Thursday, 31 October 2013

கிடைத்த நாட்கள் உயர்வானவை



காத்திருந்தேன் காத்திருக்கிறேன் அந்த நாள் வருமென்று
காத்திருந்த நாட்கள் கடந்து போயின காரியம் முடியாமல்
காத்திருக்கும் நாட்கள் வருகையை நோக்கி களைத்தும் போனேன்
காத்திருக்கும் நாட்களை மறந்து கிடைத்த நாட்களை பயன் படுத்தாமல் போனேன்

கிடைத்த நாட்கள் உயர்வானவை
நினைத்த என்ணங்கள் உயர்வானவை

மற்றவர்கள் மாற்றாக நினைப்பார்களோ என செயல் படுத்த வில்லை
மற்றவர்கள் நிறைவாக போற்றி இருப்பார்கள் நான் நினைத்தது நிறைவேற்றியிருந்தால்

திரும்பி வர தகுதியும் திறமையும் இருந்தால் தவிர இருக்கும் இடத்தை விட்டு வெளியேறுவது சிறப்பல்ல.



  கொடுமைக்காரர்களின் தொல்லை அதிகமாக பிறந்த இடத்தையும் வாழ்ந்த இடத்தையும் விட்டு (ஹிஜரத்) வெளியேறியவர்கள் சரித்திரத்தில் நபிகள் நாயகம்ஸல்) அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும்.

ஆனால் அவர்கள் திரும்பவும் தங்கள் பிறந்த இடத்திற்கும் வாழ்ந்த இடத்திற்கும் வர முடிந்தது

”நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3 : 31)

Wednesday, 30 October 2013

தன்னை உயர்த்திக் காட்டி நிற்பதல்ல சேவை

மல்லிகை மணம் வீசும்
மல்லிகையை முடியில் வைக்க மணம் பரப்பும்

மணம் கொடுக்க மனம் மகிழும்
மனம் மகிழ்வில்லை மல்லிகை சூடி மணம் மகிழ்விக்க
மனம் வாட மற்றவர் மனம் மகிழ மல்லிகை ஏன்

உன் மனதின் வேதனை உனை விட்டு நீங்கும்
மற்றவருக்கு நீ கொடுக்கும் மகிழ்வினால்

நெஞ்சில் ஓர் இறுக்கம் இருப்பதனை இருத்தி வைத்தால்.

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

வேற்றுமையில் ஒற்றுமை

உங்கள் விருப்பம் வேறு
என் விருப்பம் வேறு

உங்கள் ரசனை வேறு
என் ரசனை வேறு

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ரசனை
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விருப்பம்

எல்லோரும் ஒரே ரசனை பெற்றிருந்தால்
எல்லோருக்கும் பிரச்சனை

Tuesday, 29 October 2013

சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு



சிந்திப்பதால் உயர்வு
சிந்தித்து செயல்படுத்துவதால் சிறப்பு

செயல்படுத்தியது ஆற்றல்
செயல்படுத்தியதின் பலன் விளைவு

பல விதைகள் விதைத்து சில செடிகள்
சில செடிகள் பல விதைகள் தந்தன

செடிகளின் இலைகள் உதிர்வது காலத்தின் மாற்றம்
செடிகளின் இலைகள் உதிர்ந்து எருவாகி செடிக்கே பலனை தந்தது

பல சிந்தனைகள் சில சிந்தனைகளை ஊக்கு வித்தன
சில சிந்தனைகள் பல பலன்களை தந்தன

சிந்தனைகள் சிதறாமல் இருக்க ஓர் நிலைப் படுத்தல்
ஓர் நிலைப் படுத்தல் உயர்வுக்கு வழி

Monday, 28 October 2013

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்

பல வார்த்தைகள் ஒரு வரியாகிறது
ஒரு கருத்து பல வரிகளாகிறது

ஒரு கருத்து மனதில் பதிகிறது
பல கருத்துகள் மறந்து போகிறது

ஒரு சொல் உயிரையே மாய்க்கிறது
ஒரு சொல் உயிரை வாழ வைக்கிறது

அம்பு எய்தவன் மகிழ்கிறான்
அம்பால் அடிப்பட்டவன் மரணிகின்றான்

எயதவனுக்கு நொய்வில்லை (நொய்வு = மனவருத்தம்)

எய்யப்பட்டவனுக்கு வேதனை

சொல்வதை உயர்வாகச் சொல்
சொல்வது உயர்வாய் இருக்க இருபக்கமும் உயர்வு

சொல்வது உன்னதாய் இருக்கட்டும்
சொல்வதில் ஏன் கடன் வாங்கி சொல்கிறாய்

Saturday, 26 October 2013

பிரயாணம் தந்த பாடம்

பெட்டியை சுமந்து சென்றேன் உலகம் சுற்ற
பெட்டியில் சுமை இல்லை
பெட்டியில் இருந்தது பணம் எடுக்கும் வங்கித் தாள்கள்

பிரயான வங்கித்தாள்கள் (Traveler's cheque) போகும் நாட்டுக்கு அனுமதி(விசா) கிடைக்க உதவியது
பிரயானம் செய்த நாடுகளில் தேவையானவைகளை வாங்க வங்கித்தாள்கள்(Traveler's cheque) பணமாக்கப் பட்டு உதவின
பிரயானத்தில் சுமை சுமந்து செல்வது பிரயாண மகிழ்வை கெடுக்கும்
பிரயானம் செல்வது அறிவை உயர்த்திக் கொள்ள உதவ வேண்டும்

தனித்து பிரயாணம் செய்வதால் பல அனுபவங்கள் கிடைக்கும்
தனித்து போனவர் தனியே இருக்க விரும்பாமல் பலரோடு பழக முயல்வார்

Thursday, 24 October 2013

தவறான ஆசைகளை ( Nafs ) அடக்க வேண்டும்

பிறப்பால் முஸ்லீம்
வளர்ப்பால் முஸ்லீம்
இறப்பிலும் முஸ்லீமாக
இருக்க வேண்டும்

கொள்கையால் இஸ்லாமிய வழி
கொள்கை இருக்க நெறி அறிதல் வேண்டும்
அறிதல் இருக்க அதன்படி வாழ வேண்டும்
ஆசைகள் ( Nafs ) வாழும் வழியை தடுமாற வைக்கின்றது
ஆசைகள் பாவங்கள் சேர வைகின்றது
ஆசைகளை அடக்க வேண்டும்

