Friday 5 April 2013

பொறுமையும் பொறாமையும்

பொறுமை அமைதியைத் தரும்
பொறாமை கவலையைக் கொடுக்கும்

பொறுமை எனும் மனத் தூய்மை என்றும் பெருமையே தரும்.
பொறாமை எனும் மனக் குழப்பம் மனோநிலையை பாதிக்கும்

பொறுமையாக செயல்பட தவறு வருவது குறையும்
பொறாமையாக செயல்பட இருப்பதையும் இழக்கும் நிலை வரலாம்

பொறுமையாக இருந்து  நினைத்தது நடக்க செயல்படுத்த வேண்டியதை குறித்த நேரத்தில் செயல்படுத்தாமல் போனால் நினைத்தது நடக்காமல் போய் விடும். பொறுமை தாமதமாக மாறிவிடக் கூடாது

பொறாமை நல்ல காரியங்களில் நாமும் ஈடுபட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வரலாம். பொறாமை அடுத்தவர் போல் நாமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கம் முன்னேற்றதிற்கு வழி வகுக்கும் .

பொறாமை அடுத்தவரின் முன்னேற்றத்தை ,அழகை கண்டு வேதனையாவது மனோ வியாதியாகிவிடும் .தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைத்து விட்டதே என்று ஏங்கும் நிலை அழிவையே தரும் . எங்கேயோ உள்ளவனை நினைத்து பொறாமை வருவதில்லை அருத்தவரை நினைத்து காழ்ப்புணர்ச்சியோடு வருவது பொறாமை .

பெண்களுக்கு பொறாமை உணர்வு மேலோங்கி நின்றாலும் நேரடியாக அது அவர்களை பாதிப்பதில்லை நேரடியாக அவர்கள் செயல்படுத்த முயலாததால். அதற்கு தூதுவராக பலிகடாவாக ஆண்கள் ஆக்கப்படுகிறார்கள்

பொறாமைக் குணத்தால் மன அமைதி கெடுகின்றது. இறைவனது  அதிருப்திக்கும், மக்களின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடுகின்றது.


‘நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்’ என நபிகள் நாயகம் நவின்றதை மறக்க வேண்டாம்
‘அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம் மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?’ (4:54)

 ‘எங்கள் இரட்சகனே! எங்களையும், நம்பிக்கை கொள்வதில் எங்களை முந்திவிட்ட எமது சகோதரர்களையும் மன்னிப்பாயாக! இன்னும், நம்பிக்கை கொண்டோர் குறித்து எமது உள்ளங்களில் குரோதத்தை ஏற்படுத்தி விடாதே! எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ மிக்க மன்னிப்பவனும் நிகரற்ற அன்பு டையவனுமாவாய்’ எனக் கூறுவார்கள்.’ (59:10)

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.-திருக்குறள் 161: 
மு.வ உரை:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

No comments:

Post a Comment