Saturday 18 May 2013

மனைவி விரும்ப சோகத்தை விழுங்கு மனைவி கொடுத்த உணவை விழுங்குவது போல


சமையலில் கெட்டிக்காரர் யார் ஆணா! பெண்ணா! இம்மாதிரி ஆராய்ச்சி வேண்டாம். பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க  காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.
மனைவி சமைக்கும் உணவு சமயத்தில் நன்றாக இல்லையென்றாலும் அதனை சொல்லக் கூடாது. பெண்கள்  புதுமையான சமைக்க கற்றுக் கொள்ள முயற்சித்தாலும் அதற்கு நாம்தான் ருசி பார்த்து சொல்லவேண்டும். அவர்கள் சமைத்த உணவு அவர்களுக்கு அருமை . ஆனால் எப்படி இருந்தாலும் 'அருமையாக இருக்கிறது' என்றுதான் சொல்ல வேண்டும். 'நன்றாக இல்லை' என்று சொன்னால் அடுத்த சமையல் ஆராய்ச்சி நடக்காது. நாம் வாங்கிக் கொடுத்த சமைக்கும் கலை புத்தகம் ஒதுக்கப்பட்டுவிடும் மற்றும் அது சம்பந்தமாக எந்த தொலைகாட்சி நிகழ்ச்சியையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வந்த சமையல் கலை அவர்கள் அம்மா வீட்டில் கற்று வந்தது.நாம் உண்டு பழகியது. நம் அம்மா கொடுத்த பாச உணவு. அதனால் அது எப்படி இருந்தாலும் நமக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
அவர்களுக்கு சமையல் கலை பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். முருங்கக்காய் போட்டு சாம்பார் செய்வார்கள் கறி குழம்புக்கு  முறுங்கக்காய் போடச் சொன்னால் இது என்ன புதுமை நன்றாக இருக்காது என்று சொல்லி விடுவார்கள். ஆண்களுக்கு எல்லாவற்றிலும் புதுமை தேவை. அதில் உணவும் விதிவிலக்கல்ல.

 வேறு எங்காவது விருந்து சாபிட்டு வந்து அந்த சாப்பாடு அருமையாக இருந்தது என்று வாய் தவறி உண்மையை சொல்லிவிட்டால் "ஆமா நான் சமைத்தாதான் உங்களுக்கு பிடிக்காதே" என்ற வார்த்தை வேகமாக, கோபமாக வந்து கொட்டும்.அதற்கு சமாதானம் செய்யவே நேரம் பத்தாது. காக்கைக்கும்  தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.
நீங்கள் வெளியிலிருந்து  வரும்போது மகிழ்வாக வந்தாலும் அல்லது வருத்தமாக வந்தாலும் அவர்களுக்கு விளக்கம் சொல்லியாக வேண்டும். அது அவர்களுக்கு பிடித்த மாதிரி இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கும் தொல்லைதான்.

பெண்கள் அதிகமாக பேச விரும்புவார்கள்.அதிலும் கலகலவென்று பேசும் ஆண்களைத்தான் பிடிக்கும். நமது சோகத்தினைக் கொட்டக் கூடிய இடமாக மனைவியை மாற்றக்கூடாது .
 பெண்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள் அவர்கள் சமைக்கும் போதே உப்பு, புளி,காரம் பார்பதற்கு ருசி பார்க்க சிறிது வாயில் விட்டு பார்பதிலேயே அவர்கள் பசி போய்விடும். ஆண்கள் வீட்டில் இல்லையன்றால் அவர்கள் சமைப்பதனைக் குறைத்துக் கொள்வார்கள் . அவர்கள் விரும்புவதெல்லாம் நாம் நன்றாக சாப்பிட வேண்டுமென்பதே. அதனால் அவர்களை பாராட்டிக்கொண்டே இருங்கள்.
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் (மறைக்க வேண்டியதை மறைத்து சொல்ல வேண்டியதை சொல்லி) இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் மகிழ்வுதான்.
உங்கள் மனைவியின்   விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்து அவர்களது விருப்பங்களை அலட்சியப்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காததாக இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் .

2 comments:

  1. /// வேறு எங்காவது விருந்து சாப்பிட்டு வந்து அந்த சாப்பாடு அருமையாக இருந்தது என்று வாய் தவறி உண்மையை சொல்லிவிட்டால் ///

    நானும் அப்படித்தான் சொல்கிறேன்... ஆனால் பொய்யை உடனே கண்டுபிடித்து விடுவார்கள்... ஹிஹி...

    /// உங்களுக்கு பிடிக்காததாக இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள்... ///

    இருவரும் அவ்வாறு இருந்தால் - அற்புதமான வாழக்கை...!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன் அவர்களது கருத்துரைக்கு மிக்க நன்றி .
    ஒவ்வொரு வாழ்விலும் ஒரு உயர்ந்த தத்துவம்,படிப்பினை இருக்கும் .அதை நாம் மற்றவர் வாழ்வில் நடந்ததாக சொல்லி மக்களுக்கு நன்மைத் தரும் நிகழ்வுகளை தெரிவிகின்றோம் .

    ReplyDelete