ஆசை பேராசையாக மாறுகிறது
பேராசை அழிவுக்கு வழி காட்டுகிறது
ஆசைப்படுவது நற்காரியங்களுக்கு இருத்தல் வேண்டும்
நற்காரியங்கள் நடைபெற பொறுமை வேண்டும்
பொறுமையற்றவன் போக்கிரியாக மாறலாம்
பொறுமையற்றவன் மார்க்கம் தந்த வழி தவறி செயல்படலாம்


சப்று (பொறுமை) என்றால்
நபி(ஸல்)சொன்னார்கள் :

“அஸ்ஸப்ரு இன்த ஸத்மத்தில் ஊலா “
துன்பம் உள்ளத்தைத் தாக்கிய முதல் நிலையிலேயே மனதை கட்டுப்படுத் வதுதான் பொறுமை “ (திர்மதி)

Wednesday, 23 October 2013

கற்பின் உயர்வு

கற்பு இரு பாலரும் பேணிக் காக்கப் பட வேண்டியது
கற்பின் உயர்வு பார்வையில் மனதில் செயலில் உள்ளடக்கம்
கற்பற்ற செயல் களங்கம் சேர்ந்து நிற்கும்

வெட்கப் படுவதற்கு வெட்கப்படுவது உயர்வு
வெட்கமற்ற வாழ்க்கை வேதனைத் தரும்
வெட்கம் இரு பாலர்க்கும் இருக்க வேண்டும்

உயர்வென்ன தாழ்வென்ன இறைவன் படைப்பில்
உயர்வும் தாழ்வும் செய்யும் செயலில் வெளிப்படும்
உய்ர்வுடையார் கற்றார் தாழ்வுடையார் கல்லாதவர்

நாணம் உடையோர் அகத்தின் அழகு பெற்றோர்
நாணம் உடையோர் தாழ்மைச் செயலை செய்ய நாடார்
நாணயமுடையோர் சொற் வாக்கு தவறார்

வெட்கப்படுவதற்கு வெட்கப்படு.

இன்று ஒரு கட்சி ,நாளை ஒரு கட்சி என்று தன் வேடத்தினை பொருள் நாடி மற்றும் தான் செய்த குற்றத்திற்கு தண்டனை அடைவதற்கு அஞ்சி வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும் . அவர்களுக்கே மாலை அணிவித்து காலை வாரி விடும் மக்கள் தான் தன் செயலுக்கு வெட்கப்படவண்டும்

நேர்மையாக வாழும் நாம் ஏன் வெட்கப்படவண்டும் !

புகழ் வந்த பெரியவரைக் கண்டால் ஓடி ஒளிவது அவரை கண்டு பேச வெட்கப்படுவது உனது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு.தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் உள நோய்கள் வர வாய்ப்பு உண்டாக்கிவிடும் அவருக்கு கிடைத்த புகழுக்கு நீயும் ஒரு காரணமாக இருக்கலாம். பணமும் பதவியும் பகுத்தறிவை கண்டு ஒதுங்கும் . நீ ஒதுங்காதே.

Tuesday, 22 October 2013

நான்

நான் நானாக இருக்க விருப்பம்
நான் நாணயத்தை விரும்புகிறேன்
நான் நாணயத்தை சேர்ப்பது மற்றவர்க்கு உதவ
நான் நாணம் கொண்டவன்
நான் என்ற அகந்தை என்னிடமில்லை
நான் பெற்ற கல்வி மற்றவருக்கு பகிர
நான் வருவதற்கு காரணமான பெற்றோர் மீது பாசம்
நான் வாழ்வதே இறைவனின் அருளால
நான் மகிவாய் இருக்க என் மனைவியின் சேவை அடக்கம்
நான் நல்வாழ்வு வாழ நீங்கள் சிறப்பாய் வாழ வேண்டும் 


 நான் …(About Me)

பெயர்: அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்., நீடூர்.

அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., Nidur.

Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.


சீனாவின் வளர்ச்சி


பல் போனால் சொல் போச்சு . பல காலமாக பல் மருத்துவருக்கு சீன மருத்துவரை நாடி ஓடுவது உண்டு.இப்பொழுது எதற்கு எடுத்தாலும் சீன தேசம் ஓடுகின்றனர் .வாங்குவதற்கும் சீனா,விற்பதற்கும் சீனா என்ற நிலை ஆகிவிட்டது .இரும்புத்திரை உடைக்கப்பட்டு செல்வம் கொழித்து அதிக செலவு செய்யும் நாடாகிவிட்டது. .

சீனா தேசம் சென்றாகினும் சீர் கல்வியைத் தேடு என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள் .இப்பொழுதும் சீனாவின் சிஞ்சியாங் பகுதியில்
முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கின்றனர்.

இந்தியாவில் கல்கத்தாவில் சீன மக்கள் அக்காலத்திலேயே வந்து குடியேறி பல தொழில்கள் இன்றும் செய்து வருகின்றனர். மக்கள் பெருக்கம் ஆபத்து என்று சொல்லி வந்தவர்கள் சீனாவின் மக்கள் தொகை அவர்களுக்கு சொத்தாகிமாறி வருவதனைக் கண்டு வியக்கின்றனர்

தேவைக்கு பயந்து குழந்தைகளை கொன்றவர்கள் தான் செய்த பாவமான காரியத்தினை உணர ஆரம்பிக்கும் நிலை. உலகில் அதிக மக்கள் தொகை நாடு இந்தியாவும் சீனாவும் தான். இந்த இரண்டு நாடுகள்தான் உலக அளவில் மிகவும் முன்னேறும் நாடாக இப்பொழுது மாறி வருகின்றது.

உயர் ரக அணிகல கற்களை விற்பதற்கு பேங்காக்கிலிருந்து துபாய் ,அமரிக்கா ஓடியவர்கள் இன்று சீனா பக்கம் படை எடுக்கின்றனர் . சீனா செல்வதற்கு விசா முறையும் தளர்த்தப்படுள்ளது . ஆரோக்கியதிற்கு ஒரு சீனா.உழைக்கும் திறனுக்கும் ஒரு சீனா .சீனாவின் வளர்ச்சி பிரமிக்கும் வகையில் மாறும் நிலை .

