உன் வார்த்தைகள் அழகானவை
உன் வரிகள் கவிதை நயம் கொண்டவை
உன்னைப்போல் உயர்வானதை யாரும் எங்கும் பார்க்கவில்லை
நீ பொய்யை பெற்றுருக்கவில்லை
நீ பெற்றிருப்பதெல்லாம் உண்மையன்றி வேறில்லை
நீ காலத்தின் நடப்புகள் மற்றும் அனைத்து உயர்வுகளையும் பெற்றிருக்கிறாய்
நீ உண்மையைக் எனக்கு காட்டி விடு
நீ மனதை மென்மையாய் ஆக்கி விடு
நீ மனதின் வடுக்களைப் போக்கி விடு
நீ வாழ்வின் வழி காட்டியாய் இருந்து விடு
நீ வாழ்வில் மன வலிமையைத் தந்து விடு
Monday 30 September 2013
Sunday 29 September 2013
ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது
இரண்டு உயிர்கள்
இரண்டு உடல்
இரண்டு ஆன்மா
இரண்டும் இணைந்தது
இரண்டுக்கும் வந்தது ஒரு உயிர்
இரண்டின் கலவை ஒரு உருவம்
இரண்டுக்கும் மாறுபட்ட மனம்
இரண்டையும் அணைத்துப் போகும் மனமில்லை
இரண்டையும் வெற்றிக் கொள்ளும் குணமானது
தனக்கென தானே ஒரு வழி வகுத்துக் கொண்டது
தரணியில் தன்னை மிஞ்சுவாரில்லை என்ற இறுமாப்பு
தனித்து நின்று போராடி வெற்றி பெற வேட்கை கொண்டது
தன்னைத் தானே உருவாக்கும் வேட்கை
தனி மரம் தோப்பாகாது என்பதை மறந்து நின்றது
தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற ஏக்கம்
தான் அழிய தானே வழி வகுத்துக் கொண்டது
தான் அழிய மற்றவர் வாழ விரும்பவில்லை
தன்னை நோக்குவாரற்று சிதைந்துப் போனது
இருவர் சேர நாம் வந்தோம் என்பதை அறியாமல் போனது
ஆணவம் அழிவுக்கு வழி வகுத்தது
ஆணவம் அறிவை மறைத்தது
ஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது
நான் எப்பொழுதும் இளமை!
நான் எப்பொழுதும் இளமை
நான் முதுமையிலும் இளமையாக இருக்கிறேன்
நான் பெற்றிருக்கும் மனம் இளமையானது
நான் பெற்றிருக்கும் இந்த இளமை இனி கிடைக்க வாய்ப்பில்லை
நான் பழகும் மக்கள் இளமையான எண்ணம் கொண்டவர்கள்
நான் பழகும் மக்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள்
நான் சந்திக்கும் மக்கள் குறை கூறி என்னை துன்பத்தில் முடக்குவதில்லை
நான் சந்திக்கும் மக்கள் குறையை குலைத்து நிறைவை தருகிறார்கள்
நான் பெற்றிருக்கும் நேரம் உயர்வானது
நான் பெற்றிருக்கும் நேரத்தை உயர்வாக்கவே விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மக்களை மகிழ்வோடு இருக்க விரும்புகின்றேன்
நான் பெற்றிருக்கும் மனது உயர்வு தாழ்வு என்று மக்களை வேறு படுத்த நினைக்கவில்லை
Friday 27 September 2013
உயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது
உயிர் போகும் இடம் அறியேன்
உடல் போகும் இடம் அறியேன்
உயிர் போகும் என்பதை அறிவேன்
உயிரை கொடுத்ததும் உயிரை போக்குவதும் இறைவஉயிர்ன் தான்
உயிரை கொடுத்து உயிரை நிறுத்தி வைப்பதும் இறைவன் தான்
உயிர் இருக்க உயிரை உயர்வாக்க இறைவனை தொழுகச் செய்கிறேன்
உயிர் இல்லாத உடலை உணர்வற்று போகச் செய்தவனும் இறைவன்
உயிர் இல்லாத ஓர் எழுத்து உயிர் பெற்றது ஒரு சொல்லால்
உயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது
"உடல்தான் உயிரென்றாச்சு,
அதற்கு உலக்கை என்பதே மூச்சு,
நல்ல நடப்பெனும் நெல்லைப் பாய்ச்சு,
தெய்வ நாட்டத்தையே உருவாக்கு
வாசிஹாஹா சரமாத்தி குத்தடி ஹூஹூ
திக்கிர் முழக்கிக் குத்தடி ஹீஹீ"
-ஞானக்கவி ஹக்கீம் அய்யூபு அவர்கள்
பெரிய ஞானப்பாடல் இது,வாசி என்பது மூச்சுப் பயிற்சியின் சூத்திரம்.ஹாவென்று தூக்கி நீட்டு,அல்லாஹூ வென்று சரம் ஓட்டு என்று மூச்சுப்பயிற்சியின் மூலம் இறையண்மையைப் பெறுவதற்கான தவயோகமே இப்பயிற்சி-Nisha Mansur
ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)- குர்ஆன்
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
நீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய் !
