Saturday 30 March 2024

இந்தியாவில் இஸ்லாம் பரவியது ஸஹாபாக்கள் செய்த சேவைகளால்தான்.

நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவோம்

நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) வழியில்தான் மக்கள் இஸ்லாத்தின் மீது விருப்பம் கொண்டு இஸ்லாம் பக்கம் அதிகமாக சேர்ந்தார்கள்

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வல்ல இறைவனால் கடமையாக்கப்பட்ட அனைத்து வணக்கங்களிலும் வழிகாட்டி விட்டிருந்தார்கள். எஞ்சியிருந்தது ஹஜ் என்ற இறுதிக் கடமை மட்டுமே!

அந்த ஹஜ் கடமையை அவர்கள் நிறைவேற்றிய பயணத்தின் ஊடே தான் அரபா நாளில், “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப் படுத்தி விட்டேன்” என்ற (5:3) வசனம் அருளப்பட்டது. “ஓதுவீராக’ என்று துவங்கிய திருக்குர்ஆன், ஓதி முடிக்கப்பட வேண்டிய இறுதிக் கட்டம் வந்து விட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தியது.

அதற்கு ஏற்றது போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.

இதன் பிறகு ஸஹாபாக்கள் தங்களது பிரயாணத்தை தொடர்ந்து இஸ்லாத்தினை மக்களுக்கு ஏற்றி வைக்க பல நாடுகளுக்கு செல்ல ஆரம்பித்தனர் .அது மக்களுக்கு செய்யும் சேவையிலிருந்து தொடர்ந்தது 

அப்படி சிலர் இந்தியாவுக்கும் வந்தனர் 

கோவளத்தில் தமிமுல் அன்ஸாரி என்பவரது அடக்கஸ்தலமும் கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டையில்   உக்காஷா என்பவரது அடக்கஸ்தலமும் இருக்கிறது. கோவலத்தில் அடங்கியுள்ளவர்கள் தமீமுல் அன்சாரி இவர்கள் முகம்மது நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) பரங்கிப்பேட்டையில் அடங்கியிருப்பவர்கள் உக்காஷா ரலியல்லாஹூ ஆவார்கள்.அபிவக்காஸ் ரலியல்லாஹூ சீனாவில் அடங்கியுள்ளார்கள்.என்ற தரத்தை பெற்றவர்கள். 

இந்தியாவில் இஸ்லாம் பரவியது ஸஹாபாக்கள் செய்த சேவைகளால்தான் .

இவர்கள் மொகலாயா ஆட்சியாளர்கள் முன்பே வந்தவர்கள் 

மொகலாய சிலரது வரவினால் , ஆட்சியால் இஸ்லாம் அதிகமாக வரவில்லை .அவர்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயர்கள் பெறவில்லை மாறாக இவர்களுக்கு முன்பு 

வந்த நபியின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) வழியில்தான் மக்கள் இஸ்லாத்தின் மீது விருப்பம் கொண்டு இஸ்லாம் பக்கம் அதிகமாக சேர்ந்தார்கள்


இஃப்தார் துவா.மஸ்ஜித் தக்வா நீடூர் -நெய்வாசல்

பல சமுதாய மக்களோடு  முஸ்லிம்கள் எப்படி பழகவேண்டும் எப்படி வாழ வேண்டும்

கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்.

Wednesday 27 March 2024

Sunday 3 March 2024

மதரஸாக்கள் கல்விச் சாலைகள்

மதரஸாக்கள் கல்விச் சாலைகள்

. ‘அஸ்ஹாபுஸ் ஸுப்பா’ எனப்படும் திண்ணைத் தோழர்கள் உருவாக்கியது தான்' மதரஸ...

துளசேந்திரபுரம் காதரியா பள்ளிவாசலில் முபல்லிகா பட்டமளிப்பு விழா சொற்பொழி...

நீடூர் நெய்வசல் நிஸ்வான் மத்ரசா பிள்ளைகளின் கைவண்ணத்தில் அருமையான கண்காட்சி