Monday, 2 September 2013

உடல் நலம் உந்துதல் சக்தி தரும்

குளிர் சாதனவசதி ஊர்தியில் பிரயாணம்
குளிர் வசதி அமைக்கப் பட்ட கூடத்தில் நிகழ்ச்சி
குளிர்ந்த பாதாம் கீர் குடிப்பதற்கு
குளிர்ச்சி யாக நிகழ்வுகள் அனைத்தும்
சூடான பிரியாணி சாப்பிட உடல் சூடானது
இல்லம் திரும்ப உடலில் பாதிப்பு
எதிலும் ஆர்வமில்லை
கணினியாவது கத்திரிக்கையாவது
உடலில் நலம் போனால் ஓய்வை நாடும்
உணவையும் ஒதுக்கும்

உடலில் நலமிருந்தால்
மனதில் மகிழ்வு அத்தனையும் தேடும்

உடல் நலம் போனால் ஓய்வை நாடும்
உணவையும் ஒதுக்கும் உவகையும் போகும்

உடல் நலம் உந்துதல் சக்தி தரும்
உந்துதல் சக்தி உயர்வை நாடி நிற்கும்

சூடும் சூடும் சேர நலம்
சூடும் குளிரும் சேர நலம் போகும்

+ into  - = -
+ into + = +
+ into - = -
-  into - = +

No comments:

Post a Comment