Thursday 12 September 2013

பாட்டியை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

பாட்டி முகம் பால்  வடியும் முகமானது

பாட்டி அணிந்த கண்ணாடி அவள் முகத்தில் பதிந்துவிட்டது

பாட்டி குனிந்து கண்ணாடிக்கு மேல் பார்வையை செலுத்தி பார்ப்பது தனி அழகு

பாட்டி வேத நூலை படிக்கும் நிலை அவள் மனம் அமைதியடைகின்றது

பாட்டி கடுமையான குளிரிலும் எழுந்து இறைவனை தொழுவது அவளது இறை பக்தியை காட்டுகின்றது

பாட்டி மென்மையாக தனது கடந்த கால வாழ்கையை நம்மிடம் சொல்லி பூரிப்பது அவளது கபடமற்ற மனதை காட்டுகின்றது

பாட்டியை தொட்டு பேசும்போது பட்டு போன்ற அவளது மேனி நம் இதயத்தை மேன்மை படுத்துகின்றது

பாட்டியின் உறவை குழந்தைகள் மிகவும் நேசிப்பது நம் இதயத்திற்கு மகிழ்வைத் தருகின்றது

பாட்டியின் கடந்த கால உழைப்பு அவள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது

பாட்டிக்கென மருத்துவ செலவில்லை ஆனால் அந்த செலவை மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்

பாட்டி வீட்டில் உலா வருவது வீட்டிற்க்கே ஒளி வீசுகின்றது

பாட்டி இல்லாத வீடு பசுமை இல்லாத இல்லமாக மாறிவிடும்

No comments:

Post a Comment