மென்பொருள் தொழில் வளர்சிக்கு நம் நாடும் அங்கு பல பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவ முயற்சி
எடுக்கின்றது. கெட்டும் பட்டணம் போ! என்று சொல்வார்கள். அது இன்று சீனா போய் பணம் தேடு என்றாகிவிட்டது.

திருமணம்

திருமணம் சுவனத்தில் நிச்சயிக்கப் படுகிறது
தாயின் மடியில் சுவனம் இருக்கிறது
தான் விரும்பிய பெண்ணாய் இருப்பினும்
தாயின் விருப்பதிற்கு முதல் இடம் கொடுப்பர்

தாயைப் போல பிள்ளை
நூலைப் போல சேலை
தாயின் குணம் பெண்ணுக்கு இருக்கும்
பெண்ணின் தாய் குணம் அறிந்து பெண் எடுத்தல் சிறப்பு

Monday, 21 October 2013

கனவுகள் கவித்துவம் பெறவில்லை


கனவுகளை கற்பனையோடு கலந்து
கலையாய் கவிதையை வடித்தேன்

குடித்த பாணத்தில் இனிப்பில்லை என்பதுபோல்
படித்த கவிதையில் பிடிப்பில்லை என்றனர்

வாயில் ஊறிய உமிழ்நீர் உண்ட உணவை செரிக்கச் செய்யும்
கவிதை வடிவில் வந்த வரிகள் அறிவு வளரச் செய்யும்

முதல் எழுத்து ஒன்றி வந்து மோனையாகி
இரண்டாம் எழுத்து ஒரே மாதிரி வந்து எதுகையாகி விடும்

கவிதையில் எடுத்து வைத்த எழுத்துகள் அசையாக வில்லை
அசைகளால் எடுத்து வைக்காமல் அது சீர்களாக வில்லை

கனவுகள் கலைந்து வந்தமையால் நினைவில் நின்று சீராகவில்லை
வரிகள் கலைந்து வந்தமையால் நினைவில் நிற்கும் கவிதையாகி சிறப்பாகவில்லை

கவிதையைப் பற்றியது கவிதையல்ல !



கவிதை புனைவது கடினம்
கவிதை என்று எழுதுவது சுலபம்

கவிதை எழுத முதலில் 'க' போடு
கவிதை எழுத நடுவில் 'வி' போடு
கவிதை எழுத இறுதியில் 'தை' போடு

படக் காட்சியில்  வருவது சிங்கார கவிதை
பாடப் புத்தகத்தில் வருவது யாப்புக் கவிதை
காட்சியோடு வரும் கவிதை மனதில் நிற்கும்

பாடப் புத்தகத்தில் வரும் கவிதையை  மனனம் செய்தல் கடினம்
பாடப் புத்தகத்தில் வந்ததை படக் காட்சியில் வந்தால் மனனம் செய்யாமல் மனதில் பதியும்

கவிதை எழுதி பணம் ஈட்டுதல்  கடினம்
கவிதை எழுதி மனம் நிறைவு அடையலாம்
கவிதை எழுதி கவிஞர் பட்டம் பெறலாம்

கவிதை எழுதுதல் ஒரு கலை
கவிதை நெஞ்சத்தில் நின்று விடும்
கவிதை அருவியாய் வரும்

கவிதை உணர்வுகளை தூண்டும்
கவிதை உந்துதல் சக்தியை உருவாக்கும்
கவிதை வைரக் கற்கள் பொதிந்த சங்கிலி

நீ என்னோடு நான் உன்னோடு

நீ என்னோடு இருப்பதாக உணர்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் உன் மனம் அறிந்திருக்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் உன் மணம் உணர்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் நான் உன்னை காதலிக்கிறேன்

நீ என்னோடு இல்லையென்றாலும்
நான் உன் மணம் உணர்கின்றேன்
நான் உன் மனம் அறிகின்றேன்
நான் உன்னை காதலிப்பதால்

வீசும் தென்றல் உன்னைத்  தழுவி கடந்து வருகின்றது
வீசும் தென்றல் என் நெஞ்சை தழுவுகின்றது
வீசும் தென்றல் உன் மணம் தந்து மகிழ்விக்கின்றது
வீசும் தென்றலையும் நான் காதலிக்கிறேன் உன் மணம் வீசுவதால்

Sunday, 20 October 2013

இதுதான் கொலை உலகம் !

ஆயுதங்கள் விற்பனைக்கு பல நாடுகள் போட்டி ! இதுதான் கொலை உலகம் !

நாம் கலை வளர்த்தோம் என்று பெருமை பேசுவோம் . மக்கள் தொண்டே எங்கள் கொள்கை என மார்தட் டிக்கொள்வோம் .

ஆனால் நடப்பது என்ன ?
பதவி வெறி, பண மோகம், மண் ஆசை
ஜாதி,இன வெறி மற்றும் பல தோற்றங்களில் வரும் கொலை வெறி இது தொடர்ந்து வருகின்றது .

இது இந்த நாகரிக உலகத்திலும் பாதிக்க படும் அவல நிலை . எத்தனை புகழ் வாழ்ந்த தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். மனிதன் நல்லவன் மக்கள் கொடியோர் என்பர்.

தி மெஸேஜ் திரைப்படம் தமிழில்..


முஹம்மது நபிகளைப்பற்றிய ஆங்கிலத் திரைப்படம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கபட்டுள்ளது Part 1 முஹம்மது நபிகளைப்பற்றிய ஆங்கிலத் திரைப்படம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கபட்டுள்ளது Part 2 - Part 2 (The End)

Saturday, 19 October 2013

பெண்ணே நீ செய்த குற்றமா !

மாதவிடாய் வந்து ஒதுங்கி நிற்கிறாய்

மலடியாய் பிள்ளை பெறாமல் இருக்கிறாய்

கர்பினியாய் காலம் நிர்ணயிக்கிறாய்

பிரசவமாகி காமப் பசி கணவனை காய வைக்கிறாய்

கணவன் விடுத்து அடுத்தவன நேசிக்க வெறுக்கிறாய்

அழைத்த நேரத்தில் அயராது வேலை செய்த களைப்பில் உறங்குகிறாய்

அழகாக இருக்க அடுத்தவர் மனதை கொள்ளை கொள்கிறாய்

அடுத்தவர் காண அழகை மறைக்க ஆவன செய்கிறாய்

கணவனைக் காண அழகை அழகு படுத்துகிறாய்

எங்கிருந்தோ வந்தாய் !

