Wednesday 10 April 2013

உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.


ஒருவனாயிருந்து உயர்வான பெயரைப் பெற்றாய்
ஒரு பெயருக்கே பல விளக்கங்கள் இருக்க
துணையின்றி தனியொருவனாய் நீயிருக்க
பல பெயர்கள் உனக்கு துணைப் பெயராய் உன் புகழ் பாடி  வந்து சேர்ந்தன
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாய் நீயிருக்க
அத்தனைப் பெயரும் உன் புகழ் பாடும்

உன் பெயர் சொல்லி அழைக்க யாரையும் நீ பெறவுமில்லை
உனை யாரும் பெற்று நீ பிறக்கவுமில்லை
உன்னால் உருவாக்கப்பட்ட அனைத்தும் உன் பெயர் சொல்லி
உன் பெயர் சொல்லி உன்னை துதி பாடுகின்றன

உனைத் தேடுபவருக்கும் தேடாதவருக்கும் உதவுகின்றாய்
உனைத் தேடிவருபவரை தேவையற்றவனாயிருந்து அருள் செய்கின்றாய்
உனக்கு நிகர் யாருமில்லை உனக்கு நிகர் நீயே

துவங்குவதும் தொடர்வதும் உன் பெயரைச் சொல்லி புகழ்பாடியே
துயருற்ற போதும் துயில் கொள்ள செல்லும் போதும்
நிகழ்வதற்கும் நடந்ததற்கும் நடை பெற இருப்பதற்கும்
நின் நினைவோடு உன் திருநாமம் நாக்கிலும் உள்ளத்திலும் உருள்கின்றது

கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் உன் வசமிருக்க
கொடுப்பதும் கொடுக்காமலிருப்பதும் நன்மையாய் யிருக்க
உன்னருள் நாடி  விழிகளில் நீர் வடிய
உனை நினைத்து இறைஞ்சுகின்றேன் ஏணையோர் போல்.
யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே...
அன்பு மயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ் 
  ஹபீபி - உன்னை நேசிக்கிறேன்!
 பிறப்பதும் இறப்பதும் உன் செயலாலே..

2 comments:

  1. இறைப்புகழ் கவி வரிகள் அருமை.

    இறைவன் தனித்தவன். இணைதுணையற்றவன்.எங்கும் நிறைந்திருப்பவன்.
    சுய தேவைகளற்றவன். இப்படி நம்மைப்படைத்தவனை முடிவில்லாமல் புகழ்ந்து கொண்டே போகலாம்.

    முடிவில் இறைவனுக்கு நிகர் இறைவனே.!

    ReplyDelete
    Replies
    1. அண்ணன் அதிரை.மெய்சா அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிகக் நன்றி

      Delete