல் உதவும்.
ஞானம் கிடைக்க நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம்
இருக்கும் இடம் உயர்வாய் இருந்தால் போகும் இடமும் உயர்வாய் அமையும்
இருக்கும் இடம் இழிவாய் போனால் போகும் இடமும் இழிவாய் போகும்
இறைவனை அறிந்தும் அவன் மகிமையை புரிந்தும் அவனை தொழாமல் இருப்பது நன்றி கெட்ட செயலாகும்
நன்றி பாராட்டாதவர் நன்றி பாராட்டப்படுவதற்கு உரியவராக மாட்டார்
Monday, 8 July 2013
வாசிப்பில் காட்டிய வேகம் புரிதலில் குறைவாகப் போனது
வேகமாக வாசிப்பேன்
வேகமாக வாசித்தது மனதில் நிற்கவில்லை
வேகமாக உண்பேன்
வேகமாக உண்டது உடலில் ஒட்டவில்லை
வேகமாக வாசித்ததும் வாசிப்பதில் இருந்த வேட்கையால் வந்தது
வேகமாக உண்டதும் உண்பதில் உள்ள ஆசையால் வந்தது
வேகத்தில் விவேகமில்லாது போனது
வேகத்தால் விளைந்த செயல் வாழ்க்கையை வேகமாக முடித்தது
குறைப் பிரசவமாக வேகமாக வெளியே கொண்டு வந்தனர்
குறைப் பிரசவத்தில் வந்ததால் நிறையவே கவணித்து வளர்த்தனர்
வளர்ச்சியின் வேகம் வேகமாக இருந்தது ஊட்டச் சத்து அதிகமானதால்
வளர்ச்சியின் வேகம் வாழ்வின் வேகத்திலும் முடிந்து வாழ்க்கை அறியாமல் போனது

Sunday, 7 July 2013
ஆணை அறிய! - பெண்ணை புரிய!
பொது சமன்பாடுகள் & புள்ளியியல்
ஒரு பெண் கணவன் வரும் வரை எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறாள்
ஒரு மனிதன் மனைவி கிடைத்த பின்பு எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறான்
ஒரு வெற்றிகரமான மனிதன் தன் மனைவி செலவிடும் அளவுக்கு மேல் அதிகமாக பணத்தை சேர்த்தால் அவன் திறமைசாலி
ஒரு மகிழ்வான பெண் தன் கணவன் தன் செலவிற்கு அதிகமாக சேர்த்தால் அவள் அதிர்ஷ்டக்காரி
======================================================
நீண்ட ஆயுள்
ஒரு ஆண் இருபது ரூபாய் கொடுத்து பத்து தேவையான பொருளை வாங்குவான்
ஒரு பெண் பத்து ரூபாய் கொடுத்து இருபது தேவையற்ற பொருளை வாங்குவாள்
திருமணமான மனிதன் மணமாகாதவனைக் காட்டிலும் நெடுநாள் வாழ்வான்
திருமணமான மனிதன் நெடுநாள் வாழ விரும்புவதில்லை
திருமணமாகாதவன் நெடுநாள் வாழ நீண்ட ஆயூளை விரும்புவான்
திருமண பெண் வாழும் ஆண்டுகள் குறைவு ஆனால் வாழ விரும்புவாள்
==========================================================
சந்தோஷம்
ஒரு மனிதனோடு மகிழ்வாக வாழ அவனைப் புரிந்துக் கொண்டு சிறிது நேசம் கொண்டால் போதும்'
ஒரு பெண்ணோடு மகிழ்வாக வாழ அதிகமாக நேசம் கொண்டு சிறிது புரிந்துக் கொண்டால் போதும்
=============================================

Saturday, 6 July 2013
தாய் வயிற்றிலேயே வைத்திருக்க முடியாது .உருவான குழந்தையை!
தாய் வயிற்றிலேயே வைத்திருக்க முடியாது .உருவான குழந்தையை
காதலையும் இதயத்திலேயே வைத்திருக்க முடியாது கனிவான காதலை
தாய்க்கு இடுப்பு வலி வரும்
காதலிக்கு இதய வலி வரும்
உருவான குழந்தை பிறந்துதான் ஆக வேண்டும்
கனிவான காதல் கல்யாணத்தில் முடிந்தாக வேண்டும்
ஜாதியை ஒழிக்க கலப்பு திருமணமென்பது
வேடிக்கையான கண்டுபிடிப்பு
காரணம் வைத்து வருவதல்ல காதல்
காதல் கொண்டவர் நேசத்தை வைத்து காதல் வசப்பட்டார்
காதல் காரண காரியத்தை வைத்து வருவதில்லை

