மேகம் வர மழை வருமாம்
மின்னல் வெட்ட இடி வருமாம்
மேகம் மோத இடியோசை வருமாம்
இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ
மழையைக் கண்டு வருடம் தாண்டி விட்டது
தூசி மழை ஊரெல்லாம் பெய்கிறது.
குளங்கள் வற்றிக் கிடக்கின்றன .
வயல்கள் வீடாகி விட்டன
வீட்டை சுத்தம் செய்ய ஆள் இல்லை
கட்டிய வீட்டிலும் வாழாமல் வெளிநாடு வாழ்க்கை
ஊருக்குள் ஒற்றுமை குறைகிறது
பழைய இனிய மகிழ்வான பசுமை வாழ்க்கை பறந்து விட்டது
பயிர்களும் காணோம் ,வெற்றிலையைக் காணோம்
நன்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் இறைநம்பிக்கை கூடுகிறது
நீர் கிடைக்காத நிலையோ அல்லது வெயிலின் கதிர் வீச்சால் காய்ந்த மனமோ
சிலர் தவறான தண்ணீரை குடிக்கும் வேதனை
இயற்க்கையழகு இருக்குமிடம் காணோம்
இயற்க்கையழகை செயற்கையாய் உருவாக்குகின்றார்கள்
இலையும் செடியும் தாள்களில் தோற்றம்
இலையும் ,செடியும் ,மரமும் மறைய மழையும் மறைந்து விட்டது
இயற்கை சூழ் நிலை நல்ல மனதையும் வளர்க்கும்
அந்தக் கால இனிய நினைவுகள் மீட்டியது...
ReplyDeleteமுதல் நான்கு வரிகள் - குழந்தைகளுக்கு பாடிக் காண்பிக்கும் நிலை வருமோ...? என்று பயமாக இருக்கிறது...!
தொடர வாழ்த்துக்கள்...
குழந்தைகளுக்கு பாடிக் காண்பிக்கும் நிலை வருமோ...?- திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஅருமை
--------------------------------
மேகம் வர மழை வருமாம்
மின்னல் வெட்ட இடி வருமாம்
மேகம் மோத இடியோசை வருமாம்
இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதாம் .
குழந்தைகளுக்கு பாடிக் காண்பிக்க