Sunday, 24 March 2013

முடிவின் இருதியே முழுமையின் துவக்கம்.

 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாகிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் . நாம் நினைத்தது  முழுமையாக கிடைக்காது  அப்படியே  அது கிடைத்து விட்டாலும்  அதன் சுவையை ,மகிழ்வை நாம் அனுபவிக்க முடியாது .

 குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம் .திருமண வாழ்வும் அதைச் சார்ந்ததுதான் . நம்மால் முடிந்தவரை  வாழ்வை மகிழ்வாக்கிக் கொள்ள  விட்டுக் கொடுக்கும் மனதுடன்  நல்லதை பாராட்டி கெட்டதை  மறந்து  சிறப்போடு  வாழ  முயல வேண்டும் . கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.
இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.


நீண்ட காலப் பிரிவு,இல்லற சுகத்தில் ஏமாற்றம்,தம்பதியரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போவது,மனைவியிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும் மரியாதையும் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய கனிவும் அரவணைப்பும் குறைந்து காணப்படுவது.

மனைவி வெறும் இச்சையை அடக்க வழி உண்டாக்கும்  இயந்திரமல்ல  மனைவி நம் இன்ப துன்பங்களுக்கு பங்கு வகிப்பவள். அதனால் நாம் மகிழ்வு அடைய முயலும் போது அவளையும் மகிழ்விக்கும் அளவிலேயே அனைத்துமிருக்க முயல வேண்டும் .

No comments:

Post a Comment