உண்டவன் உண்டதில் உப்பில்லை என்பான்
உப்போடு கொடுத்ததும் மகிழ்வைத் தரவில்லை
உண்டவனுக்கும் நன்றியுமில்லை
பசித்தவனுக்கு பண்டமில்லை யென்பார்
பார்த்தும் பாராமுகமாய் போய் விடுவார்
மிஞ்சியதை குப்பையில் கொட்டி விடுவார்
மிஞ்சியதையும் தந்துதவாமல் பாவத்தை சேர்த்து வைப்பார்.
வேண்டியவன் வாடி நிற்க
வேண்டாதவனுக்கு வேதனையோடு தருவார்
கொடுக்க வேண்டியதை கொடுக்க மனமில்லை
கொடுக்க நினைப்பவரின் மனதையும் கெடுக்க மனமுண்டு
‘ஈ’யென்று பற்களைக் காட்டி ஈனத் தொழில் செய்வார்
இடுவாரையும் இடாமல் கெடுப்பார்
இவர் வாடும் நேரம் வெகு தூரமில்லை
இவர் அறியாமலேயே இவரை வந்தடைய
No comments:
Post a Comment