எங்கிருந்தோ வந்தாய்
என்னுள் புகுந்து விட்டாய்
என்னை அடக்கவும் செய்தாய்
என்னை ஆளவும் செய்தாய்

எனக்கென்று ஒரு கொள்கை
எனக்கென்று ஒரு ஆசை
எனக்கென்று இருந்ததை இழந்து
எனக்கென்று இருந்தது உன் பிடியில்

உண்மை உறைக்க பொய் என்கிறாய்
பொய் உறைக்க உண்மை என நம்புகிறாய்
மை போட்டு என்னை மயக்கினாயோ!
உண்மை உன்னில் அடக்கமோ

உன் கண் அசைப்பில் அடங்கிய என்னை
உன் கண்காணிப்பில் இருக்கச் செய்கிறாய்
உன் போக்கில் நான் இருக்கச் செய்ய
என் போக்கு என்னை விட்டு அகன்றது

தொடங்கி விட்டது பரபரப்பு !

தேர்தல் வந்துவிட்டது
தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர்
தொடங்கி விட்டது பரபரப்பு
தொகுதிக்கு சரியான வேட்பாளர் இல்லை

வேட்பாளர் மீது உடன்பாடு இல்லை
வேறு வழி இல்லை
வாக்கு கொடுத்து விட்டேன்
வாக்கு சீட்டு போட வேண்டும்

மறந்து போன மதத்தை நினைவு படுத்தினார்
மறந்து போன இனத்தை சீண்டி விட்டார்
இனம் வாழ ஜாதி நிலைக்க இனவெறி வர
மறைவாய் மனதில் ஏற்றி வைத்தார் வேட்பாளர்

Friday, 18 October 2013

பிரியாணி ....

நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து தொடர்ந்து
உண்டுவந்தால் ஆயுளும்
அதிகம் !

உடல் வலிமையை நீ
உயர்த்தி நிற்க ;
உருட்டி எடுத்து உனை-நாங்கள் மென்று ரசித்து உண்ண ;
உயர்ந்து நிற்கும் நீயோ
செரிமாணம் கொள்ளச் செய்தாய் !

அரசியல்

இளங்கலை படிப்பில் அரசியல் படித்தேன்
சட்டப் படிப்பு படித்து பட்டம் வாங்கினேன்

அரசியல் நண்பர்கள் அநேகம்
அரசியல் பேசுவதில்லை
அரசியல் பற்றி எழுதுவதுமில்லை

அரசியல் பற்றி எழுத மற்றும் பேச
இக்கால அரசியல் அறிய வேண்டும்

அரசியல் பற்றி வரும் செய்திகள் மாறுபட்டிருகின்றது
இங்கு இருந்தவர் அங்கு போகிறார்
இங்கு இருந்தபோது ஒன்று சொல்கிறார்
அங்கு போய் மாற்றுக் கருத்து சொல்கிறார்
அரசியல் நிலை பற்றி ஒரு செய்தித்தாள் ஒன்று சொல்கின்றது
அரசியல் நிலை பற்றி மற்றொரு செய்தித்தாள் அதே நிகழ்வை மாற்றிச் சொல்கின்றது

அரசியல் பற்றி பேச அரசியலில் இருக்க வேண்டும்
அரசியல் பற்றி பேசினால் சிறைக் கதவு திறந்திருக்கும்
முழு அதிகாரம் பெற்ற அதிகாரம் முழுசாக விழுங்குகிறது
அனைத்து அதிகாரமும் விழுங்கவே செய்கின்றது

"All power tends to corrupt and absolute power corrupts absolutely."

நீ தான் என் நிழல்


என்னை நீ  தொடர்கிறாய்
என்னைப் போல் நீ இருகிறாய்
என்னைப் போல் உணர்க்கு உணரவில்லை

நான் நடந்தால் நீ நடக்கிறாய்
நான் நின்றால் நீ நிற்கிறாய்
நான் சிரித்தால் நீ சிரிக்கிறாய்

நான்  கத்தினால் ஒலி வருகின்றது
நான் கத்தினால் நீ நான் கத்துவதுபோல் காட்டுகிறாய்
நான் உறங்கப் போனால் நீ ஓய்வு கொள்கிறாய்
நான் இருளிலும் வெளிச்சத்திலும் உலா வருகின்றேன்
நான் இருளில் வர நீ மறைந்து விடுகிறாய்

நீ என்னின் சரியான பிரதியாய் இருக்கிறாய்
நீ என்னைத் தொடரும் நண்பன்
நீ என்னைப் போல் உணர்வு பெற்றிராததால்
நான் உன்னை அறிந்து கொள்ள முடியவில்லை
நான் இல்லையேல் நீ இல்லை
நீ என்னுள் அடக்கம்

செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்

கொல்லையடித்து தர்மம் செய்வான்
சாராயம் விற்று இனாம் கொடுப்பான்

செயலில் நல்வழி வேண்டும்
சேர்த்த வழியிலும் நல்வழி இருத்தல் வேண்டும்

இறைவன் பெயரை சொல்லி அறுக்காத கோழி சேர்த்த உணவு
இறைவன் பெயரை சொல்லி உண்பதால் சரியாகி விடுமோ !

முடிவு நன்றாக இருத்தல் வேண்டும்
செயல் தவறாக இருக்கலாம் என்பது கோயாபல்ஸ் தத்துவம்

பொய் சொல்லி வென்று விடு
வெற்றிதான் நமக்கு இலக்கு என்பது மடமை

செயலும் முடிவும் நேர்மை வழி வர வேண்டும்
நேர்மை வழி வந்த முடிவு நிலையானது ,
மார்க்கம் காட்டிய வழியானது

