ஆயிரம் இருக்க இஸ்லாத்தின் மகிமையப் பற்றிச் சொல்ல
பாயிரம் பாடுவார் இஸ்லாத்தில் இல்லாததை இட்டுக் கட்டி
படித்ததோ மார்க்க மகிமை அறிய சொல்வதோ மந்திர மகிமை
வேதம் படித்து விளக்கம் பெற்று தன் பை நிரப்ப திட்டம் போடுகிறார்
சூன்யம் மந்திரம் அற்புதம் அதிசியம் இதன் மேல் ஈடுபாடு
காந்தம் போல் மக்களை அதை சொல்லி இழுக்கும் நிலைப்பாடு
சிக்கலை தவிர்க்க இவரிடம் சென்றால் மற்றொரு சிக்கலில் மாட்டிவிடுவார்
அற்புதமென்பார் அதிசியமென்பார் அதைப்பார்க்க ஆயிரம் பேர் கூடுவார்
'அதிசியம் ஆனால் உண்மை அவரிடம் போனேன்' தொலைந்தது கிடைத்ததென்பார்
அற்புதம் தடவினார் ஊதினார் மற்றும் ஒதினார் உடல் நலம் நலமுற்றேனெபார்
அற்புதமும் அதிசியமும் அவரைக் கொண்டு நிகழுமென்பார்
அற்புத அதிசிய மனிதரை நோக்கி மக்கள் ஓட்டம் அலைமோதும்
அற்புத அதிசிய மனிதர் தன் நலம் பார்க்க மருத்துவரை நோக்கி ஓட்டம்
நாயகம் கொண்ட நம்பிக்கை இறைவன்மீது
இவர் கொண்ட நம்பிக்கை அதிசியத்தின் மீது
விண்மீன்கள் நகர்வது இறைவனின் நாட்டம்
விண்மீன்களை வைத்து இவர் பணம் பண்ணுவது அதிர்ஸ்டத்தை சொல்லி
கிரகணங்கள் நிகழ்வதால் மனிதனின் நிகழ்வுகள் மாறுமோ!
வைரத்தை வகையாகப் பிரித்து அதில் அதிர்ஸ்டத்தை புகுத்துவார்
அமைதியும் ஆற்றலும் நம்மிடமிருக்க நட்டாற்றில் விடுபவரை நாடுவது ஏன்?
அறிவின் ஆற்றல், உழைப்பின் உயர்வு உம்மோடு உயர்ந்து நிற்க மாயைகள் மீது பிடிப்பு ஏன்?
தாங்காத உள்ளம் தளர்ச்சியைத் தூண்டும்! தற்காலிகமானதை நிலையாக்கிக் கொள்ளும் முடிவு ஏன்?
தவறு தற்காலிகமானதாகப் போகட்டும் நம்பிக்கை நிலையாக நிற்கட்டும்
சோதனைகள் செயல்படுத்த துடிக்கின்றன
வேண்டாதவரை வேண்டி நிற்கின்றன
வேதனைகள் கொப்பளிக்கின்றன தகாதவரை தேடியதால்
ஏகத்துவம் என்பதனை அறியவில்லையா?
மனமே மறந்து விட துடிக்காதே! மாட்சிமை மிக்க வல்லோனை
‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்தபோது சூரியக்கிரகணம் ஏற்பட்டது. அதனால் மக்கள் எல்லோரும் ‘(நபி (ஸல்) அவர்களின் மகனார்) இப்ராஹீமுடைய மரணத்திற்காகத்தான் இந்த சூரியக்கிரகணம் ஏற்பட்டது’ என்று பேசிக் கொண்டார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘சூரிய, சந்திர கிரகணங்கள் யாருடைய வாழ்விற்காகவோ (பிறப்பிற்காகவோ) இறப்பிற்காகவோ ஏற்படுவதில்லை. நீங்கள் கிரகணங்களைக் கண்டால் அல்லாஹ்வைத் தொழுது அவனைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்’ அறிவிப்பவர்: அபூமுகீரா இப்னு ஷுஐபா (ரலி), நூல்: புகாரி.
எழுதியவர் முகம்மது அலி
No comments:
Post a Comment