Sunday, 22 September 2013

முடிவு நம் அனைவருக்கும் ஒன்றுதான்

ஆட்சி செய்யும் மன்னன் தன் நாட்டை பார்க்க உலா வந்தான்.
மாமன்னனைப் பார்க்க மக்கள் குழுமி நின்று வேடிக்கையும் ,வரவேற்பும் செய்தனர்

மன்னன் ஒரு ஏழை குடிமகன் தன்னை பாராமுகமாக தனது வேலையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான்
மன்னன் அந்த ஏழை குடிமகனை அழைத்து 'அனைவரும் என்னை பார்க்க, வரவேற்க வந்துள்ளார்கள் நீ மட்டும் பாராமுகமாய் இருப்பதின் காரணமென்ன என்று வினவினார்'

ஏழை சொன்னான்
'சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் போல் ஒரு அரசர் இவ்வழியே வந்தார். அவர் இங்கேயே நோய் வர இறந்து போனதால் அவரது உடலை இங்ககேயே அடக்கம் செய்தனர். அதன் பிறகு ஒரு ஏழை இறந்து போனதால் அரசன் அருகிலேயே அந்த ஏழையின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது .
சில காலங்கள் கழித்து பெரு வெள்ளம் ஊரில் புகுந்தது அதன் விளைவால் அடக்கப் பட்டவர்களின் எலும்புகள் வெளியே தரையில் மிதக்க ஆரம்பித்தன.
மக்கள் அரசர் எலும்புகளை தேட முயன்றனர். அவர்களுக்கு எது அரசர் எலும்பு! என்று அடையாளம் காணமுடியவில்லை. உடல் எலும்பாக வந்த பின் அரசர்! ஏழை! என மாறுபாடில்லாத நிலை வர நான் ஏன் உயிரோடு இருக்கும்போது மாறுபாட்டை நினைக்க வேண்டும். அதனால் நீங்களும் என்னைபோல் ஒருவர். இதில் அதிசியம் ஒன்றுமில்லை அதனால் நான் எனது வேலையை விடுத்து உம்மை பார்க்க வேண்டிய அவசிமில்லை.
முடிவு நம் அனைவருக்கும் ஒன்றுதான்' என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

2 comments:

  1. "முடிவு நம் அனைவருக்கும் ஒன்றுதான்" உண்மையான வார்த்தைகள்

    ReplyDelete