Thursday, 17 October 2013

சொல்ல விரும்புவது


சொல்ல விரும்புவது உண்மை
சொல்ல மறந்தது செயல்

சொல்லாமல் செய்தது தர்மம்
சொல்லியும் செய்யாதது வீம்பு

பார்த்து ரசித்தது இயற்கை
பார்க்காமல் ரசித்தது கனவு

கேட்டு ரசித்தது இசை
கேட்டு ரசிக்காதது அழுகை

நடக்கும் என்று நம்புவது நம்பிக்கை
நடக்காது என்று நம்புவது அவநம்பிக்கை

Wednesday, 16 October 2013

மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு

பிறையின் காட்சி வளரும் குறையும்
மனிதனின் வளர்ச்சி வளர்ந்து மறையும்

பிறையின் காட்சி மறைந்தும் வரும்
மனிதனின் வளர்ச்சி வளர்ந்தும் மறைந்து போகும்

பிறையில் குறை இல்லை
பிறை பார்ப்பதில் குறை உண்டு

குறை சாட்சி தீர்ப்பில் குறைவாகிவிடும்
குறை பார்த்த வாழ்வு சிறையாகிவிடும்

நிறை கண்ட வாழ்வு நிம்மதி தரும்
நிறை செய்த நன்மை சுவனம் தரும்


மறை ஓதி மறை வாழ்வு வாழ்தல் உயர்வு
மறை ஓதி மறை வாழ்வு வாழ மறுத்தோர் நிலை தாழ்வு

கறை கண்டால் மனம் சுருங்கும்
நிறை கண்டால் மனம் மகிழும்

வெண்மை நிறம் சமாதானம் சொல்லும்
வெண்மை நிறம் விரும்பி உடுத்தல் பெருநாளின் சிறப்பு

வேத வழி நாடாத வாழ்க்கை !



வடிக்கும் காலமும் தொடர படிக்கும் காலமும் வளர்கிறது பெண்களிடத்தில்
கற்காத சமுதாயம் கிடப்பில் கிடக்கும்
கற்காத சமுதாயம் நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கும்

வேதம் படித்து வீம்பு பேசுவோர் நிலை மாற வேண்டும்
வேதம் படித்தல் அன்புடன் பேசி மற்றவரை மதிப்பதற்கே

வேதம் படித்தோர் கருத்தால் விளக்கத்தால் போராடுகின்றனர்
வேதம் படிக்காதோர் வேதம் படித்தோர் நிலையை தொடர்கின்றனர்

பார்பவருக்கு வேதம் போராட்ட குணத்தை வளர்த்து விடுமோ! யென எண்ணுகின்றனர்
வேதம் படித்ததில் குற்றமா ! வேதம் கற்பித்தலில் குற்றமா !

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் Nidur-Neivasal Eid (+playlist)

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள்
Nidur-Neivasal Eid-Ul-Ada

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் தருணங்கள்

Assalamu Allikkum

Warmest Eid Greetings with wishes for you, friends and family
May this Eid is full of blessings to all of us, Eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.

Ya Allah, I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Tuesday, 15 October 2013

EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013


Assalamu allikkum

warmest Eid Greetings with wishes for you,friends and your family
May this Eid Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends,
eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.

eid-ul-ada (may you have a blissful Eid) everyone!

I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியில் பூத்த ரோஜா மலர்


பெற்றவளை அறியேன்
பெற்ற கரு உருவாக்கியவனை அறியேன்

பெறுவதற்கு காரணமான காம காமுகனை அறியேன்
பெற்றவள் காரணமில்லாமல் சாக்கடையில் எறிந்தவளை அறியேன்

நான் அறிவேன் காரணத்திற்காகத்தான் நான் வாழ்வதனை
நான் அறிவேன் காரணத்திற்காக என்னை இறைவன் உயிர்பித்தானென்று

உற்றார் உறவினர் இல்லை உதவி செய்ய
மற்றோர் உறவற்றவர் கூசாமல் குறை சொல்லி செல்கின்றார் 

நான் செய்த உதவிகளை மறந்து நிற்கின்றார்
நான் போடும் பிச்சைகளை பகிர்ந்து உண்கின்றார்

சாக்கடையில் வளர்ந்த ரோஜா செடியின் பூக்களை  தலையில் வைத்து மகிழ்கின்றார்
சாக்கடையில் வீசப்பட்டு வெளியில் வந்து வளர்ந்தான் புகழ் வளர மறுக்கின்றார்

காரியம் மென்றால் கை கட்டி நிற்கின்றார்
காரியம் முடிந்தபின் கை கொட்டி சிரிக்கின்றார்

இறைவனது படைப்பை ஏளனம் செய்கின்றார்
இறைவனால் இவர் ஏளனப் படுத்தப் படுவார் என்பதனை மறக்கின்றார்

இறைவா நான் அவர்களை யேசவில்லை
இறைவா நான் அவர்களை மன்னிக்கவே செய்கின்றேன்

Monday, 14 October 2013

கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்


அலைபாயும் கண்கள் ஆண்கள் கண்கள்
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்

ஆண்களை அறிய அவர்கள் செயலைப் பார்
பெண்களை அறிய அவர்கள் கண்களைப் பார்

பெண்களின் இதயம் ஓர் ஆழ் கடல்
ஆழ் கடலில் மூழ்கி முத்தைப் பெறு

பெண்களின் உள்ளம் அறிய கண்களை உற்று கவணி
பெண்களின் உள்ளம் கண்களில் ஒளிந்து உள்ளது

ஆண்களின் கோபம் இடியோடு வரும் மழை
பெண்களின் கோபம் இடியற்று கொட்டும் அருவி

ஆண்களின் நட்பு காரியம் நாடி நிற்கும்
பெண்களின் நட்பு மனதை நாடி நிற்கும்

ஆண் சேர்த்து மனைவியிடம் கொடுப்பான்
பெண் சேர்த்து தாயிடம் கொடுப்பாள்

"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்"

"காரிகை கற்று கவி பாடுவதிலும், பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே " கேட்டது.

"எத்தனையோ ஊமைக் கவிகள் உலகில் பிறந்து மறைந்திருக்கிறார்கள்" படித்தது

கவிதைக் கண்ட போது
எந்தன் மனம் மயங்கும்

கவிதையை யழுத மனம் விரும்பும்
கவிதை யழுத யாப்பினம் அறியேன்

கவிதை யழுத அறிந்தவர் இறைவனின் அருட்கொடை பெற்றவர்
கவிதையை படிக்க அறிந்தவர் கல்வியைக் கற்றவர்

கவிதையை படித்து புரிந்த அறிவு விளக்கம் நாடி நின்றது
கவிதையை படித்து புரிந்தவர் பாமரர் அல்லர்

கவிதையை யாக்கத் தெரியாமல் போனது
கவிதையை யாக்க இறைவன் அருள் கிடைக்காமல் போனது

இறைவனை வேண்டி நிற்கிறேன் கவிதை யாக்கும் அருளை வேண்டி
இறைவனை வேண்டி நிற்பதுடன் கவிதை யாக்க படிக்கிறேன் தள்ளாத வயதிலும்

முயற்சி நம் கையில் விட்டான் இறைவன்
முடிவை அவன் கையில் வைத்துக் கொண்டான்

நல்லதே நடக்குமென்ற நம்பிக்கை
இறைவன் மீது கொண்ட நம்பிக்கையோடு இணைந்தது

Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது



Assalamu Alaikkum
How to Perform Hajj & Umra-step by Step pictures! + HISTORICAL PLACES OF MAKKAH & MADINA
May this EID-UL-ADHA Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!

S.E.A.Mohamed Ali Jinnah, ("nidurali")
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Sunday, 13 October 2013

இந்த கொள்கை உயர்வைத் தரும் _ எது உண்மை ?


இந்த உலகம் நமக்கு
நிலையானதல்ல தற்காலிகமானதே 

இந்த செயல் நமக்கு
நன்மையும்  தீமையும் சேர்ந்த கலவை

இந்த உள்ளம்  நம்மை
நன்மையை நோக்கி உயர்த்துவது  உயர்வு

இந்த  நமக்கு
நன்மையை நாடி உந்துதல் சிறப்பு

இந்த வாழ்க்கை நமக்கு
உயர்வைத் தந்து  தாழ்வை தகர்க்க் வேண்டும்

இந்த காதல் நமக்கு
அனுமதிக்கப் பட்டதாய் மகிழ்வை தர வேண்டும்

இந்த ருசி நமக்கு
மனிதருக்கு மனிதர் மாற்பட்டது 

இந்த கலவி வரும் வழி
கற்றதனால் வரும் அனுபவத்தால் சிறப்படையும்

இந்த பெற்ற செல்வம்
சேர்த்த முறையும் செலவிடும் முறையும் நற்செயலாய் அமைதல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
எது உண்மை ?

 இந்த உலகம்
 நமக்கு
 நிலையானதா தற்காலிகமானதா

 இந்த செயல்
 நமக்கு
 நன்மையா தீமையா

 இந்த உள்ளம்
 நம்மை
 உயர்த்துமா தாழ்த்துமா


இந்த பார்வை
 நமக்கு
 பலமா  பலவீனமா

இந்த வாழ்க்கை
நமக்கு
உயர்வா தாழ்வா

இந்த காதல்
நமக்கு
கூடுமா கூடாதா

இந்த ருசி
நமக்கு
நல்லதா கெட்டதா

ஆடையில் ஒரு இழை குறைந்தாலும் ஆடை சிறப்பாகாது

Say Something Nice- நல்லதைச் சொல்
 

வேலை என்ற வலையில் சிக்கினேன்
வேலை எனக்கு கலையாக இருந்தது

ஒரு வாரம் ஓயாத வேலை
ஒரு வாரம் செய்த வேலையால் சிறிது தொய்வு

தொய்வு தேடியது ஓய்வு
ஓய்வு கொடுத்தது உத்வேகம்

ஒரு வாரம் பார்க்காத நண்பர்களைப் பார்த்தேன்
ஒரு வார்த்தை சொன்னார்கள் 'ஏன் மெலிந்து விட்டாய்'

நண்பர்கள் சொன்னது மனதை வாட்டியது
மனதை வாட்டிய மனம் மெலியச் செய்தது

மெலிந்து விட்டதாக சொன்னதால் மனதில் ஒரு ஏக்கம்
மெலிந்து விட்டதாக சொன்னதால் உடலை கண்ணாடியில் பார்த்தேன்

நான் முன்பைவிட கனத்து சதைப் பிடிப்போடு இருப்பதாக உணர்ந்தேன்
நான் மனைவியை கேட்டேன் நீங்கள் முன்பைவிட இப்பொழுது அழகாக உள்ளதாக சொன்னாள் 

உணர்வுகள் உணர்சிகள்


உணர்வுகள் உணர்சிகள் பல்வகை
உணர்வுகள் உணர்சிகள் மூளையின் வெளிப்பாடு

உணர்வுகள் உணர்சிகள் மனதில் பேசும்
உணர்வுகள் உணர்சிகள் தூண்ட துடிக்கின்றனர்

உணர்வுகள் உணர்சிகள் இயல்பாய் இருக்க மகிழ்வு
உணர்வுகள் உணர்சிகள் இன்பமும் துன்பமும் தரும்

உணர்வுகள் உணர்சிகள் கட்டுபடுத்தப்பட வியாதிகள் வரும்
உணர்வுகள் உணர்சிகள் அஃறினைக்கும் உண்டு

உணர்வுகள் உணர்சிகள் அஃறினையால் (செடி, கொடி,மிருகங்கள்) கட்டுபடுத்தப் படுவதில்லை
உணர்வுகள் உணர்சிகள் உயர்தினையால் கட்டுபடுத்தப் படுகின்றன

Friday, 11 October 2013

அருமையான தத்துவங்களை உள்ளடக்கிய காதல் கவிதைகளைக் கண்டால் .....

தத்துவங்களை தந்தவர்கள் புகழை தட்டிச் சென்றார்கள்
தத்துவம் விஞ்ஞானம் வர வழி வகுத்தது.

தத்துவம் விதை
தத்துவம் தந்த பழம் விஞ்ஞானம்

தத்துவ மனதுக்குள் மோகம் உள்ளடக்கி இருக்கும் .காதல் சுடர் விடும் . காதலிக்கிறேன் உன்னை எப்போதும் என்பதை சொல்லாமல் சொல்லும் .

சில நேரங்களில் Platonic Love ஆகவும் இருக்கலாம். என்னை நேசித்தவர்களை (காதலித்தவர்களை ) கண்டு கொள்ளாமல் போனது நினைவில் வந்து வாட்டுகின்றது .

மலரைச் சுற்றி வரும் வண்டுகள் யெழுப்பும் ரீங்கார ஒலி மனதை வருடுகின்றது.

அதனால்தான் பலவித ஆக்க பூர்வ எண்ணங்களில் மிதக்கிறேன் .
இளமை இன்னும் மனதில் ஊஞ்சலாடுகிறது .

