Wednesday, 15 May 2013

இங்கு வந்து பாருங்க! உங்க மகள் அதிகமா பேசுவதை !


இங்கு வந்து பாருங்க! உங்க மகள் அதிகமா பேசுவதை !

நான் என்ன தப்பா பேசுறேன்!

ஆமாம் பெரிய படிப்பை படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே!
பெரிய படிப்பை படித்தால் எப்படி பேசுவாயோ!

மேல் படிப்பை படிக்காமே என் படிப்பை கெடுத்தது மட்டுமல்லாமல் என்னை   குத்திக் காட்டுவதில் இன்னும் உனக்கு பெருமை

அதிகமா படிச்சா கெட்டு அலைய வேண்டியதுதான். வீட்டு வேலையே தெரியாது அப்புறம் வேலைக்கு போவேன்னு பிடிவாதம் பிடிப்பே!
 பின்பு உன்னைவிட அதிகம் படிச்ச மாப்பிள்ளை வேனும்பே!

நீ படிசிருந்தாதானே உனக்கு படிப்பின் அருமை தெரியும்.

உன்னிடம்  நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு.

தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் விவாதம் இறுதியில் படிப்பை பற்றி திரும்புகின்றது

ஆண்கள் படிச்சு வேலைக்கு போகணும்  பெண்கள் படித்து என்ன ஆவப்போவுது ?

'பெண்கள் படித்தால் இன்னும் திறமையாக வருவார்கள் .நிச்சயமாக ஆண்களைப் போல் படிப்பில் கவனம் செலுத்தாமல் அலைய மாட்டார்கள்!'- மகள்

'காலம் கெட்டுப் போச்சு அதனால்தான் நீ இப்படி பேசுறே!'--தாய்

'காலத்தை ஆண்கள் கெடுக்காமல் இருந்தால் உலகம் நன்றாகிவிடும் . ஆண்கள் வீட்டில் அடைந்து கிடக்கட்டும் ! படித்த பெண்கள் அருமையாக காலத்தை உருவாக்குகின்றோம்' -.மகள்

;உன்னிடம் நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு; என்று சொல்லிவிட்டு  தாய் நகர்கிறாள்


பெண்களுக்கு படிப்பு அவசியமா !
பெண்களுக்கு படிப்பு அவசியம்தான்

படிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டு என்று ஒரு  காரணம் சொல்வார்கள்!
படிக்காத பெண்கள் கெடுவதில்லையா?
பெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் ?
ஆண்களால்தானே பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் !
மறுமலர்ச்சி காலத்தில் வாழும்போது சில தவறு நடந்தால் பொதுப்படையாக பேசக் கூடாது . இது புரட்சி வருவதற்கு வழி வகுத்துவிடும் . பேசுவதை முறையாக ,நேர்மையாக இறைவனுக்கு பயந்து பேசுங்கள். இல்லாததை இருப்பதாக சொல்லி பெண்களை மடமையாக்கி விடாதீர்கள்
சரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மையான கடமையாக உள்ளது. அதற்கு பெண்கள் அவசியம் படித்தாக வேண்டும் . தாயே சிறந்த வழிகாட்டி

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்”

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல
மாதர றிவைக் கெடுத்தார்.
கண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதமை யற்றிடுங் காணீர்”.
பாரதியார் பாடிய மறக்க முடியா வரிகள்

” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:

3 comments:

  1. அருமையான உரையாடல் மூலம் சிறப்பான கருத்துக்கள்... பெண்கள் படித்தால் அந்த பரம்பரையே படித்தது மாதிரி...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நன்றி...திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு

    ReplyDelete
  3. சலாம். கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தான்,கற்பது பயன் படுத்து இவ்விரு சூழ்நிலைகளும் மிகமுக்கியம். நல்ல பதிவு - நன்றி
    5186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்துவிடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்.
    இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். -முஸ்லிம்

    ReplyDelete