Tuesday 24 September 2013

உங்களை அறிய தொடருங்கள் உங்கள ஆய்வை!

விழிகளை திறந்து வானத்தை உற்று நோக்குங்கள
விடியலில் கிளம்பும் வெளிச்சம்
பகலில் சுடர்விடும் வெளிச்சம்
மாலையில் மறையும் வெளிச்சம்
தினம் தொடர்ந்து வரும் சூரிய ஓட்டம்

இரவு காலங்களில் மாறி வரும் நிலாவின் வெளிச்சம்
இரவு நேரத்தில் நட்சத்திரக் கூட்டம்
இது தொடர்ந்து வரும் நிகழ்வு
இதன் ஓட்டத்தை மாற்றத்தை உருவாகியது யார்!

அவைகள் சுற்றி வரும் பாதையை
அவைகளுக்கு  அறிய வைத்தது யார்!
அவைகள் சுற்றுவட்ட பாதையில் கிரகங்கள் நிலவு மற்றும் சூரியன்
இவைகளுக்குள் இத்தகைய சரியான இணக்கத்தை யார் காட்டிக் கொடுத்தது

மிதந்து பறந்து செல்லும் மேகக் கூட்டங்கள்
நம்மைச் சுற்றி இத்தனை அதிசியங்கள்
அதனை பார்த்து ரசிக்க பார்வை
அதனை ஆய்வு செய்ய அறிவு
இத்தனையும் தந்தவன் யார்!

நமக்குள் உள்ளே பாருங்கள்
அத்தகைய ஒரு சரியான வரிசையில்
நம் பார்வை மறைந்து நம் உடலில் நாளங்களில் இயங்கும்
கோபம் காதல் வலி பற்றி நாம் உணரமுடியும்
உணர்வுகளை தொட்டு உணர மனத்தால் முடியும்

நம் கண்கள், நம் இதயம் மற்றும் மனதை திறக்க
நாம் அறிகுறிகள் காண பிரகாசமாக  பார்த்தால்
நாம் உண்மையை மறைத்து வைத்திருக்க முடியாது
அது ஆச்சரியத்திற்கு நம்மை அழைத்து செல்லலாம்
சிறந்த வழி நோக்கி நம்மை கொண்டு சேர்க்கலாம்
ஒவ்வொரு நாளும் நமக்கு வழிகாட்டும் ..

இறைவனை அறிய அவனது ஆற்றல் அறிய இதுதான் வழி
இறைவனே இத்தனை மகிமைக்கும் காரணம்
காரணமின்றி காரியமில்லை
காரணத்தையும் காரியத்தையும் அறிய வைத்தவனை
காரணமின்றி இறைவனை தொழாமல் நிற்பது முறையாகிவிடுமா !

உண்ணும் சோறு எங்கிருந்தது வந்தது
அரிசி சோறாக ஆக்கப்பட்டது
அரிசி நெல்லிலிருந்து வந்தது
நெல் செடியிலிருந்து வந்தது
தொடருங்கள் உன் ஆய்வை
இறுதியில் அதன் ஆக்கம் இறைவனையே சாரும் என்பதனை அறிவாய்
"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் இறைவனே உனை மறவோம் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள். -

தேரிழந்தூர் தாஜுதீன் பாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் , தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

2 comments:

  1. "காரணத்தையும் காரியத்தையும் அறிய வைத்தவனை
    காரணமின்றி இறைவனை தொழாமல் நிற்பது முறையாகிவிடுமா !" உண்மைதான்.

    ReplyDelete
  2. எதுவும் இறைவனையே சாரும் என்பது உணர வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete