பாலைவனத்தில் முகம்மது நபி (ஸ.அ) அவர்களோடு நபித் தொழர்ளும் பிரயாணம் செய்துக் கொடிருந்தார்கள்.பாலைவனத்தின் வெயிலின் கொடுமை அவர்களுக்கு தாகத்தை அதிகமாக்கியது.வைத்திருந்த குடி நீர் பற்றாக்குறை. போகும் வழியில் நீர் தேக்கத்தினை கண்ட தோழர்கள் வேகமாக அந்நீரை நோக்கி ஓடினார்கள்.போகும் வேகத்தில் மக்காவாசித்(முஹாஜிரின்) தோழரின் காலை மதீனாவாசி (அன்சாரி)தவறுதலாக மிதித்து விட்டார் .அதில் கோபமடைந்த மக்காவாசி(முஹாஜிரின்)மதீனாவாசியை (அன்சாரி) அடித்துவிட்டார். உடனே அந்த அன்சாரித் தோழர் கோபமாக அடைக்கலமாக வந்த உங்களுக்கு 'நாங்கள் வீடும் உணவும் கொடுத்து உபசரித்தோம் அதனைக் கூட நினைத்துப் பார்க்காமல் அடித்து விட்டாயே' என்று சொல்லியதோடு மக்காவாசி(முஹாஜிரின்) அடித்து விட்டார் வாருங்கள் மதீனாவாசிகளே (அன்சாரி)வந்து பாதுகாப்பு கொடுங்கள் என கூவி தங்களைச் சேர்ந்தவர்களை அழைக்க அந்த இடத்திற்கு மதீனாவாசிகள் (அன்சாரிகள்)ஓடி வர இதைக் கண்டு பயந்த மக்காவாசி(முஹாஜிரின்) தங்களது மக்காவாசி(முஹாஜிரின்) மக்களை அழைத்தார் . பெரிய கூட்டமாக இருவருக்கும் ஆதரவாக கூட்டம் கூடி ஒரு பெரிய கலவரம் நடக்கும் அளவுக்கு போய் விட்டது. இது முகம்மது நபி (ஸ.அ) அவர்கள் அறிய வர அவர்கள் அவர்களிடம் மிகவும் கோபமாக சொன்னார்கள் . தவறு செய்திருந்தால் தவறின் அடிப்படையில் தண்டனை கொடுங்கள் அதைவிடுத்து இன மற்ற இடத்தினைச் சார்ந்தவர் என்பதனை வைத்து குறுகிய நோக்கம் கொண்டு செயல்படாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.
--------
'கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்'.-நபிமொழி
-------------------
நாங்கள் 'ஒரு போரில்' அல்லது 'ஒரு படையில்' இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். 4அப்போது (அடி வாங்கிய) அன்சாரி 'அன்சாரிகளே! (உதவுங்கள்.)' என்று கூறினார். அந்த முஹாஜிர் 'முஹாஜிர்களே! உதவுங்கள்!' என்று கூறினார்.
இந்தப் பேச்சை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செவியேற்று, 'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை' என்று கூறினார்கள்.
- ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் 4905.
குறிப்பு : நாயகம் மக்காவை விட்டு மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) வந்த போது வந்த மக்காவைச் சேர்ந்தவர்கள் முஹாஜிர்கள் என அழைக்கப்படுவர்
மாக்காவை விட்டு நாயகத்தோடு மதீனாவுக்கு வந்தவர்களை ஆதரவளித்து உபசரித்தவர்கள் மதீனாவைச் சார்ந்தவர்கள் அவர்கள் அன்சாரிகள் என அழைக்கப்படுவர்
Ansar (Arabic: الأنصار al-Anṣār) is an Islamic term that literally means "helpers" and denotes the Medinan citizens that helped Muhammad and the Muhajirun ...
The plural form of Muhajir, namely Muhajirun, as a term, refers to those early Muslims who believed in Prophet Muhammad (pbuh) after he started the call to Islam. Because of their faith, the Muhajirun were subject to the oppression, persecution and torture of Meccan idolaters, and they left Mecca for Medina
/// உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள் ///
ReplyDeleteசிறப்பு... நன்றி...
வாழ்த்துக்கள்...
// உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள் ///
ReplyDeleteசிறப்பான கருத்துக் கொண்ட வரியை தேர்வு செய்து கருத்துரை வழங்கியமைக்கு நன்றி சகோதரரே