தாய்மை என்பது இயற்கை . தாய்மை எப்படி இருப்பது சிறப்பு ? அறிவும் தாய்மையும் ஒன்று சேர்த்தல் வேண்டும் .
அம்மாவுடன் ஒன்று கலந்தது தாய்மை .அம்மா பாசம் காட்டுவாள்.தன் குழந்தை உடல் நலம் குன்றினால் துடித்துப்போவாள். தாய்மையை விட சிறந்தது எதுவுமே இல்லை. தன பிள்ளை சிறந்து விளங்க ஆசைப்படுவாள் .இதற்கு அடிப்படை தாய் கல்வி கற்றவளாய் இருப்பது இன்றியமையாதாகும் . அம்மாவிடம் அறிவின் முதிர்ச்சி இல்லையெனில் அவள் வளர்க்கும் குழந்தையின் அறிவின் வளர்ச்சிலும் முழுமை இல்லாமல் போகும் .அறிவின் ஆற்றல் இல்லாத தாய், கற்றவள் மிகக் குறைவாகவே இருந்தால் நாட்டின் வளர்ச்சி குன்றிவிடும் . தந்தை பொருள் ஈட்ட வீடு விட்டு நீங்கி நிற்கும் நிலையில் தாய்தான் தன பிள்ளைகளிடம் அதிக நேரம் இருக்கும் நிலை .அறிவு பெற்ற குழந்தையாக மாற்றும் பொறுப்பு அவளிடமே உள்ள நிலையில் அந்த தாய்மை கொண்ட அம்மாவுக்கு அறிவும் கல்வியும் அவசியம் .பெண் கல்வி ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்று. சீராட்டி பாராட்டி வளர்க்கும் தாய் பாசம் காட்டுவதோடு நில்லாமல் தனது பிள்ளைகள் சிறந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு அந்த தாய் பெற்றிருக்கும் கல்விதான் அஸ்திவாரம்,அடித்தளம் .
கல்வி கற்பது வேலை வாய்ப்புக்காக அல்ல. இருட்டை நீக்க ஒளி தேவை அறியாமையினை விரட்ட கல்வி தேவை . இருட்டை நீக்க ஒளி தேவை. இருண்ட அறையில் ஒளி கிடைத்து விட்டது .அந்த அறையின் இருக்கும் அழுக்கை நீக்க செயல்பாடு தேவை .அறிவும் கல்வியும் பெற்றதோடு அதனை நல்ல முறையோடு செயல்படுத்தக் கூடிய முயற்சியும் தேவை.
கல்லூரி சென்றால் பெண் கெட்டுவிடும் வாய்பு உள்ளது என்ற எண்ணம் தவறானது . நாம் மறுமலர்ச்சி காலத்தில் உள்ளோம். .ஒரு தவறு ஒட்டு மொத்த தவறு ஆகிவிடாது .மலரை அணிபவள் பெண் .மலரை சுற்றி மனம் உள்ளது போல் நல்ல கல்வி கொண்ட தாயின் அறிவினை சுற்றி அறிவு ஒளி வீசும் வாய்ப்புண்டு .
"தாயின் மடியில் சுவனம் உள்ளது” என்பது நபி மொழி . அது தாய் குணத்தோடும் அறிவோடும் இருக்கும் நிலையில்தான் அவள் வளர்க்கும் பிள்ளைகளும் சுவனப் பாதை நோக்கி நடை போடும் .
ஆண் கல்வி அவருக்கு மட்டும் உதவும்... பெண் கல்வி பரம்பரைக்கே உதவும் என்பதை அருமையாக சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்....