சிலர் கற்பனையாக ஒரு கருவை வைத்து நிறைவான நல்ல கட்டுரையும், உயர்ந்த கவிதையும் தருவார்கள். இதுவும் தொடரும் காலத்தில் ஒளி வீசுகின்றது
சேவை செய்தவர்களின் உண்மை நிகழ்வுகள் சிறிதும் கலப்படமற்று சிறப்பானதாக தரப்பட்டது சரித்திரமாகி விடுகிறது.
நமக்காக எழுதி வைத்த தினக் குறிப்புகளும் , நிகழ்வுகளும் நமது குடும்பத்திற்கு நன்மையை தரக் கூடியதாக அமையலாம் . அந்த குறிப்பில் நமது உறவு முறைகள் காணப்பட்டிருந்தால் வருங்கால பரம்பரைகள் நமது உறவுகளை அறிய வைக்கின்றது .உறவை நாடுபவர்களுக்கு இது பயன்படும்.
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(புகாரி ஹதீஸ்-1)
திருமணத்தின் நோக்கம்
திருமண பந்தம் இருமன ஒப்பத்தில் வந்ததின் விளைவு
திருமணம் இரண்டு ஆத்மாக்களும் ஒன்றுபடும் உறைவிடம்
திருமணத்தின் நோக்கம் சிற்றின்பத்தை சேர்க்கும் சாக்கடையல்ல. வடிகாலல்ல
திருமணம் சுயநலம் கருதி போரிடும் போர்க்களமல்ல
திருமணம் அன்பு மலர்களால் ஆழ்ந்த பூந்தோட்டம்
திருமணம் பரம்பரையை உருவாக்கும் விளைநிலம்
திருமணம் செய்தல் என் வழியாகும் என்றொரு ஹதீஸிலும், எவர் இந்த வழியைப் பின்பற்றவில்லையோ அவர் என்முறை தவறியோர் ஆவர். என்று மற்றொரு ஹதீஸிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் :
முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா(ரலி), நூல்: புகாரி(எண் 5090)
உறவை நாடுபவர்களுக்கு இது பயன்படும்...
ReplyDeleteநன்றி...
நன்றி...திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு
ReplyDelete