Followers

Monday, 20 May 2013

நல்ல காலம் வந்தாச்சு

பலர்  வோட்டு போட சிலர் காசு பண்ண
சிலர் நோட்டு சேர்க்க  பலர் வாடி வதங்க

நல்லவை வர அல்லவை போக
கெட்டவை வர நல்லவை போக

மகிழ்வு  வர  துயரம் போக
துயரம் வர  மகிழ்வு போக

சிலர் பாசம் காட்ட  சிலர் நேசம் காட்ட
சிலர் கோபம் காட்ட சிலர் வேசம் காட்ட

சிலர் உதவி செய்ய  சிலர் கேடு செய்ய
சிலர் பதவி நாட சிலர் பதவி விட

சிலர் மகிழ்வு தர  சிலர் துயரம் தர
சிலர் வேடிக்கை காட்ட சிலர் வேடிக்கையாகி  விட

சிலர் ஆசி தர சிலர் தூற்றி  விட
சிலர் காசி தர சிலர் காசி பெற

சிலர் நடிக்க பலர் ஏமாற
சிலர் படிக்க பலர் தத்தளிக்க

வந்தாச்சு வந்தாச்சு நல்ல காலம் வந்தாச்சு
வந்தாச்சு வந்தாச்சு நல்ல ஆட்சி வந்தாச்சு

2 comments:

  1. சொல்ல வேண்டிய உண்மைகளை சொல்லி விட்டு... இருந்தாலும் நல்ல காலம் விரைவில் அனைவருக்கும் வரட்டும்...

    ReplyDelete
  2. நன்றியோடு திண்டுக்கல் தனபாலன் முடிவுக்கு விட்டு விடுதல் சிறப்பு

    ReplyDelete