Thursday 19 September 2013

தமனியிலிருந்து குருதி ஊடுருவியது தரைக்குள்

எத்தனை சிவப்பு  நீரோடைகள்,
தமனியிலிருந்து குருதி  ஊடுருவியது தரைக்குள்
தாய்நாட்டில் தரம் பார்த்து இனம் பார்த்து தலையை துண்டிக்கின்றார்
அவர் பேச முடியும் என்றால் அது அரசியல் தலைகள் தந்த துணிவு

இறந்தவர்களின் துர்நாற்றம்,
தேடியது பரிச்சயம், மத்தியில் சடலங்களை,
உயிரற்ற உடல் உறுப்புக்களை கண்டு
மூச்சு தடுமாறியது  கண்ணீர் வழிந்தது

அரவணைப்பு ஒரு இறுதி சுவடு,
உதடுகள் இடையே ஏற்கனவே ஒரு ஓட்டல்
அடிக்கிறாய் இதயங்களை குறி பார்த்து
இன்னும் அடித்து அது நாடு  முழுவதும் பரவ முயற்சி

இனப்படுகொலை,
இதயமற்ற  மோதல்,
துக்கம் இசையாக  எதிரொலித்தது ,
வாழ்க்கை வட்டத்தில் சிக்கி கொண்டார்,
பெரும் பாதிப்புக்குள்ளாகின்றார்
குற்றம் செய்தோரை தண்டிந்தால்
இன்னும் செத்தோரை காண்பாய்  என மிரட்டல்
அவர்கள் இந்த இனப்போரை விரும்புகிறனர்

என் தந்தை மொழி, என் தாய்  மொழி, என் இருப்பிடம் இங்கிருக்க
உன் தந்தை மொழி, உன் தாய்  மொழி, உன் இருப்பிடம் இதுவல்ல என செப்புகிறார்

பூமியிலும் மேலும் பூமிக்கு கீழும்  உனக்கோர் இடம் தேட அலைய வேண்டும்
புகழ் பெற்ற பூமியாம் புகழ் பெற்ற கலாச்சாரமாம்
புகழ் பேசி பாடலும் பாடமும் படிகின்றார்
புகழும் பாடலும் பாடமும் பழைய சரித்திரமாக்க
புதிய கேடுகெட்ட சரித்திரம் புனைய விரும்புகிறார் கேடு கெட்டோர்


No comments:

Post a Comment