எது சுதந்திரம் ?
நல்ல நாள் கெட்ட நாள் என்பது கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை கேட்டும், படித்தும் மனதில் படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு
இன்று உனக்கு தேவைப் படாதது நாளை அது அவசியமாகிவிடலாம் .
விரயம் செய்வதைக் காட்டிலும் தர்மம் செய்து நன்மையை அடைந்துக் கொள் .
Wednesday 25 January 2017
இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .
மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத் தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும் தன் நன்னடத்தையாலும் தன் குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல சூழலில் வளர்வதுமாக இருக்கும்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்
காட்சிப் பொருளாக மாறிய மனிதன்
அனைத்து பாதுகாப்பு வேலையும் மோசமானதாக இருக்கும். ஆனால் சில பாதுகாத்து வேலைகள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாக இருந்து வருகின்றன.அதிலும் இரவு நேர வேலைகள் மிகவும் அபாயகரமான வேலைகளாக உள்ளன.
மிகவும் பிரபலமான பக்கிங்காம் அரண்மனையின் சில காவலர், கடமை வீரர்கள் வேலை உலகின் மோசமான வேலைகளாக கூறப்படுகிறது. அவர்கள் எரிச்சலூட்டும்படியாக பல மணி நேரம் நின்று காவல் காப்பதுடன் காட்சிப் பொருளாக மாறிய பொம்மையாக மாறி காட்சி அளிக்க வேண்டும். அந்த காவலர்கள், சிரிக்க முடியாது, உணர்ச்சிகளை காண்பிக்க முடியாது, மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பதிலளிக்க முடியாது என்ற பல விதிகள். தினமும் அவர்கள் சீருடை துவைத்து சலவை செய்ய வேண்டும். சிப்பாய் போன்ற கூடுதல் கடமை .கடமைகளில் தவறு நேர்ந்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள்.
நாகரீகம் வளர்ந்த நாட்டில் விந்தை மனிதர்களாக, காட்சிப் பொருளாக மாறிய மனிதன். மற்றவருக்கு மகிழ்வை தந்து தன்னை வருத்திக் கொள்ளும் மனிதன்.

Subscribe to:
Posts (Atom)