Monday, 23 September 2013

வண்ணத்துப் பூச்சி போல் பறக்கும் மனம்


 சில நேரங்களில் வண்ணத்துப் பூச்சி போல் பறக்க நினைக்கிறேன்
பல நேரங்களில் மனமும் பட்டாம்பூசசி போல் பறந்து, பறந்து போகும்

போராட்ட மனது திசை அறியாது முதலில் தேங்கி நிற்கும்
மேகத்தின் மோதல் இடியாய் ஒலியெழுப்பி வருவதற்குள் முதலில் மின்னலாய் ஒளி வருவதுபோல்

வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ண நிறங்களில் பறந்து திரிவதைக் காண
படபடத்த மனதும் போராட்ட மனதை மறந்து பறந்து போகும்

ஓசை யெழுப்பும் காற்றே உன்னோடு யென்னையும் உயரமாக தூக்கிச் செல்
ஓசை எழுப்பாமல் உன்னோடு உயர வருகின்றேன்

இருந்த இடம் மறையும் வரை தூக்கிச் செல்
பறந்து செல்லும் பனி உறைந்த மேகத்தில் விட்டு விடு



மேக ஓட்டத்தை திருப்பி நீரின்றி தவிக்கும் தரையில் மழையை பொழியச் செய்கின்றேன்
மேகம் பொழிந்த மழையோடு நானும் தரைக்கு வந்து தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு நீரை தருவேன்

சேர்த்து வைத்த நீரை விவசாயம் செய்ய உதவுவேன்
சேர்த்து வைக்கும் மனதோடு விவசாய நிலத்தை விற்பதை தடுத்து நிறுத்துவேன்

நீரை புட்டியில் வைத்து அடைத்து விலை பேசி விற்க மாட்டேன்
நிலத்தடி நீரும் வற்றிப் போக விட மாட்டேன்

1 comment:

  1. வித்தியாசமான சிந்தனை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete