Friday 24 May 2013

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்!

மனிதன் வாழ்வில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
இறக்கம் காண இரக்கம் கொண்டேன்

மின்சாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
மின்சாரத்தின் மீது வெறுப்பைக் கொண்டேன்

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்
நெட்டே  கழண்டு போச்சு பிடியற்ற கரண்டால்

மின்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையற்றதாய் போகக் கண்டேன்
சம்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையாக இருக்கக் கண்டேன்

மின்சாரம் வேண்டாம் சம்சாரம் போதும்
சம்சாரம்தான் சமாசாரத்திற்கு சரிபட்டு வரும் 


இனாம் தந்த மிக்சி வீணாகிப் போச்சு
பணம் கொடுத்து பெற்ற மின்சாரம் பிரச்சனைப் பண்ணுது
இனாமுக்கு போட்ட ஒட்டு ஓடாகி உடைந்துப் போகுமோ !

மின்சாராம் பல மணி நேரங்கள் இல்லாமல் இருந்தது பல் வகையான பாதிப்பை கொடுத்து பழகிப் போனது. இப்பொழுது மின்சாரம் ஓரளவு வருகிறது.அது வேகமாகவும் ,மிகவும் மெதுவாகவும் (high or low current )கொடுக்கப் படுகின்றது. அதனால் பல பொருள்களை வீணாக்கி பாதிக்கின்றது .இது தமிழ்நாட்டின் நிலையாகாக உள்ளது

3 comments:

  1. ஒவ்வொன்றும் உண்மை... தினம் தினம் "நன்றாக" அனுபவிக்கிறோம்... "!"

    ReplyDelete
  2. I agree with you.High or low voltage is unbearable.

    ReplyDelete
  3. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் மற்றும் Arumugam Easwar அவர்களுக்கும்

    ReplyDelete