வங்கக் கடல் பகுதியில் உள்ள தமிழர் சென்றது இலங்கை ,மலேசியா, பர்மா பக்கம் . குஜராத்திகள் ஆப்ரிக்காவின் அனைத்து நாடுகளிலும் நிரம்பி இருக்கிறார்கள். இலண்டனிலும் புகுந்து நிறைய சேர்க்கிறார்கள் .அங்கிருந்து அனுப்பப் படும் தொகை குஜராத்தினை வளர்க்க உதவுகின்றது. நான் ஆப்பிரிக்க நாட்டில் பார்த்தது. முஸ்லிம்கள் வாழும் அட்லாண்டிக் கடலோரம் உள்ள சிறிய நாடு காம்பியா. அங்கும் குஜராத்திகள் தொழில் செய்கின்றனர் .அவர்களது தலைமையகம் இலண்டனில் இருக்கும் . ஒரு குஜராத்தி (அவன் இஸ்லாமியனாகவோ அல்லது வேறு இனத்தவனாகவோ இருக்கக் கூடாது ) விழுவதை அடுத்த குஜராத்தி பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். இந்த குணம் சிந்தியர்களுக்கும் உண்டு. ஆனால் சிந்தியர்கள் மற்ற இனத்தை வெறுக்க மாட்டார்கள் .ஆனால் ,தமிழன் அடுத்த தமிழன் எப்போது விழுவான் என ஆவலோடு எதிர் பார்ப்பான்.
குழந்தைகள்
குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் உங்கள் வழியே இறைவனால் உங்களுக்கு கொடுக்கப்பட்டவர்கள். அமானுதமாக அதாவது உங்கள் அரவணைப்பில் விடப்பட்டவர்கள்.அந்த குழந்தைகளுக்கும் தனி விருப்பமுண்டு.அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்
மறுக்க முடியவில்லை... உண்மை தான்...
ReplyDeleteஎல்லாம் சுயநலம் தான் காரணம்...