கற்பனைகளும் கவிதைகளும் பகலில் மறைகின்றன
நினைவில் நின்றவைகளை கவிதையாக்கவும் முடியவில்லை
செயலில் செய்ய நினைப்பவைகள் கனவாய் மறைகின்றன
செயல் படுத்தவும் ஒரு திறன் வேண்டும்
முயற்சி இன்றி பலனை நாடும் வேட்கை விரயம்
இறைவன் அனைத்து பறவைகளுக்கும் உணவு அளிக்கின்றான்
இறைவன் அனைத்து பறவைகளின் கூட்டில் உணவை போடுவதில்லை
உலகில் அனைத்தையும் பரவச் செய்தவன் இறைவன்
உலகில் உள்ளவைகளை தேடுதல் பொறுப்புகளை நம்மிடம் தந்தான் இறைவன்
அன்னை மரியம் (அலை) ஆண் துணையின்றி கருவுற்றதும் மகவைப் (ஈசா நபி) பெறச் செய்தவனும் இறைவன்
அன்னை மரியம் (அலை) மகவு பெற்று பசி பெற்றபோது அந்த பசியைப் போக்க உணவை ஊட்டிவிடவில்லை
மரியமே ! அந்த பேரிச்சை மரத்தின் அடிபாகத்தை உலுக்கச் செய் அதில் விழும் பழங்களை உண்டு உன் பசியை ஆற்றிக் கொள் என அறிவுரைப் புகன்றான் இறைவன்
தேடுதலை நம் கையில் விட்ட இறைவன் நம் திறமையை வளர்க்கவே
முயற்சி திருவினையாக்குமென்பர்
No comments:
Post a Comment