இனாம் பெறுவது விரும்பத் தகாத செயல்
இனாம் கொடுப்பது உயர்த்த செயல்
(ஒளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார்.)
இனாமும் அன்பளிப்பதும் ஒன்றாகாது .
இனாம் கொடுப்பவரும் அன்பளிப்பு கொடுப்பவரும் விரும்பி செயல்படும் முறை. இரண்டும் மகிழ்வைத் தரும்.
இனாம் வாங்குபவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர் . தாழ்ந்த நிலையில் உள்ளவரும் இனாம் கொடுக்கும் மனம் படைத்தவராகவும் ,இறக்கம் உள்ளவராகவும் இருக்கலாம் .
இப்பொழுது உள்ள நிலை இனாமுக்கு ஆதாயம் தேடும் நிலைக்கு மாறிவிட்டது .
கடையில் பொருள் விற்பனையாக ஒன்றுக்கு ஒன்று இனாம் தருவார்கள் .நம்மிடம் அதிக பணம் வாங்கி மற்றொரு பொருளை இனாமாக தருகிறார்கள். இப்பொழுது அரசாங்கம் இனாம் கொடுத்து மக்களின் மனதினை கவர முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டது . அரசு கொடுக்கும் இனாம் நம்மிடமிருந்து வாங்கி மற்றவர்களுக்கு கொடுக்கிறது . அந்த இனாமை வசதி உள்ளவர்களும் வாங்கி அனுபவ்கிரார்கள் . அதுவும் சேர வேண்டிவர்களுக்கு போய் கிடைக்க பல இடைத்தரகர்கள் இடையூறாக இருப்பதனை நாம் காண்கின்றோம் ..
மின்சாரம் கண்டு பிடிப்பதற்கு முன்பு மெழுகுவர்த்தி வைத்து நிம்மதியாக இருந்த காலம். தற்பொழுது மின்சாரம் வந்து முன்னேற்றம் அடைந்து விட்டோம் என அகமகிழ்ந்து இருக்கின்றோம். போன மச்சான் எப்ப வருவான் வந்த மச்சான் எப்ப போவான் என்ற நிலை! மின்சாரம் எந்த அறிவிப்பும் இல்லாமல் போகும் திரும்ப எப்பொழுது வரும் என்ற புழுங்கல். மின்சாரம் ஒரு உடலுக்கு தேவையான இரத்த ஓட்டம் போல் . மின்சாரத்தினை கிடைக்காமல் தேடவேண்டிய நிலை. சம்சாரம் நம் கூட இல்லையெனில் நம் நிலை தடுமாறும் .அதே நிலைதான் மின்சாரம் இல்லையென்றாலும் ஏற்படும். தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் தேவைபடுவது மின்சாரம். சிலருக்கு மின்சாரமும் இனாம் .சிலருக்கு மின்சாரம் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது .மின்சாரம் வரும் போது வேகமாகவும் குறைந்த சக்தியோடும் பல பொருள்கள் நாசமடைகின்றன .மாற்றுப் பொருள் வாங்க பணப் பற்றாக் குறை.
போதுமான மின்சாரம் சரியாக கிடைக்கவில்லை என்றால் நாட்டின் அபிவிருத்தி குறையும் ,வேலை இருந்தும் வேலை பார்க்க முடியாத நிலை தேவையா! நம் நாட்டு மக்கள் நலம்பெற வேண்டுமென்றால் நம் நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் எக்காலத்திலும் கிடைக்க வழி கண்டுபிடிக்க வேண்டும்.
நமக்கு இனாம் வேண்டாம். ஆனால் உழைப்பவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். மின்சாரம் கொடுக்க முடியாதவர்கள் இனாம் விசிறி கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை .
நம் நாட்டில் எந்த ஒரு அரசும் சாமானிய மக்களின் நலம் நாடும் அரசாக இல்லை. எங்களுக்கு சமைக்க தெரியாது. ஆனால் சமைத்ததனை சுவைக்க தெரியும். அதில் இருந்த உப்பும் இனிப்பும் எந்த நிலையில் இருந்தது என அறிவோம் .ஆளத் தெரியாது ஆனால் நீங்கள் ஆண்டதனால் நாங்கள் அடைந்த அனுபவம் உண்டு . மக்களின் நலம் நாடும் அரசாக நீங்கள் செயல் பட்டீர்களா என்ற அனுபவத்தினால் தெரிந்து கொள்ள முடியும் .
“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
/// மின்சாரம் கொடுக்க முடியாதவர்கள் இனாம் விசிறி கொடுப்பதினால் எந்த பயனும் இல்லை... ///
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள்... ஏதோ மூன்று நாட்களாக இங்கு மின்வெட்டு இல்லை... (குறைவு)
தொடர வாழ்த்துக்கள்...
ஏதோ மூன்று நாட்களாக இங்கு மின்வெட்டு இல்லை... (குறைவு) ஏதோ போக எப்பொழுதும் மின்சாரம் வர கால மழை பெய்ய வேண்டுவோம்
ReplyDelete