Monday, 9 September 2013

ஒப்புதலுக்கு ஓயாத வேலை /கல்யாணமாம் கல்யாணம்


திருமணப் பெண்ணிடம் திருமண ஒப்புதல் கையெழுத்து வாங்க இருவர் சென்றனர்.

ஒப்புதல் பெற்று சபையோரிடத்து ஓங்கி உரைத்தனர் 'அஸ்ஸலாமு அலைக்கும் '
என்று.
'அஸ்ஸலாமு அலைக்கும் ' என்று சபையோரிடத்தில் சொன்னது பெண் ஒப்புதல் தந்தமைக்கு மறைமுக விளக்கமாகிவிடும்
பெண்ணின் பத்து விரலுக்கும் பவுனால மோதிரங்கள் போட்டு வைக்க
பெண்ணின் முகத்தை முந்தானையால் மூடி வைக்க
மணப்பெண் ஒப்புதல் பத்திரத்தை படிக்காமல் ஒப்புதல் தர
பெண்ணின் கையை ஒப்புதல் தருமிடத்தில் ஒப்புதல் போடச் சொல்ல
பெண்ணின் கையெழுத்து ஒப்புதலாக இருக்க வைக்க
பெண்ணின் விரல்கள் ஆட கையெழுத்து ஒரு கிறுக்கலாக அமைந்து விட
பெண்ணின் முகமோ பதுமையாக சலனமற்ற நிலையாக நிற்க
பெண்ணின் மனம் படும் பாடு அவளே அறியும் நிலையாக
பெண் சம்மதம் தந்ததற்கு சாட்சியாக கையெழுத்தும் நாங்களும் ஒப்புதல் தந்துவிட்டதாக ஓங்கி சபையோரிடத்து உரைத்துச் சொன்னோம் .

மாப்பிள்ளை கையெழுத்து போட தன் தந்தையைப் பார்க்க அவரும் தலையை ஆட்ட
மாப்பிள்ளை கையெழுத்து போட ,சாட்சிகளாக இருவர் கையெழுத்து போட முடிந்தது திருமணம்
சடங்காக சொனதையே சொல்வதை சொல்லி வாழ்த்தினார் ஒரு பெரியார் .
மற்றவர் வாழ்த்தும் நிலை தொடர பொறுமை இல்லை அதனை கேட்டு அமர
சடங்காக வந்தோம் விருந்து சாப்பிட.
சாப்பிடும் இடத்தை பிடிக்க வந்த மக்கள் வேகமாக நடக்கத் தொடங்கினர்

ஆகிய செலவோ கணக்கில் அடங்கா
தம்பதிகள் ஒப்பந்தம் மற்ற இருவர் சாட்சி இதற்கு இத்தனை சடங்குகள்
'இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment