Friday, 5 April 2013

இளமையும்! முதுமையும்!

இளமை உஞ்சலாட முதுமை தள்ளாடுகிறது
இளமை உலாவர முதுமை ஓய்வெடுக்கிறது
இளமை கற்பனை செய்ய முதுமை கதை சொல்கிறது
இளமை நினைவாற்றலை நிறுத்தி வைக்க முதுமை மறதியால் தேடுகிறது
இளமை சேர்க்க முயல முதுமை பாதுகாக்க நினைக்கிறது
இளமை மனைவியை காதலிக்கிறது முதுமை மனைவி மீது பாசம் காட்டுகிறது
இளமை முதுமையை மதிக்காமல் இருக்க முதுமை இளமையை இணைக்க விரும்புகிறது
இளமை களத்தை தேட முதுமை களைத்து படுக்கின்றது
இளமை பறை சாற்றும் புகழ் நாட முதுமை சரித்திம் பேசுகிறது
இளமை நினைத்தது நடக்க நடை போட முதுமை அசை போடுகிறது
இளமை வேகத்தில் தடுக்கி விழ முதுமை அமைதியை நாடுகிறது
இளமை வாதம் செய்கிறது முதுமை அடங்கிப் போகிறது
இளமை பண்மையின் பிறப்பிடம்.முதுமை உண்மையின் உறைவிடம்
இளமை துடிப்பின் வேகம் முதுமை தடுமாற்றத்தின் காட்சி .
இளமையில் வேகம் மேலோங்கும்.முதுமையில் நிதானம் வந்தடையும் .
இளமைக்கும் முதுமையுண்டு. முதுமைக்கு இளமையில்லை.
இளமையின்  முதுமையோடு காட்டும் பரிவு முதுமை வாழ்வை நீட்டிக்கிறது

முதியோரிடம் பாசத்தைக் காட்டுங்கள், பரிவைக் காட்டுங்கள்,கனிவு காட்டுங்கள், அன்பாகப் பேசுங்கள்,இறையருள் பெற்றிடுங்கள் ,  இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்
 -முகம்மது அலி

---------------------------------------------------------------------------------------------

“முதுமை வந்து கூன் விழுமோ  
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
சென்று விடத்தான் நினைப்பு”
நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன்  எழுதிய  கவிதை.

நீடூர்.S.E.A. முகம்மது சயீத் அவர்கள் எழுதிய பாடலை தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் பாடுகிறார் .

No comments:

Post a Comment