மகனை (சிறுவன் )அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குச் சென்றேன் .
சலவைகள் கல் பதியப் பட்ட தரை .
நீரால் துடைக்கப் பட்ட தரை .
வழுக்கி விழுந்தான் மகன்.
அடிப்பட்டதால் 'ஓ' வென்று அலறினான்.
அதன் எதிரொலியாக 'ஓ' வென்ற ஒலி அவன் காதில் விழுந்தது.
மகனுக்கு கோபம் வர 'யாரடா அவன் என்னைப் பழித்துக் காட்டுவது' என்றான்
அதுவும் எதிரொலியாக 'யாரடா அவன் என்னைப் பழித்துக் காட்டுவது' என வந்தது.
உடன் மகன் 'உன்னை எனது அப்பாவிடம் சொல்லி அடிக்கச் சொல்வேன் என்றான்' .
அதுவும் எதிரொலிக்க
அப்பா பாருங்க 'எவனோ என்னை கிண்டல் செய்கிறான் ' என்றான் .
மகனே 'இதை எதிரொலி என்பார்கள். ஆனால் இதுதான் வாழ்க்கை .
நீ செய்யும் செயலுக்கு தகுந்ததுபோல்தான் உனக்கு பலனும் கிடைக்கும்.
நாம் இந்த உலகில் அதிக அன்பு மக்களிடம் செலுத்தினால் நாம் அதிக அன்பான மக்களைப் பெறலாம் . நம் திறமையைக் கொண்டு அதன் பலனைப் பெறலாம்
வாழ்க்கை ஒரு தற்செயல் அல்ல ..அது ஒரு பிரதிபலிப்புதான் .
இந்த உலகில் நன்மையை அதிகம் செய்தால் மருலோகத்திலும் இறைவன் உன்னை உயர்ந்த இடத்தில சுவனத்தில் இருக்கச் செய்வான் ' என்று அவன் மனதில் ஏற்றி வைத்தேன்

No comments:
Post a Comment