Wednesday, 10 April 2013

அற வழியில் ஆசைப்பட்டு அடுத்த அடி தொடரு...

ஆசை வேண்டும் அது நிறைவேற வேண்டும்
ஆசை வேண்டும் அது நிறைவேற வழி தேட வேண்டும் .
ஆசை வேண்டும் அது பேராசையாக இருக்காமல் இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அடுத்தவர் பொருளை அபகரிக்காமல் இருக்கும் நிலை வேண்டும்
ஆசை வேண்டும் விரும்பிய பொருள்  தனக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காமல் இருக்க வேண்டும்
ஆசை வேண்டும் அது ஆண்டவன் அருளை நாடி இருத்தல் வேண்டும்
ஆசை வேண்டும் அது நிராசையானால் மனம் தளரா உள்ள உறுதி வேண்டும்
ஆசை உண்டாக்கி ஏமாற்றும் மனம் பெறாத ஆசை வேண்டும்

ஆசைப் படுவது மனித இயல்பு .ஆசையற்றோர் முன்னேற்றம் அடைய வழியேது.
ஆசையற்றோர் நிலை தேக்கம் காணும் .ஆசை துன்பத்தை வரச் செய்யும் என்போர் வாழ்கையை விளங்கிக் கொள்ளாதவர். தனி மரம் தோப்பாகாது .தனித்து வாழ விரும்புவோர் தனித்து விடப்படுவார் . அது அவருக்கும் பயன்தராது அவரால் மற்றவரும் பயனடைய மாட்டார் .
ஆசைப்பட்டதால் சமுதாயம் வளர்ந்தது. ஆசை உள்ளத்தோடு இளவயதிலேயே தொடங்கியது. முதல் மனிதர் ஆதம் அவ்வா மேல் ஆசை கொள்ள வைத்தது இறைவனின் நாட்டம் . அது முதல் தொடங்கிய காதலின் ஆசை உலகம் இருக்கும் வரை நீடிக்கும் அதனால் சமுதாயம் பெருகும் .
மரணிப்பதை நேசிக்காதே ,கொள்கைக்காக உயிரை மாய்த்துக் கொள்வது,தற்கொலையை
நாடுவது பலவீனத்தின் அறிகுறி. கொள்கை மீது நம்பிக்கை அற்ற நிலை.
நம்பிக்கை இல்லாத கொள்கை விரயம். கொள்கை .உயர்வானதாக இருத்தல் அவசியம். நினைத்ததை முடிக்கும் வரை நம்பிக்கையை நிலை நிறுத்தி போராடு. அதற்கு வாழ்வை நாடு. .நினைப்பது நடந்தே தீரும் என்ற நம்பிக்கை வேண்டும் அது வரும்போது வரட்டும் .கொள்கை பிடிப்பும் அந்த கொள்கை உயர்ந்த கொள்கையாக மட்டும் இருப்பது மிகவும் அவசியம்


“நீங்கள் இறைவனிடம் கேட்கும்போது மிக மிக அதிகமாகக் கேளுங்கள். ஏனெனில் கேட்கப்படுபவனே உங்களைப் படைத்தவனாக இருக்கின்றான்.” “இறைவனிடம் அவனது அருள்வளத்தைக் கேளுங்கள்.” நபிமொழி இவ்வாறிருக்க நாம் ஏன் இறைவனிடம் கேட்பதில் தயக்கம் காட்ட வேண்டும்.
 ஒட்டகத்தைக் கட்டு ஒட்டகத்தின் பாதுகாப்புக்கு இறைவனின்  உதவியை நாடு .கடமையை செய்யாமல் காரியத்தை நோக்க வேண்டாம்.
One day Prophet Muhammad (peace be upon him) noticed a Bedouin leaving his camel without tying it and he asked the Bedouin, “Why don’t you tie down your camel?” The Bedouin answered, “I put my trust in Allah.” The Prophet then said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi).

நடக்குமென்று நினைத்தது நடக்கவில்லை என்ற நிராசை ஏன்!
முடியுமென்று நினைத்தது முடியவில்லை என்ற தளர்ச்சி ஏன்!
நம்பிக்கை வைத்து செயல்படவில்ல.நம்பிக்கை நம்மீதுமில்லை
நம்பிக்கை இறைவன் மீதுமில்லை

நடக்காமல் போனதும் நன்மையானது என்ற பேருண்மை அறிய வேண்டும்
நடக்காததற்கு நாமே  காரணம் என்ற மனம் வர வேண்டும்
இறைவன் மீது நம்பிக்கை முறையாக செயல்பட்டால் வெற்றியும் தோல்வியும் மனதை பாதிக்காமல் மனதில் அடுத்த முயற்சிக்கு அது உந்துதல் சக்தியாக தொடரும்

நடந்தாலும் நல்லது ,நடக்காவிட்டாலும் நல்லது.நடப்பது நடக்காது அனைத்தையும் இறைவன் நன்மையாக்கினான் என்ற மனம் வேண்டும் .

நம்பிக்கை செயலின் தொடக்கம்
நம்பிக்கை செயலின் ஊக்கம்
நம்பிக்கை தான் வாழ்க்கை
நம்பினோர் கெடுவதில்லை என்பது சான்றோர் சொல்
நம்பிக்கையற்ற செயல் தோல்வியே
நம்பிக்கை நற்காரியத்தின் செயல்பாட்டின் மீது இருக்கட்டும்
நம்பிக்கையற்ற மார்க்கத்தின் செயல்பாடு வீண்
இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கையாகும்

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத்(துறத்தல்) எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.நபிமொழி



Please click here யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே...
Please click here அன்பு மயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ்

2 comments:

  1. நம்பிக்கை பற்றிய வரிகள் அனைத்தும் அருமை...

    வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிகக் நன்றி.
      தங்களது தொடர் சேவையாக மற்றவரை ஊக்குவிப்பது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது .உங்கள் பார்வை படாத வலைப்பூ ,வலைதளமில்லை /வியப்போடு வாழ்த்துகின்றேன் .தக்க சமயத்தில் அறிவுரையும் தந்து தவறை திருத்தவும் செய்துள்ளீர்கள் .பல நேரங்களில் அது மிகவும் பயன்பட்டது

      Delete