எங்கே தட்டுவது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

கார் வாகனத்திற்கு அந்த காலத்தில் பிளசர் கார் pleasure car என்பார்கள்
பிளசர் pleasure என்றால் மகிழ்வு . காரில் செல்வது மகிழ்வாம் .
இப்பொழுது காரில் செல்வது ஆபத்தாகவும் ,தொல்லையாகவும் உள்ளது.
நான் கார் ஒட்டிக்கொண்டு போனபோது வாகனத்தில் சிறிய கோளாறு வந்து விட்டது ,
அதனை சரி செய்ய ஒரு கார் மெக்கானிக்கை அணுகினேன் .
எனக்கு கார் ஓட்டத் தெரியும் .ஓட்டும்போது அதில் ரிப்பேர் வந்தால் சரி செய்ய தெரியாது .
அந்த மெக்கானிக் எதையோ ஒரு தட்டு தட்டிவிட்டு நாநூறு ரூபாய் கேட்டார் .அதற்கு பத்து நிமிடம் கூட ஆகி இருக்காது .
என்னப்பா! ஒரு தட்டுக்கு இவ்வளவு கேட்கிறாய் என்றேன்
எங்கே தட்டுவது என்பதை நான் தெரிந்திருப்பதற்குத் தான் அந்த தொகை என்றான் .

இப்படித்தான் நம் வாழ்க்கையும் .
மகிழ்வான காலத்தில் நிம்மதியான வாழ்வு
தொல்லைகள் வந்தால் துவண்டு விடுகின்றோம் .
தொல்லைகளை சரி செயத் தெரியாமல்
வாக்குச் சீட்டை போடுகிறோம் வாக்கு போடுவதற்காக
திருமணம் செய்து கொள்கிறோம் மனைவி மற்றும் பிள்ளைகள் வேண்டும் என்பதால்

திறன் வேண்டும் தொல்லைகளை சமாளிக்க

சீதனம் கேட்டதால் (வரதட்சனையால்) இழந்தது

சீதனம் தரவில்லை
மணமகன் வரமாட்டான்
மணமகன் பெற்றோர் சொன்னது

சமாதானம் பேசப்பட்டது
சீதனம் வருமென்று

மணமகன் மணமகள் வீட்டிற்க்கு போனான்
மணமகளை பார்த்தான் கொஞ்சினான்

போன மகன் மணமகள் வீட்டிலேயே தங்கி விட்டான்
பெற்ற மகனையும் இழந்தார்
சீதனத்தையும் இழந்தார்
சீதனம் கேட்ட பெற்றோர்

ஆண் கொடுத்து முடிக்க இருக்க
பெண் கொடுத்து முடிப்பது ஆண்மையோ!

மகர் கொடுத்து முடிப்பதே திருமணம்
சீதனம் கேட்டு முடிப்பது திருமணமாகுமோ!

மணம் இருமனத்தால் இணைவது
மனம் பணத்தால் இணையுமோ !

Thursday, 10 October 2013

கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்!

இறை இல்லம் செல்ல ஆசை இறைவனைத் தொழ
இறைவனுக்காக முதன் முதலில் கட்டிய ஆலயம் கஃபா
இறை முதன் ஆலயம் கஃபாவை நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட
இறை முதன் ஆலயம் கஃபாவை நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட
இறை இல்லத்திற்கு கஃபா (முதல் இறையில்லம்) போவது முடிந்தோர் கடமை

உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டை உணர்த்துமிடம் கஃபா
உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடம் கஃபா
உலக மக்களின் உயர்வு தாழ்வுகளை நொறுக்குமிடம் கஃபா
உலக மக்களின் நிற வேற்றுமைகளை நசுக்குமிடம் கஃபா

நாவசையட்டும், ஈரம் மனதில் சுரக்கட்டும்
கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்
நினைத்ததை நினைவில் நிறுத்தி இறைவனை கேட்டு விடுவோம்
நெஞ்சுருகி அருளாளனும் அன்புடையோடும் கருணையுடையோனுமாகிய அல்ல்லாஹ்விடம் கேட்டு விடுவோம்

Wednesday, 9 October 2013

மன உளைச்சல் மறையும்

என் குற்றங்களை குறைக்க எனக்கு ஆடை
எனக்கு குற்றங்கள் வராமல் தடுக்க் எனக்கு ஆடை
எனது ஆடைகள் பல நூல் இழைகளால் மூட்டப்பட்டிருக்கும்
எனது இதயத்தில் பாவ இழைகள் வராமல் தடுக்க இறை பக்தி

என்னை அறியாமல் பாவச் சுமைகள் வந்தால் இறையிடம் மன்னிப்பு வேண்டுதல்
என்னை அறியாமல் மற்றவர்களை பாதிக்க நேரிட்டால் பாதிக்கப் பட்டவரிடம் மன்னிப்பு கேட்டல்
என் இறைவன் கருணையாளன் யன் மன்னிப்பை ஏற்றுக் கொள்வான்
என் தவறை அறிந்தோர் பாசத்துடன் என் தவறை மன்னித்து மறப்பர்

Tuesday, 8 October 2013

தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தை

தனிப்பட்டவனாக வாழ வழியில்லை
தனிப்பட்டவனாக வாழ துடிக்கவில்லை
தனிப்பட்டவனாக வாழ்ந்து தழைக்க முடியவில்லை
தனிப்பட்ட மரம் தோப்பாக முடியாது

தனிப்பட்ட ஒழுக்கம் நடத்தையால் உயர்வடைகின்றது
தனித்து விடப்பட்ட மனம் சிந்தனையில் உட்படுகின்றது
தனித்த வாழக்கை மக்களை அறியாமல் சிதைகின்றது
தனித்து வாழ்பவன் மக்களால் ஒதுக்கப் படுகின்றான்

வீடு வேண்டும் மனிதருக்கு
கூடு வேண்டும் பறவைகளுக்கு
வீடு வேண்டாம் விலங்கினத்திற்கு
வீடு வேண்டும் மணம் செய்தோருக்கு

மணம் செய்தோர் வாழ விரும்புவர்
மணம் செய்தோர் பரம்பரை வேண்டுவோர்
மணம் செய்தோர்  மனம் விரும்பி நிற்ப்போர்
மணம் செய்து மனம் வெறுத்தோர் மாய்க்க நாடுவார்

மாய்க்க நாடுவோர் தற்குரியாவார்
மாய்க்க நாடுவோர் தன்னை உருவாக்கியவனை மறந்தவர்
மாய்க்க நாடுவோர் தான் போக்கிய உயிரை பெற முடியாதவர்
மாய்க்க நாடுவோர் தான் நாடியதெல்லாம் கிடைக்க நினைப்போர்

நாம் வாழ மற்றவரும் வாழ வேண்டும்
நாம் பெற்ற மகிழ்வும் மற்றவரும் பெறுதல் வேண்டும்
தானும் அழிந்து மற்றவரும் அழிய நினைப்போர் கெடுமதி கொண்டோர்
தான் பெற்ற இன்பம் பெருக வையகம் யென நினைப்போர் உயர்மதி கொண்டோர்

Monday, 7 October 2013

புனித மக்கா - நேரலை. The Holy Makkah Live Telecast.

மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
அன்பானவர்களே, புனித மக்காவை இணையத்தளம் மூலம் 24 மணிநேரம் நேரலை மூலம் நாம் கண்டு மகிழலாம்.                       



மக்கா நேரலை
மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
<embed
  pluginspage="http://www.microsoft.com/windows/windowsmedia/download/"
 showcontrols="1" width="600" src="mms://38.96.148.74/Quran2" 
autostart="1" height="329" type="application/x-mplayer2">

உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

 பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.
மதீனா நேரலை

நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ...

நம்மைச் சுற்றி உத்வேகம் உயர்வாக எங்கும் உள்ளது ...

வாழ்க்கையில் நாம் முற்றிலும் வேடிக்கையாக காலத்தை கழிக்கிறோம்.
நம்மை  கைவிட்டு போன உணர வைத்த நேரங்களும் இருக்கின்றன. ஒரு சாதாரண காட்சி அல்லது சிறிய அனுபவம் நம் நினைவை மறக்கின்றன. இது போன்ற நேரங்களில், நாம் அதில் நம் அனைத்து நம்பிக்கையும்  ஒரு ஈடுபாடும் கொண்டிருந்தால் நம் வாழ்கையையே மாற்றி அமைத்து நம்மை உயர்வாக்கி மகிழ வைத்திருக்க முடியும். அதனை நாம் சாதாரண நிகழ்வாக அல்லது காட்சியாக பொருட்படுத்தாமல் விட்டு விட்டோம். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு காட்சியும் அதற்கென ஒரு சிறப்பை பெற்றிருக்கிறது என்பதனை அறிய வேண்டும்.

Sunday, 6 October 2013

மனித மனம் மற்றவரோடு ஒவ்வாமையாக இருக்க...

மனதில் மகிழ்வு வாழ்வில் உயர்வு

தாயின் வயிற்றில் உருவாகும்போது பல நிற மாற்றம்
தாயின் வயிற்றில் உருவாகும்போது பல உருவ மாற்றம்

உயிர் பெற்ற உடலாக உலகில் தாய் பெற்றபோது ஓர் ஒருவம்
உயிர் பெற்ற உடல் உருவத்தில் வளர்ச்சியடைய மனதில் மாற்றம்

மாற்றம் இல்லா உடல் தோலில் பல வகை மாற்றம் சில நேரத்தில்
மாற்றம் மனதில் உதிக்க வேதனை வந்து சேர உடல் தோலில் சில மாற்றம்

தோலில் வந்த மாற்றம் மனத்தால் வந்ததா!
தோலில் வந்த மாற்றம் உண்ணும் உணவால் வந்ததா !
தோலில் வந்த மாற்றம் உறவாடும் மக்களால் வந்ததா!
தோலில் வந்த மாற்றம் இருக்கும் இடத்தால் வந்ததா!
தோலில் வந்த மாற்றம் அணியும் உடையால் வந்ததா !


மருத்துவர் சொன்ன ஒரே வார்த்தை ஒவ்வாமை
மருத்துவர் கொடுத்த பல மாத்திரையும் ஒவ்வாமை

மனித மனம் மற்றவரோடு ஒவ்வாமையாக இருக்க
மனித உடலிலும் ஒவ்வாமை வருவது இயல்பு

மனமே வாழ்வின் உயர்வு
மனதில் மகிழ்வு வாழ்வில் உயர்வு

Friday, 4 October 2013

நீங்கள் நல்லவரா? அல்லது கெட்டவரா?

 நீங்கள்  நல்லவரா? அல்லது கெட்டவரா?

நான் மிகவும் நல்லவன் .அனைவருக்கும் உதவி செய்வேன் .
உனக்கு பாதகம் செய்தவனுக்கும் ,தொல்லை  கொடுப்பவனுக்கும்  உதவுவீரா?
அது எப்படி முடியும். எனக்கும் ஒரு மனம் ஒன்று உள்ளதே! பழி வாங்க மாட்டேன் ஆனால் உதவ மாட்டேன். துஷ்டனைக் கண்டால் காத தூர போய்விடுவேன்.
அப்படி என்றால் நீங்கள் எப்படி நல்லவராக இருக்க முடியும்?
நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு  கெட்டவனில்லையே!  அவனைக் கண்டு ஒதுங்கி விடுவேன்.
உங்கள் செயல் உயர்வாக ஆக அனைவருக்கும் நன்மையை நாடி உதவுவதுதான் உயர்வு. அவிதம் செய்தால் கெட்டவரும் நல்லவராகி விடுவார் அல்லவா!
நல்லவனுக்கு நல்லவனாக இருப்பது  ஒன்றும் புதுமையில்லை . கெட்டவனுக்கும் நல்லவனாக இருப்பதுதான் உயர்வு.
அதைத்தானே திருவள்ளுவர், ''இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்' என்று கூறுகிறார்.

எத்தனை காலம் சிதைந்து போவோம் சிறப்பற்ற ஆட்சியால் !

காரியத்திற்கு காரணம் உண்டு
காரணம் அற்ற செயல் விரயம்

செயல் மேன்பட திட்டம் வேண்டும்
திட்டமில்லா செயல் தடம் புரளும்

காரணமும் காரியமும் நன்மையை நாடி நிற்க வேண்டும்
நோக்கம் நன்மையை அற்றுப் போக செயல்திறன் விலகிப் போகும்

முடிவு நினைத்தபடி இருக்க செயலில் கீழ்மை இருப்பின் வினையும் வீண்தான்
செயலில் உயர்வாய் இருக்க முடிவும் வெற்றி பெற மன நிறைவுதான்