Wednesday, 17 April 2013

யாருக்கும் தங்கமான மனிதர் என்ற பாராட்டு கொடுக்காதீர்கள் !

தங்கமான மனிதர் என்று நல்ல மனம் கொண்ட மனிதரைப் பார்த்து சொல்வார்கள்.
அவர் ஒரு பத்தரை மாற்றுத் தங்கம் என்றால் குற்றம் காண முடியாத ஒழுக்கமுடையவர்,பண்பானவர் என்ற பொருள்பட ஒருவரை உயர்வாக மதிப்பிட்டுச் சொல்வார்கள்.
தங்கத்திற்கு அவ்வளவு மதிப்புண்டு .அதன் மதிப்பு உயர்ந்துக் கொண்டே செல்லும்.

தங்கத்தின் மதிப்பு தடுமாறுகின்றது . அதன் விலையும்  வேகமாக குறைகின்றது .
தங்கம் சேர்த்து வைத்தால் தேவைக்கு விற்க முடியும் அதுவும் வாங்கியதைக் காட்டிலும் விற்கும் போது கூடுதலான தொகை கிடைக்கும் என்பதால் பலர் பணம் இருக்கும் போது தங்கம் வாங்கி சேர்த்து வைப்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் செயல்.

தங்கமான மனிதர், பத்தரை மாற்றுத் தங்கம் போன்று குறைகளற்ற மனிதர் என்று சொல்லி ஒருவரை உயர்வாக சொல்லும் காலம் போய் விட்டது போல் தங்கத்தின் நிலையும் வந்து விட்டது. உயர்வான தங்கம் என்று சொல்லி மிகப் பெரிய விளம்பரம் செய்யப்பட்டு விற்கப்படும் தங்கமும் குறை உள்ளதாக இருக்கின்றது. தங்கமான மனிதர் தரம் கெட்டவராக மாறுவதுபோல் உயர்வாக நினைத்து வாங்கிய தங்கம் தரம் கெட்டதாக இருக்கும் 22 கேரட் தங்க நகை  இருபது கேரட் நிலையில் நாம் அந்த தங்கத்தை விற்கும்போது அதனை வாங்குவோர் மதிப்பிடும் போது நம் மனம் உடைத்து விடுகின்றது . தங்கத்தை விற்கப் போனால் பணம் தரமுடியாது, அதற்கு பதிலாக புதிய நகை வாங்குங்கள் என்றும் சொல்வார்கள். பண்ட மாற்று செய்யும்போது, பழைய நகையின் எடையில் 10% முதல் 25% வரை குறைப்பார்கள் தங்க நகைகள் வைத்துள்ள இடத்திற்கும் எந்த விதமான பாது காப்பும் இல்லை என்பதுதான் உண்மை. அரசும் தங்கத்தினை அடகு வைக்கும் போதும் பணம் கொடுப்பதனை குறைவாகவே கொடுக்கின்றது.


இனி யாருக்கும் தங்கமான மனிதர் என்ற பாராட்டு கொடுக்காதீர்கள் .அப்படி கொடுத்தால் அவரை குணம் தாழ்த்தி சொல்வதாகிவிடும் . பாராட்டு நல்ல இடம் போன்றவர் என்று சொல்லலாம் நிலைமை இடம் வாங்கிப் போட்டவர் நிலை உயர்வடைகின்றது .
"மண்ணிலும் பொன்னிலும் போட்ட காசு வீணாகாது" என்ற நிலை மாறி மண்ணில் போட்ட காசு வீணாகாது என்பதுதான் புதிய மொழி . அதனால்தான் எங்கு பார்த்தாலும் நில விற்பனை( ரியல் எஸ்டேட்)தொழில் பெருகி வருகிறது
 தங்க முதலீடும் ஏமாற்றத்தின் இழப்பும்

2 comments:

  1. எதையும் ஒப்பிட்டு பாராட்டினால், அது பாராட்டே அல்ல என்பதை நன்றாக சொல்லி விட்டீர்கள்... பாராட்டுக்கள்...

    நேரம் கிடைப்பின் வாசிக்க அழைக்கிறேன்...

    Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தினபாலன் அவர்களது புதுமையான செயல்பாடு அருமை . அவர்களது வலைதளத்தில் காணும் கட்டுரைகள் .எதையும் விட முடியாது . இதை படிப்பதா! அல்லது அதை முதலில் படிப்பதா! மனம் அலைபாய்கிறது .கருத்துள்ள இனிய நினைவில் நிற்கக்
      கூடிய பாடல்களையும் தந்துள்ளீர்கள் . அப்பப்பா!அத்தனை பாடல்களை எப்படித்தான் திரட்டி முறையாகத் தந்தீர்களோ ! பாராட்டுகள் .உங்கள் வலைத்தளத்தை முழுதும் முறையாக படிக்க ஆண்டு கடந்து விடும் .
      அருமையான ரசனை உங்கள் மனதில் உறைந்துள்ளது எங்கள் மனமும் நிறைந்துள்ளது .நன்றி

      Delete