அத்தனை அளவு நேசித்த மானிடரால்
நாட வேண்டிய நாயகனை நாடவில்லை
நாடியவன் நேசிக்க நாயகன் ஏமாற்றுவதில்லை
அத்தனை முறை உன்மனதில் ஏற்றி வைத்தாள் தாய்
அத்தனையும் பாசத்தால் வந்த பரிந்துரைகள்
அம்மாதானே சொன்னாள் என்ற அலட்சியம்
அனுபவம் அம்மாவின் வாக்கை உயர்வாக்கிக் காட்டியது

நடையில் தளர்ச்சி
தனிமை நிலை
விழிகளில் நீர்
இதய துடிப்பின் வேகம்
இறை இல்லம் நாடி நடை
இறைவனை நினைத்து தொழுது
இறைவனிடம் அடைக்கலம்
மனதில் அமைதி
நடையில் வேகம்
தனிமை மறைந்தது
விழிகளில் வெளிச்சம்
No comments:
Post a Comment