நான் கேட்டதை அவன் கொடுக்கவில்லை
நான் கேட்காததை அவன் கொடுத்தான்
அவன் கொடுக்காததும் நன்மையாய் போனது
அவன் கொடுத்ததும் நன்மையாய் போனது
நான் வலிமை கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிரமங்களை கொடுத்து என்னை வலுவாக்கி அதனை சமாளிக்க வழி செய்தான்.
நான் அறிவு கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத் தீர்க்க முறை செய்தான்.
இறைவனிடம் வளமாக வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..
ஆண்டவனிடம் தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.
நான் மக்களின் அன்பு கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்
இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற அவனது அருள் கேட்டேன் ...
ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.
நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை
ஆனால் எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன்
என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ்.
.-----------------------------------------------------------------------------------------
காலை எழுந்ததும் காபி கேட்பேன்....!
சிரித்து மகிழ காணொளி பாட்டை கேளுங்கள்
விரும்பியது எல்லாம் கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை திருப்தியோடு விரும்ப வேண்டும் என்பதை அருமையாக சொல்லி விட்டீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தந்த கருத்துக்கு நன்றி
ReplyDelete