நீ என்னை பார்க்கிறாய்
நீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய்
நீ என்னை பார்த்ததோடு உன் பார்வையை திருப்பிக் கொள்
நீ என்னை பார்பதற்கு நான் உன்னுடையவள் அல்ல
நான் உன் பார்வையில் படாமல் இருக்க விரும்புகின்றேன்
நான் உன் பார்வையில் படாமல் இருக்கவே மேலங்கி அணிந்திருக்கிறேன்
நான் அணிந்திருக்கும் மேலங்கி என் கற்புக்கு பாதுகாப்பு
நான் அணிந்திருக்கும் மேலங்கி உன்னை தவறு செய்யாமல் தடுக்கும்
நான் என் இறைவனால் படைக்கப்பட்ட இறை நேசம் கொண்டவள்
நான் என் இறைவனால் படைக்கப்பட்ட பொருளல்ல
நான் என் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள விரும்பவில்லை
நான் என் கொள்கையில் பிடிப்போடு இருக்கிறேன் அது இறைவனின் ஆணையாக இருப்பதால்
என் சுதந்திரம் என் ஆளுமையில் உள்ளது
என் சுதந்திரம் என் ஆடையில் அடங்கி விடவில்லை
என் சுதந்திரம் என் உடலைக் காட்டி உன்னை வீழ்த்துவதற்கு அல்ல
என் சுதந்திரம் என் இறைவன் காட்டிய வழியில் வாழ்வதில் உள்ளது
Wednesday 25 September 2013
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க...
எல்லோரும் மகிழ்சியாக இருக்க வேண்டும்
எல்லோரையும் மகிழ்சியாக இருக்க வைக்க வேண்டும்
நான் எல்லோரையும் மகிழ்ச்சியாக இருக்க வைக்க
நான் மகிச்சியாக இருக்க வேண்டும்.
நான் மகிழ்ச்சியாக இருக்க இறைபக்தி எனக்கு வேண்டும்
நான் இறைபக்தி பெற்றிருந்தால் துயரம் என்னை நெருங்காது
துயரமும் ,துன்பமும் ,பெருமையும் இல்லா மனதில் சேவை மனது நிற்கும்
துயரம் கொண்ட மனத்தைக் கொண்ட மனிதரைக் கண்டால் அவர் மனதை வருட சேவை செய்யும் மனது நாடி நிற்கும்

மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது!
அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம். நான் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் எனக்கு ஆனந்தன் என்ற பெயர் எனக்கு வைத்திருப்பாளோ!
நான் குழந்தையாக இருக்கும்போதே எனது அப்பா இறந்து விட்டதால் அப்பா வைத்திருந்த பொட்டிக் கடையை தானே தொடர்ந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து என்னை படிக்க வைத்தாள். பாவம் அம்மாவுக்கு ஒரு கண்தான், மற்றொரு கண் இருக்குமிடம் பள்ளமாக இருக்கும். ஒரு கண் பார்வையோடு வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு கடையையும் கவணித்துக் கொள்வாள் .
சிறிய வருமானத்தைக் கொண்டு அரசாங்க உதவிப் பணமும் பெற்று பொறியாளர் படிப்பு வரை என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தாள். என் சிறுவயதில் அம்மாவின் அழகான முகத்தில் எனக்கு குறை தெரியவில்லை. ஒற்றைக் கண்ணுடன் இருப்பதால் அம்மாவின் முகம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்ற மனம் எனக்கு வந்தது உடன் படிக்கும் மாணவர்கள் ' உங்க அம்மாவுக்கு ஒரு கண் பார்வைதானே! ' என்று கேட்டதிலிருந்து. கல்லூரிக்கு அம்மாவை என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி விட்டதிலிருந்து அவள் என்னைப் பார்க்க கல்லூரிக்கு வருவதில்லை.
Tuesday 24 September 2013
உங்களை அறிய தொடருங்கள் உங்கள ஆய்வை!
விழிகளை திறந்து வானத்தை உற்று நோக்குங்கள
விடியலில் கிளம்பும் வெளிச்சம்
பகலில் சுடர்விடும் வெளிச்சம்
மாலையில் மறையும் வெளிச்சம்
தினம் தொடர்ந்து வரும் சூரிய ஓட்டம்
இரவு காலங்களில் மாறி வரும் நிலாவின் வெளிச்சம்
இரவு நேரத்தில் நட்சத்திரக் கூட்டம்
இது தொடர்ந்து வரும் நிகழ்வு
இதன் ஓட்டத்தை மாற்றத்தை உருவாகியது யார்!
அவைகள் சுற்றி வரும் பாதையை
அவைகளுக்கு அறிய வைத்தது யார்!
அவைகள் சுற்றுவட்ட பாதையில் கிரகங்கள் நிலவு மற்றும் சூரியன்
இவைகளுக்குள் இத்தகைய சரியான இணக்கத்தை யார் காட்டிக் கொடுத்தது
மிதந்து பறந்து செல்லும் மேகக் கூட்டங்கள்
நம்மைச் சுற்றி இத்தனை அதிசியங்கள்
அதனை பார்த்து ரசிக்க பார்வை
அதனை ஆய்வு செய்ய அறிவு
இத்தனையும் தந்தவன் யார்!

Monday 23 September 2013
உயர்வும் தாழ்வும் உழைப்பின் முறையில்
உயர்வு மற்றவர்களால் உயர்த்தப் படுவது
திறமை தனக்குள் முடங்கிக் கிடக்க
மற்றவர் முன்னிறுத்திய திறமை தானே உயரும்
சேர்த்துக் கொண்டால் மற்றவர் தூக்கி விடுவர்
சிறுபான்மையர் சிதைக்கப் பட
பெரும்பான்மையர் புகழப்படுவர்
ஆளை வைத்து மதிப்பு உயரும்
இடத்தை வைத்து விலை உயரும்
சரக்கு உயர்வாய் இருக்க
விற்பவன் திறமை அற்றிருக்க
சரக்கு தேங்கி நிற்கும்
விற்பவர் திறமையால் மதிப்பற்ற சரக்கும் விற்று போகும்
உள்ளநாட்டு சரக்கு மதிப்பற்று நிற்கும்
வெளிநாட்டு சரக்கு மதிப்பெற்று நிற்கும்
விளம்பரம் வியாபரத்தினைப் பெருக்கும்
தட்டுப்பாடு விலையை உயர்த்தி நிறுத்தும்

உண்மை அறிய நாடுங்கள். மக்களை பிரிவு படுத்தாதீர்கள்
அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!
கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!
உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின் பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில் உன் தந்தை பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ! பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன் வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர் படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,
மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..
வாழ்க்கை ஒரு தற்செயல் அல்ல ..அது ஒரு பிரதிபலிப்புதான்.
மகனை (சிறுவன் )அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குச் சென்றேன் .
சலவைகள் கல் பதியப் பட்ட தரை .
நீரால் துடைக்கப் பட்ட தரை .
வழுக்கி விழுந்தான் மகன்.
அடிப்பட்டதால் 'ஓ' வென்று அலறினான்.
அதன் எதிரொலியாக 'ஓ' வென்ற ஒலி அவன் காதில் விழுந்தது.
மகனுக்கு கோபம் வர 'யாரடா அவன் என்னைப் பழித்துக் காட்டுவது' என்றான்
அதுவும் எதிரொலியாக 'யாரடா அவன் என்னைப் பழித்துக் காட்டுவது' என வந்தது.
