Monday 20 May 2013

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்

நண்பர்கள் பலர் இருக்க மகிழ்வு
இறப்பு அழைக்க இரு வரிகள் எழுதுவார்கள்
கவிஞர்கள் நிறைய நண்பர்களாக இருக்கிறார்கள்
கவிஞர்களை நண்பர்களாக பெற்றது பெருமையாக இருக்கிறது
என்னைப் பற்றி கவிபாட ஒன்றுமே என்னிடமில்லை
கவிஞர்கள் மீது நான் கொண்டுள்ள பாசம் ,ஈர்ப்பு அளவிடமுடியாதது
'கவிதை' என்று எனக்கு எழுதத் தெரியும் ,கவிதை மீது ஈர்ப்பு ஆனால் கவிதை எழுதத் தெரியாது.
இறந்து விட்டால் நம்மைபற்றி நல்ல வார்த்தைகள் மக்கள் சொன்னால். நமக்காக இறைவனிடத்தில் வேண்டினால் அதுவே இந்த உலகில் நாம் பெற்றதில் உயர்வானது
இருக்கும்போது ,தட்டுங்கள் ,திருத்துங்கள் ,வழிகாட்டுங்கள் இறந்த பின் குறையாக யாரையும் சொல்லிவிடாதீர்கள் .இதுதான் இஸ்லாத்தின் வழிமுறை.

ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.



உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்
கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாள்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இதை முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்.
எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வாக்கு பிரமாணம் (பைஅத்) எடுக்கும்போது நாங்கள் மையத்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது என்றும் வாக்கு பிரமாணம் எடுத்தார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்

4 comments:

  1. /// இறந்து விட்டால் நம்மைபற்றி நல்ல வார்த்தைகள் மக்கள் சொன்னால். நமக்காக இறைவனிடத்தில் வேண்டினால் அதுவே இந்த உலகில் நாம் பெற்றதில் உயர்வானது... ///

    இதை விட சிறப்பேது...? வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. @ திண்டுக்கல் தனபாலன் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. சிந்தனையூட்டும் பதிவு !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. @ சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தங்கள் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete