Saturday, 27 April 2013

எத்தனை வகை குழைவுகள்!

 பறவைகள் பல நாட்களுக்கு தேவையான உணவுகளை சேர்த்து வைப்பதில்லை. அன்றாடம்   அதற்கு தேவையான உணவுகளை அது நாடி செல்கின்றது. அதற்கு தேவையான உணவும் அதற்கு கிடைத்து விடுகின்றது . மனிதர்களுக்கு மட்டும் அந்த நம்பிக்கை கிடையாது . தேவைக்கு மேல் சேர்த்து வீணே விரயம் செய்கிறான். தேவைக்கு அதிகமாக சேர்க்க  முயல்கின்றான் அதற்காக  பலவிதமான வழிகளையும் கையாளுகின்றான். அதில் ஒரு வகை காக்கா பிடிக்கும் முறை. காரியம் நடக்க  எத்தனை  வகை குழைவுகளும் காக்கா பிடிக்கும் விதமும் காண்கின்றோம்


 நாம் நினைப்பது காக்கை என்றால் கருப்பாக மட்டும் இருக்குமென்று .வெள்ளை  காக்கை பல நாடுகளில்  உண்டு. நம் நாட்டில்அபூர்வமாக, சில காக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன.  .காம்பியாவில் கருப்பு   காக்கைகள் கிடையாது .எல்லாம் வெள்ளை காக்கைகள்தான். ஆனால் அந்த நாட்டு மக்கள் கருப்பு (நிறம் உடையவர்கள்) இனத்தவர்.
கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது .அமெரிக்கர்கள் வெள்ளை நிறம் ஆனால் குறுகிய மனது. அடுத்தவர் நாட்டையே அடிமையாக்க நினைக்கும் பேராசை




முன்பெல்லாம் காக்கை கரைந்தால் விருந்தாளிகள் வருவதாக நம்பிகையுடன் சொல்வார்கள் .இப்பொழுது  காக்கை மறந்து காக்கா பிடித்தால்தான் காரியம் ஆகும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள்.

காக்காய் பிடிப்பதிலே பித்தனடா - உந்தன்
உரிய நிறம் வெளுக்குதடா

பார்க்குமிடமெல்லாம் பறந்து வந்து நிற்கின்றாய்
கிடைத்ததை அள்ளி சேர்கின்றாய்

கிடைத்ததை கொத்தி கொத்தி தின்கின்றாய்
உண்டதை வாந்தி வந்து கக்குகின்றாய்

No comments:

Post a Comment