Wednesday 27 March 2013

'மீன் ஆனம் சரியாப் போச்சு!

'அத்தா பசிக்குது !.அம்மாவை பசியாற ராத்திரி மீன் ஆனம் கொடுக்கக் சொல்லுங்கப்பா!'

'மீன் ஆனம் சரியாப் போச்சு .சொன்னா கேளுடா ! விடியல் முன்பு எழுந்து பள்ளிவாசலுக்கு சென்று தொழ வேண்டுமென்ற ஆர்வமில்லை ஆனால் ஆனத்திலே மட்டும் ஆசை உனக்கு' என்று பையனின் அம்மா சொல்கிறாள்

பார்க்க வந்த நண்பர் காதில் இந்த சொற்கள் தாக்கியது போலும் .அவர் கேட்கிறார் .
'அத்தா ,பசியாற , ஆனம் ' இவை என்ன சொற்கள் புரியலையே!
நான் சொன்னேன் நாங்கள் அதிகமாக முறையாக தமிழ் சொற்களைத்தான் பயன்படுத்துவோம்.அவை உணவைவிட முக்கியமானது எங்களுக்கு.

இறைவனை வணங்கு என்றும் சொல்வதில்லை . இறைவனை தொழு என்றுதான் சொல்கின்றோம். இறைவனை தொழ பலர் சென்று தொழுமிடத்திற்கு பள்ளிவாசல் என்றும் சொல்கின்றோம்
.
'காலை டிபன் முடிந்ததா?'
' இன்று இரவு எங்கள் வீட்டில் டிபன் என்கிரார்கள் ' இந்த வார்த்தை
ஆங்கிலேயர்கள் மாலை நேரத்தில் ஒரு சிறிய பானம் அல்லது சிற்றுண்டி நொறுக்குத் தீனி தின்பதற்கு பயன்படுத்த நாம் அவர்களிடமிருந்து அந்த 'டிபன்' சொல்லை சோற்று உணவு சாப்பிடாமல் இருப்பதற்கு மற்ற இட்லி ,தோசை,வடை போன்ற உணவுக்கு  வழக்குச் சொல்லாக பயன்படுத்துகின்றோம். 


அத்தாவைப் பற்றி அறிய வேண்டாமா !

நம் வீட்டுக்கு மாற்று மார்க்க நண்பர்கள் வந்தால் நம் தந்தையை 'அப்பா' என அறிமுகப் படுத்துவோம். காரணம் அத்தாவை அவர்கள் அப்பாவென்று அழைப்பதால். அதுமட்டுமல்லாது 'அத்தா' தமிழ் வார்த்தை அல்ல அப்படி சொல்வது தவறு என்றும் நம் அனைவர் மனதிலும் ஒரு தவறான கருத்து.
தந்தையை 'அத்தா' என்று அழைப்பதுதான் அழகான பழந்தமிழ்ச் சொல் .

காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிது -கலித். அ0:

விளக்கம் : புதல்வா; யாவராலும் விரும்பப்படும் அழகினையுடையாய் 'அத்தா அத்தா' ஏன்று சொல்லும் நின் இனிய மழலை மொழி கேட்டல் இனிமையுடையது

அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.

பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.

அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.

"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.

"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்
 " சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் . "அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"" என்ற பாடலில் அத்தா என்ற சொல் வருவதை கவனிக்கலாம். அப்பன் -அப்பா, அத்தன் - அத்தா. தகப்பன் அல்லது தலைவன் என்ற பொருள் படும்.


தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக, தமிழ் முஸ்லிம்கள் உறவு முறைகளுக்கு பயன்படுத்தும் வார்த்தை அப்பா - தாத்தா, அம்மாவின் தந்தை, அப்பாவின் தந்தை

No comments:

Post a Comment