Friday, 5 July 2013
மலரை பறிக்க முள்ளும் குத்தி குருதியும் வருவதுண்டு
சிந்தனை மாறுபட்டது
படிப்பு அறிவைத் தரும்
அனுபவம் செயலை சீர் படுத்தும்
படிப்பால் வந்த அறிவும்
அனுபவத்தால் வந்த முதுமையும் சிறப்பு தரும்
முதுமை வந்து சேர ஞானம் வர வாழ்வு சிறக்கும்
முதுமையில் இளமையில் தொட்டதை விட்டதை நினைக்க புலம்பல் வரும்.
முதுமையின் புலம்பலை இளமை ஏற்பதில்லை
இளமையின் தடுமாற்றத்தை முதுமை பரிவோடு பார்க்கிறது

Thursday, 4 July 2013
இயல்பாய் வந்த காதல் எந்த காற்றிலும் உடையாத சவுக்கை மரமாய் ஆடி நிற்கும்
காதலில் தோற்றால் தற்கொலை மடமை
காதலில் தோற்றாலும் சேவை செய்து வாழ்வது உயர்வு
உயிரை உன்னால் உண்டாக்க முடியாது அதனால்
உயிரை அழிக்க உனக்கு உரிமை இல்லை
தற்கொலை செய்தால் காதல் வாழ்ந்து விடாது
தற்கொலை செய்வதற்கு வழிகாட்டியாக யாரும் இருந்து விடக் கூடாது
தற்கொலை செய்பவனுக்கு சுவனம் கிடைக்காது
தற்கொலைக்கு தற்கொலை செய்
தற்கொலையை ஆதரிப்போர் தவறு செய்ய தூண்டுவோர்

யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது?
மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மணமகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.
இப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான கதை ஒளிந்துள்ளது. திருமணம் என்பது பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு!
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்
கல்யாணத்திற்கு முன் பரிசம் (நிட்சயதார்த்தம் ) என்ற தேவையற்ற ஒன்றுக்கு பல்லாயிரம் செலவு செய்து விருந்து கொடுப்பார்கள் .ஆனால் அவசியமான வலிமா விருந்து கொடுக்கும் பழக்கம் மறைந்து போனது
இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும் பேசுவார்கள் .
"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".
-திருக்குர்ஆன் 24:23
Wednesday, 3 July 2013
I Like . you Like .
I Like . you Like .
நான் விரும்புகிறேன்
நீங்கள் விரும்புகிறீர்கள்
அனைத்து காரியங்களுக்கும் எதிர் வினையுண்டு
அனைத்தையும் அணைத்துப் போனால் உயர்வுண்டு
அணைத்துமே மகிழ்வை விரும்புகின்றன
அதில் மனிதன் விதி விலக்கல்ல
இறைவனின் படைப்பில் அனைத்துமே உயர்வானது
இறைவன் விரும்பினான் அவன் படைத்தான்
இறைவன் அன்பானவன்
இறைவன் அன்பானவர்களை நேசிக்கிறான்
காதல் அன்பால் உருவானது
காதல் நேசத்தின் அடித்தளம்
நேசம் இல்லையெனில் காதல் உருவாகுமோ
நேசம் இல்லாமல் இருப்பது இறைவனுக்கு விருப்பமானதல்ல
இறைவனை நேசி
இனிய வாழ்க்கை பெறுவாய்

ஆக்கலும் அழித்தலும்
ஆக்கல் கடினம். அழித்தல் எளிது
ஆரம்பிப்பது எளிது தொடர்வது கடினம்
வாழ்நாள் சிறிது
வளர்கலை பெரிது
நாளாகும் நட்பை வளர்க்க
நிமிடம் போதும் நறுக்க
திருமணம் வாழ்க்கையின் ஒரு பகுதி
திருமண வாழ்க்கை பெறும் பகுதியை ஆக்ரமிக்கும்
திருமண வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் வந்து போகும்
திருமண வாழ்க்கையில் காதல் ஊடுருவி பரம்பரையை வளர்த்துவிடும்
பரம்பரை வளர பாசம் மிகைத்து நிற்கும்
பாசம் வளர வாழ்வில் பிடிப்பு மிகைக்கும்
ஆக்ரமித்த பகுதியில்தான் வாழ்வே நிறைவடையும்
ஆக்ரமித்த பகுதியில்தான் வாழ்வை அறிந்து கொள்ள முடியும்

Tuesday, 2 July 2013
குறை காணும் மனிதர்கள் நிறைவை நாடி நகர்வதில்லை
அடுத்தவன் முன்னேற்றத்தில் இருக்கிறான்
அடுத்தவன் என் முன்னேற்றத்தை தடை செய்கிறான்
அரசு பதவி முன்னேற்றத்தில் உள்ளவனுக்கே கொடுக்கப் படுகிறது
அரசு பதவி எங்களுக்கு கொடுக்கப்படுவதை தடை செய்கிறார்கள் .
ஒரு சமூகம் தகுதியைப் பெற்று கூச்சல் போடாமல் முன்னேறிக் கொண்டே இருக்கிறது
நாம் தகுதியை அடைய முயற்சிக்கவில்லை .
கிடைக்கும் வாய்ப்புகளையும் அரசு கொடுக்கும் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ள முயல்வதில்லை.
நாட்டுக்கு நாடு உண்ணும் உணவில் மாற்றம் !
காலை உணவின் முக்கியத்துவம் அறியாமல் இருப்பது ஏன்?
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் மகாகவி ...
இறைவன் தந்த அந்த அருட்கொடையான உணவை நாம் அவசர கோலத்தில் சாப்பிடுகின்றோம் . பல இறக்குமதிகளில் 'பாஸ்ட் புட்' ஒன்றாக சேர்ந்துக் கொண்டது. நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழ்வார் என்பது ஆன்றோர் மொழி . மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. நாமும் உணவு சாப்பிடும் போது இது இறைவனால் கொடுக்கப்பட்டது என அவனுக்கு நன்றி செலுத்தி மெதுவாக ரசித்து உண்ணும்பொழுது உடல் ஆரோக்கியம் கிட்டும் . இயற்கையின் இனிமை கண்டு ரசிப்பதும் அதனை ஆராய்ச்சி செய்வதும் நம்மை இறைவனது ஆற்றல் அறிய வழி வகுக்கின்றது. நாம் உண்ணும் உணவினை அனுபவித்து ரசித்து உண்பதில் நமது உடலுக்கு ஆரோகியதினை தருவது மட்டுமில்லாமல் நிச்சயமாக இறைவனது 'அல்லாஹ்வின்' (சிலர் இயற்கை என்று சொல்வார்கள்) ஆற்றல் அதில் அடங்கி இருப்பதனை அறிய வருகின்றோம். உண்ணும் உணவு எங்கிருந்து வந்தது என்பதனை என்றாவது சிந்தனை செய்து பார்த்தீர்களா! சோறு அரிசியிலிருந்து வந்தது .அரிசி நெல்லிருந்து வந்தது ... தொடருங்கள் ..உங்கள் சிந்தனையை . இறுதியில் உங்கள் முடிவு இறைவனது மாட்சிமை உங்கள் மனதில் அறிய வரும்.
சராசரி உடல் ஆரோக்கியத்திற்கு மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு அவசியமாகின்றது அது தேவையான உணவு எடுத்துக்கொள்ளும்போதுதான் வயதும் வாழ்கையும் முறைப்படும் .சிலர் வாழ்வதற்காக உணவு சாப்பிடுவார் .சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வர் . நாம் நல்வாழ்வு பெற ஆரோக்கியமான முறையான உணவு சாப்பிடுவதனை முறைப் படுத்திக் கொள்வோம் .
பெரும்பாலானவர்களுக்கு அலுவலக வேலைகளால் வீடுகளில் அல்லது ஹோட்டல்களில் கூட காலை டிபன் சாப்பிடுவதற்கு நேரமே இருக்காது. காலையில் எழும்போதே டென்சன், குளித்து முடித்து அலுவலகம் கிளம்புகையில் என்கேயாவது ஒரு காப்பி அல்லது சேண்ட்விச் அல்லது பிஸ்கட்டுடன் காப்பி அருந்தி விட்டு ஓடும் நிலை .பலரிடம் இருக்கும் கெட்ட பழக்கங்களில் காலை உணவைத் தவிர்ப்பதும் ஒன்றாகும். இதனை வெளிநாட்டிலும் பார்க்கலாம் . விடுமுறை நாட்களில் மட்டும் விரும்பிய காலை டிபன் (உணவை ) சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் .

Subscribe to:
Posts (Atom)