Wednesday 20 March 2013

முத்தங்கள் பல வகை.

முத்தங்கள் பல வகை.நெற்றியில் கொடுக்கும் முத்தம் பாசத்தை வளர்க்கும்.

.முதல் முத்தம் மறக்க அடுத்த முத்தம் தொடரும் .ஒரே முத்தம் முழுமையாகிவிடாது முத்தத்தைப் பொறுத்தவரை . தொடர, தொடர தெவிட்டாதது முத்தம்தான்.அது மனதோடு தொடர்புடையதால் எண்ணங்கள் மாற சுவையும் மாறும். முத்தம் கொடுக்கப்பட்டவரின் உறவுடனும், இடத்தினையும் பொருத்து சுவையும், உணர்ச்சித் தூண்டுதலும் மாறுபடும்.

“தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள.

தாயின் முத்தம் பாசத்தை வளர்க்கும்
தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல்,அவர்களிடையே மன அழுத்தம் குறையும். தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே! என்ற சோகம் கொடுமையானது. கட்டியவளிடம் நிகழும் காலத்தையும்
பெற்றோரிடம் கடந்த காலத்தையும்
மனம் மகிழ மனம்விட்டு கதைக்க வேண்டும்


முத்தம் கொடுக்கப்படுவதற்கு முன் கொடுக்கப்படுவரின் மனதில் இடம் பிடித்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் அது மறுக்கப்படும். முத்தம் கேட்டுப் பெறுவதல்ல. கடையில் விற்கப் படும் பொருளாகாது.அன்பு, பாசம், நேசம் போன்ற வற்றை வெளிப்படுத்தவதற்கும், ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கும்  கிடைக்கும் மாமருந்து.முதல் முத்தம் அது அம்மா  தந்த முத்தம். அது பாசத்தில் கலந்த முத்தம்.அம்மாதான் நமக்கு  முத்தம் கொடுக்க சொல்லிக் கொடுத்தாள். முதலென்றால் கடைசி ..அதனை ஆண்டவன்தான் அறிவான்.  "எதிர்பாராத முத்தம்" இனிய நினைவு தரலாம். முத்தம் கொடுக்காதவர்களும் கொடுக்கப் படாதவர்களும் உலகிலில்லை.
  ஆண்களாகிய நீங்கள் மிருகங்களைப் போல் நடந்து (தாம்பத்ய உறவு) கொள்ளாதீர்கள் .(உறவுக்கு முன் )தூது அனுப்புங்கள்,அதன் பிறகு தாம்பத்ய உறவு கொள்ளுங்கள்  என்று நபி (ஸல்)கூ றியபோது,  தூது என்றால் என்ன?என்று நபித் தோழர்கள்  கேட்டார்கள். அது முத்தங்களைப்  பகிர்ந்துக் கொள்வதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.தாம்பத்ய உறவுக்காக மட்டும் இன்றி, சாதாரணமாகவும் மனைவியரை முத்தமிடுவது நபிகளாரின் நடைமுறை.   
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் சிறு குழந்தைகளை முத்தம் இடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தம் இடுவது இல்லை என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது உள்ளத்தில் இருந்து அன்பை கழற்றி விட்ட பின் உமக்காக நான் என்ன செய்ய முடியும்? என்று கேட்டார்கள்.மேற்கண்ட நபிமொழி குழந்தைகளை, சிறுவர்களை முத்தமிட வேண்டும் என்றும், முத்தம் இடுவது அன்பின் வெளிப்பாடு என்றும், முத்தம் இடாதவன் உள்ளத்தில் அன்பு இல்லை என்றும் தெளிவாகிறது.

No comments:

Post a Comment