Saturday, 23 March 2013

விரும்பியும் விரும்பாமலும் வந்திருப்பேன் !.

நீ விரும்பியும் நீ விரும்பாமலும் வந்திருப்பேன் .
உதைத்தேன் சிரித்தேன் உணர்ந்தாய்  மகிழ்ந்தாய்
கொடுத்த இடம் பத்து மாதம் தான் அதற்கு மேல் தரமாட்டாய்
அதிகம் இருந்தால் அறுத்து தள்ளிவிடுவாய்

விழுந்தேன் அழுதேன் அரவணைத்தாய் அடங்கினேன்
வளர்ந்தேன் ஓடினேன் விளையாடினேன்
பறந்து வந்து கொசு ஊசி போட துயருற்றேன்
மருத்துவர் வந்து   ஊசி போட்டும் துயருற்றேன்
போட்ட  ஊசி பயனில்லை மாண்டுபோனேன்


பிறக்கும்போது அழுதேன் போகும்போது அழவைத்தேன்
போட்டு அமுக்க இடம் நாடிச் சென்றனர்
இங்கு இடமில்லை என்றனர் சிலர்
வாழவும் முடியவில்லை  வீழ்ந்தபின் இடம் கொடுக்க நாதியற்றேன்
எனக்காக அழுகின்றார்கள்....எனக்காக சிரிக்கின்றார்கள் ..எனக்காக சண்டையும்  போடுகின்றார்கள்..
பிறக்கும்போது நலம் நாடி அம்மா   தொப்புள் கொடியை
அறுத்துப் போட்டாள்
இறக்கும்போது உற்றார் உறவினர் ஊரார் உறவினை அறுத்துப் போட்டார்

வேதம் படித்தோர் வீம்பு செய்தனர் .
வேண்டாத விவாதம் செய்தனர்
வேதமும் வேண்டாம் விவாதமும் வேண்டாம் என வேடிக்கைப் பார்த்தனர்
விளையாட்டுப் பொருளை வைத்து விளையாடினேன்
விளையாட்டுப்  பொருளாக என்னை வைத்து விளையாடுகின்றனர்

No comments:

Post a Comment