உன் மனைவி மீது பாசம் கொள் .உனது மகளின் கணவர் உன் மகள் மீது எவ்விதம் பாசம் கொள்ள விரும்புவதைப் போல்
உன் கணவனை நேசி. உனது மகனின் மனைவி உன் மகன் மீது எவ்விதம் நேசம் கொள்ள வேண்டும் என்று நீ விரும்புவதைப் போல்
குறிப்பு : மருமகள் மகனை மடக்கி தன்னை மறக்கச் செய்கிறாள் என்பதைப் போல் அல்ல
மற்ற குழந்தைகளை நேசி உன் குழந்தைகளை நேசிப்பது போல்
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
நீ பொருள் சேர்க்க விரும்புவதுபோல் மற்றவர்களும் சேர்த்து சேமிக்க வேண்டுமென விரும்பு
மற்றவர்கள் நலமாக இருந்தால்தான் நாமும் உயர்வாக இருக்க முடியும்
நீ சுவனம் போக விரும்புவதுபோல் மற்றவருக்கும் அந்த விருப்பம் வர வேண்டுமென விரும்பு
நம்மை மற்றவர்கள் நேசிக்க வேண்டுமென விரும்புவதுபோல் நாமும் மற்றவர்களை நேசிக்க வேண்டுமென ஆர்வம் கொண்டு செயல்படு
ஒவ்வொரு காரியத்திற்கும் அதன் பிரதிபலன் உண்டு என்பதனை நம்பி செயல்படு
சுழலும் உலகில் சுற்றமும் ம் சுற்றி சுற்றி வரும்
நாமும் சுற்றி வந்து சுற்றத்தையும் நட்பையும் தேடிக் கொள்வதுதான் உயர்வாக முடியும்
No comments:
Post a Comment