Saturday, 27 April 2013
தனித்து விடப்படதாக நினைக்கும் காலம் மாறிவிட்டது.
இரு நண்பர்களுக்குள் நடந்த அன்பு விசாரிப்புகள் .
‘எப்படி இருக்கிறாய் ! நண்பர்கள் வருகிறார்களா?பொழுது எப்படி போகிறது?
நண்பன் சொல்வார் ‘ஒரு நண்பருமில்லை எல்லாம் பயணம் சென்று விட்டார்கள் , பொழுதே போவது மிகவும் சிரமமாக இருக்கிறது ‘.
‘அதுசரி நீ எப்படி இருக்கிறாய் ‘
நான் நல்லா இருக்கிறேன் .பொழுதும் மகிழ்வாக போகின்றது .நிறைய நண்பர்கள் சேர்ந்துக் கொண்டே இருக்கின்றார்கள் .ஆனால் சில நண்பர்கள் தொல்லை அதிகம். தேவை இல்லாமல் எனது இடத்திற்கு வந்து தொல்லை தருவதோடு வம்பும் செய்கின்றார்கள், அது மட்டுமில்லாமல் நான் ஏதாவது சொன்னால் அவர்கள் எனது மனது வேதனைப் படும்படி சொல்லி விடுகின்றனர்.அதுதான் மிகவும் சிரமமாக இருக்கின்றது . நமக்கு ஒத்து வராத நண்பர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு படாத பாடு படுகிறேன்’
‘ஏன் அந்தமாதிரி நண்பர்களை சேர்த்துக் கொண்டாய் ‘
‘ஒரு ஆசைதான் நிறைய நண்பர்கள் இருந்தால் நமக்கு ஒரு கவுரவம் கிடைக்குமென்று நினைத்தேன்.’
‘அவர்களுக்கு தகுந்ததுபோல் நீ நடந்துக் கொள்ள வேண்டியது தானே!’
‘அது ஏப்படி முடியும்! ஒன்றா இரண்டா ஆயிரத்திற்கு மேல் நண்பர்கள் இருக்கிறார்களே!’
அடேயப்பா! அது எப்படி இவ்வளவு நண்பர்களை சேர்த்தாய் .
நானா சேர்த்தேன் அவர்கள் விரும்பினார்கள் நான் சேர்த்துக் கொண்டேன்
பெரிய அதிசயம்தான்! நீ யாரிடமும் அதிகமாக பேசிக் கூட நான் பார்த்ததில்லையே
பேசுவதற்கு இங்கு வேலை ஒண்ணுமில்லை
பின்னே எப்படி!
எதையாவது எழுத வேண்டியதுதான்
மிகவும் கவனமாக் இரு எதையாவது எழுதி கமல்காசன் மாதிரி பின்பு வருந்தும்படியாகிவிடும்
எல்லோரையும் சந்திப்பது கடைத்தெருவிலா?
வீட்டிலேயே
எப்படி முடியும். உன் வீடு சிறிய வீடுதானே.
அனைவரையும் எனது அறையிலேயே சந்திப்பேன்
என்ன உலருகின்றாய்
ஆமாம் அத்தனை பேரையும் ஃபேஸ் புக்கிலேயே பார்ப்பேன்
அது உனக்கு தெரியாதா?
தெரியாது.
உன்னிடம் கம்யூட்டர் இல்லையா?
சரி உன்னிடம் பேசுவத்தைக் காட்டிலும் நான் தனியே இருப்பதே மேல் எனக்கு ஆண்டவன் துணை இருக்கிறான் அவனை துதித்து தொழுதாலும் நன்மை கிடைக்கும். .
இப்பொழுது என் மனதில் நபியின் வாழ்வில் நிகழ்ந்தது ஒன்று நினைவுக்கு வருகின்றது. அதனால் அந்த நினைவோடு மன தைரியத்தோடு, நிறைவோடு என் கடமையை செய்ய முற்படுவேன். வருகிறேன்.
போகிறாயே! அதை என்னிடம் சொல்லி விட்டுப் போயேன் நானும் அந்த மனதுடன் வாழ முயல்கின்றேன்.
அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், ‘(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக் கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்மைக் கண்டு கொள்வார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘எந்த இரண்டு நபர்களுடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கிறானோ அவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள், அபூ பக்ரே!” என்று கேட்டார்கள் -. ஹதீஸ் புகாரி 3653
======================================
நான் யார்! நான் …(About Me)
நான் யார் வந்து பார்
நான் யார் என்பது பார்வைக்கு படம் சொல்லும்
நான் யார் என்பதை அறிய கவிதை சொல்லும்
நான் யார் என்பது முக்கியமல்ல
நீ யார் என்பதை அறிய உன் கருத்தைச் சொல்
நீ யார் என்பதை அறிய உன் கருத்தே காட்டிவிடும்
நீ என் பக்கம் வந்ததே உமக்கு ஏதாவது கிடைக்குமா என்ற நோக்கம்
நீ உன் பக்கம் யாரும் பார்க்க உன்னை உருவாக்கும் நோக்கம்
வந்ததே வந்தாய் பார்த்து படித்து எழுது
எழுதுவது உன்னையும் உயர்த்தட்டும்
எழுதியது என்னையும் உயர்த்தட்டும்
எழுதிதை மற்றவர்களும் பார்க்கட்டும்
In the name of Allah The most Gracious The most Merciful! Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. Every mistake is from me, and any Truth is from Allah, The Enduring One, He is the Enduring One, I know nothing save that which He hath taught me.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment