Friday, 26 April 2013

ஆளுமை என்னும் உந்தும் சக்தி அதிகாரத்தை தன்வயமாக்கும்

 ஆளுமை சக்தி பெற்றோர் ஆட்சிக்கு வந்த பின் பெற்ற ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தேவையானது அனைத்தும் செய்வார்கள். அவர்கள் மனதில் தொடர்ந்து ஆட்சி செய்ய ஆட்சியின் ஆசை இருந்துக் கொண்டே இருக்கும். அதன் காரணமாகவே ஊழல் உருவாகிறது. அனைத்து அதிகாரமும் ஊழல் செய்வதாக இருந்தாலும் சர்வாதிகாரம் பெற்ற ஆட்சி முழுமையாக ஊழலில் ஊறிவிடும்.அதன் இறுதி முடிவு படு மோசமாக நிகழ்ந்துவிடும். இந்நிலை ஹிடலரிடமிருந்து தொடங்கியது தற்பொழுது பர்மாவைப் போன்று பல நாடுகளில் காணத் தொடக்கியுள்ளது


சரித்திரத்தில் ஹிட்லர் ஒரு அத்தாட்சி. அந்த மகாபலம் பொருந்திய ஆளுமை சக்தியை  வைத்து  இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது ஹிட்லரின் எண்ணம்.அவரிடம்  இருந்த ஆளுமை சக்தியினால் உலகப் போர் உருவாகி  மடிந்தவர் பலர் .

 ஆட்சி போய்விடும் என்ற பயத்தில் ஆட்சி அதிகாரத்தினை தவறான செயல்களில் பயன்படுத்துவதனை நாம் பார்த்து பயந்து அடங்கி கிடக்கின்றோமே! ஏன்? நம்மில் ஒட்டிக் கொண்டிருக்கும் அடிமைத்தனம் . ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை.

ஆல மரத்தின் விதை சிறுது ஆனால் அது உண்டாக்கும் மரம் பெரிது. உடலின் உருவத்திற்கும் அவன் பெற்றிருக்கும் ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை .மெலிந்த மேனியும், அழகற்ற  தோற்றம் கொண்ட எத்தனையோ பேர் சிறப்பான  ஆளுமை பெற்றவர்களாகத் திகழ்வதனையும்  நாம் பார்க்கின்றோம் .ஆள் பாதி ஆடை  பாதி என்று எண்ணி  தன்னிடம் உள்ள ஆளுமையினை குறைத்து விடக்கூடாது.
நிச்சயமாக உங்களுக்குள் ஒரு ஆற்றல் மறைந்துள்ளது  என்று நம்பி அதனை வெளிக்கொணர  செயல்படுங்கள் .உங்களைவிட தாழ்ந்தவர் உங்களை ஆட்சி செய்வதனை பாருங்கள். அந்த ஆற்றலுடம் ஆளுமை சக்தி பெற்று ஆட்சிக்கு  வந்த பின் நம்மை அவர்கள் ஆட்டி படைக்கும் வேதனையும் நாம் அனுபவிக்கவில்லையா ! அந்த ஆட்சி தொடர அவர்கள் ஈடுபடும் தவறான முறைகளில் மாட்டி அவதிப்படுவோர் பலர் .

நம்மில் இருக்கும் ஆளுமை சக்தி வெளிப்படுமானால் அது நல்ல முறையில் நல்ல நோக்குடன் செயல்பட்டால் இந்த இழிநிலை தொடராது .தொடர் முயற்சி திருவினையாக்கும்  என்று நம்புங்கள். ஆளுமை சக்தியால் கிடைத்த  அனுபவங்களும், ஆற்றல்களும் ஒருங்கிணைப்பும், உந்தும் சக்தியும் வீணாகிப் போய்விடக் கூடாது. நமது  ஆளுமை சக்தியை  வெளிக்கொணர்ந்து நல்ல நோக்குடன் அதனை பயன்படுத்தி அனைவரும் சிறப்பாக வாழ முயல்வோம்

1 comment: