Saturday, 11 May 2013

Status போடுமுன் நமக்கு காட்சி தருவது what's on your mind?

 மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல விருப்பம், நினைத்ததை சொன்னால் மனம் அமைதி அடையும். சொல்வது தொல்லையும் தரலாம் .சொல்லவேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விட்டாலும் பாதிப்பு வரலாம்.
மனதின் வெளிப்பாடு ஒளிமயமாக வர வேண்டும். அலைபாயும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

Status போடுமுன் நமக்கு காட்சி தருவது what's on your mind?
மனதில் உள்ளது ஒன்று! இங்கே போடுவது வேறு.
மனதில் உள்ளதை, தான் செயல்படுத்த நினைத்ததனை இங்கே போடுவோர் எத்தனை பேர்?

 காப்பி அடித்து எழுதும்போது நம்மை அறியாமல் காப்பி அடித்த பகுதியில் சில கருத்துகள் நம் மனதில் நின்று நமது அறிவை வளர்க்கும் வாய்பும் உண்டாகிறது .அதுபோல ஃபேஸ்புக்கில் மவுசை உருட்ட சில நல்ல படங்களும் ,அறிவான செய்திகளையும் நம் அறிவு உள்வாங்கிக் கொள்கின்றது .அது மனதில் உருண்டுக் கொண்டே இருந்து இரவில் கனவில் காட்சியாக பரிணமித்து புதிய மாற்றமான கருவாகி உருவைத் தர உதவுகின்றது .
தீமையாய், தீண்டத் தகாததாய் நினைக்க அதுவே உறுத்திக் கொண்டு தொல்லை தரும்
எதில் ஈடுபட்டாலும் மகிழ்வு இருக்க வேண்டும்.

  தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது தொழிலைப் பற்றிய நினைவு. அந்த இடத்தை விட்டு அகன்ற பின் இருக்குமிடத்தைப் பற்றிய கவனம். இங்கு இருந்துக் கொண்டு அதை நினைப்பது அங்கு இருந்துக் கொண்டு இதனை நினைப்பது இரண்டிலும் இழப்பைத் தரலாம் . ஓய்வை நாடி. மாற்றம் நாடி வெளிநாடு சுற்றுலா சென்றேன். சென்ற இடங்களை முழுமையாக மன நிறைவோடு பார்த்து வந்தேன். பின்பு ஓர் உத்வேகம் .


 திருமணம் செய்கின்றார்கள் . ஒரு மாதமிருந்து (குறைந்தது ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கழிக்காமல்) குழந்தையை உருவாக்கி விட்டு பயணம் . பின்பு ஓராண்டு அல்லது இரண்டாண்டு
கழித்து  வருவார்கள் . இந்த நிலை உயர்ஜாதி என சொல்லப் படுவோர்களிடம் கிடையாது . 'பயணம் சென்றால் என்னையும் அழைத்துப் போ அல்லது  ஊரோடு இரு ' நம் நிலை இரண்டும் கெட்டான் நிலையாகிவிட்டது
எதில் ஈடுபட்டாலும் மகிழ்வு இருக்க முடியாத பரிதாப நிலை

 விஞ்ஞானிகளின் ஆய்வின் முடிவு மகிழ்ச்சி இல்லாத இதயம் இரத்த நாளங்கள் நோய்களை அதிகரிக்கிறது அதன் விளைவால் தற்கொலைக்கு தள்ளப் படுவதாக கண்டறியப்பட்டது. எனவே எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது எவர் சர்வ நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் சோகமாக இருக்க முடியாது, ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் நற்செயல்களை செய்து அதில் மகிழ்வடைவர். இறைவன் தந்த உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை நமக்கு கிடையாது என திடமாக நம்புவர். ஒரு உயிரை உருவாக்கக் கூடிய சக்தி நம்மிடம் இல்லாதபோது உயிரை போக்கிக் கொள்ளும் உரிமையும் நம்மிடமில்லை. தற்கொலையை இஸ்லாம் கடுமையாக கண்டிக்கிறது . தற்கொலை செய்வோர் சுவனம் செல்ல மாட்டார் என்றும் சொல்கிறது.

யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.-( குர்ஆன் :2: 227

 மார்க்கம் ஓர் நம்பிக்கை . நம்பிக்கையின்றி மார்க்கமில்லை .நம்பிக்கையுடையோர்
கை விடப்படார். ஆய்வு செய்வது நன்மை பயக்கும். நம்  ஆய்வும் ஓர் எல்லைக்குள் இருத்தல் நன்மை பயக்கும். அறியா அறிவு ஓர் எல்லைக்கு தாண்டினால் குழப்பம் வர நம்பிக்கை போகும். விதியைப்பட்றி ஆய்வோர் இரு கால்களை தூக்கி நிற்க முயல்வோரின் நிலைதான்.

3 comments:

  1. என்ன தான் பணம், வசதிகள் வந்தாலும், மகிழ்ச்சி இல்லாத இதயம் பல சிரமங்களை சந்திக்கத் தான் நேரிடும்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தந்த கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  3. http://thisisonyourbirthday.blogspot.in/

    ReplyDelete