பொருள் உள்ளவரை போற்றுவதும் பொருள் அற்றவரை மதியா தன்மையும் மக்கள் மனதில் இக்காலத்தில் பரவி வருகின்றது . மற்றவர் மதிக்க வேண்டும் அல்லது புகழ பெற வேண்டும் என்ற மனநிலை வேண்டி நாம் செல்வம் சேர்க்க வேண்டிய நிலை வேண்டாம் .இருப்பினும் நம் நம் வாழ்கைக்கு தேவையான செல்வதை நாம் சேர்ப்பது நமக்கு அவசியமாகின்றது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் ,வாழ்வின் முதுகெலும்பு போன்றது. அது இல்லாமல் நாம் ஏறுநடைபோட முடியாது. பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும் .அன்பு நெறியில் அறநெறியில் அடையாத பொருள் அழிந்து விடும் அதனை அடைந்தவரையும்அழிந்து விடும்.செல்வம் வந்த வழியும் முறையானதாக இருக்க வேண்டும் திருடி தர்மம் செய்வது போல் சிலர் செல்வத்தை தவறான வழியில் சேர்த்து பின்பு முறைபடுத்தி அதனை நல வழியில் செலவு செய்ய முனைகின்றனர். தவறாக பெற்ற செல்வதை வைத்து தர்மம் செய்து இறையருள் முயல்வது இறைவனால் அங்கீகரிக்கப் படமாட்டாது. நல் வழியில் செல்வம் கிடைக்க அதனை நல்வழியில் செலவு செய்து இறைவனது அருளையும் பெறலாம். நல்ல காரியங்களுக்காக நன்கொடை அளித்து படிக்க முடியாத ஏழை மாணவர்கள் படிப்பதற்கு இயன்ற பொருளுதவி செய்து அவர்களை படிப்பதற்கு ஊக்குவிக்கலாம் .கல்வி பெறாத நாடு முன்னேற்றம் அடைய முடியாது
நல்லவகையில் நம்மால் நடவடிக்கைகள் சிறப்புற அமைய உதவமுன் வரவேண்டும். படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இருக்கலாம். அவர்களில் திறமையான மாணவர்கள் மேல்படிப்பிற்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி மனப்பான்மையுடன் திரிவதை நாம் காண்கிறோம். அவர்களுக்குத் வேலைத் தேடித்தர ஈடுபட வேண்டும்.
பணமின்றி திருமணமாகாத பெண்களுக்கு பொருள் உதவி செய்யலாம். இத்தனைக்கும் நாம் தேவையான செல்வதைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் பொருள் நல்வழியில்பொருள் ஈட்ட முயல வேண்டும்.அதற்கான தகுதியை நாம் பெற்றாக வேண்டும். நீரில் மூழ்கியவரை காப்பாற்ற நாம் நீந்தவும் அதற்க்கான வலுவும் பெற்றிருக்க வேண்டும். அந்த
தகுதியைப் பெறாமல் உதவி செய்ய நீரில் இறங்க நாமும் நீரோடு இழுக்கப் படுவோம்.

No comments:
Post a Comment