உடன் மகன் 'உன்னை எனது அப்பாவிடம் சொல்லி அடிக்கச் சொல்வேன் என்றான்' .
அதுவும் எதிரொலிக்க
அப்பா பாருங்க 'எவனோ என்னை கிண்டல் செய்கிறான் ' என்றான் .
மகனே 'இதை எதிரொலி என்பார்கள். ஆனால் இதுதான் வாழ்க்கை .
நீ செய்யும் செயலுக்கு தகுந்ததுபோல்தான் உனக்கு பலனும் கிடைக்கும்.
நாம் இந்த உலகில் அதிக அன்பு மக்களிடம் செலுத்தினால் நாம் அதிக அன்பான மக்களைப் பெறலாம் . நம் திறமையைக் கொண்டு அதன் பலனைப் பெறலாம்
வாழ்க்கை ஒரு தற்செயல் அல்ல ..அது ஒரு பிரதிபலிப்புதான் .
இந்த உலகில் நன்மையை அதிகம் செய்தால் மருலோகத்திலும் இறைவன் உன்னை உயர்ந்த இடத்தில சுவனத்தில் இருக்கச் செய்வான் ' என்று அவன் மனதில் ஏற்றி வைத்தேன்
வண்ணத்துப் பூச்சி போல் பறக்கும் மனம்
சில நேரங்களில் வண்ணத்துப் பூச்சி போல் பறக்க நினைக்கிறேன்
பல நேரங்களில் மனமும் பட்டாம்பூசசி போல் பறந்து, பறந்து போகும்
போராட்ட மனது திசை அறியாது முதலில் தேங்கி நிற்கும்
மேகத்தின் மோதல் இடியாய் ஒலியெழுப்பி வருவதற்குள் முதலில் மின்னலாய் ஒளி வருவதுபோல்
வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ண நிறங்களில் பறந்து திரிவதைக் காண
படபடத்த மனதும் போராட்ட மனதை மறந்து பறந்து போகும்
ஓசை யெழுப்பும் காற்றே உன்னோடு யென்னையும் உயரமாக தூக்கிச் செல்
ஓசை எழுப்பாமல் உன்னோடு உயர வருகின்றேன்
இருந்த இடம் மறையும் வரை தூக்கிச் செல்
பறந்து செல்லும் பனி உறைந்த மேகத்தில் விட்டு விடு
ஊரெல்லாம் ஓடி தேடியது கிடைக்காதவை ஓர் இடத்தில் கிடைத்தது
மென்மையான கையில் பதுமையாக நீ இருந்தாய்
சுமையாக கைக்கு தெரியவில்லை
பாடப் புத்தகமே பலமுறை உன்னை படித்தேன் தேர்வில் தேர
படித்தது தேர்வு வரை நினைவில் நின்றது
கேட்ட கேள்விக்கு சரியான பதில் தந்து தேர்வில் வெற்றி பெற்றேன்
தேர்வில் பெற்ற வெற்றி வாழ்கைக்கு உதவவில்லை
படித்ததும் நினைவில் நின்றதும் தேர்வு முடிந்ததும் மறந்து போயின
புத்தகமாக கையில் நிறுத்தி உன்னை படிக்க தூக்கம் தழுவ தூங்கவில்லை
Sunday 22 September 2013
முடிவு நம் அனைவருக்கும் ஒன்றுதான்
ஆட்சி செய்யும் மன்னன் தன் நாட்டை பார்க்க உலா வந்தான்.
மாமன்னனைப் பார்க்க மக்கள் குழுமி நின்று வேடிக்கையும் ,வரவேற்பும் செய்தனர்
மன்னன் ஒரு ஏழை குடிமகன் தன்னை பாராமுகமாக தனது வேலையில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தான்
மன்னன் அந்த ஏழை குடிமகனை அழைத்து 'அனைவரும் என்னை பார்க்க, வரவேற்க வந்துள்ளார்கள் நீ மட்டும் பாராமுகமாய் இருப்பதின் காரணமென்ன என்று வினவினார்'
ஏழை சொன்னான்
'சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் போல் ஒரு அரசர் இவ்வழியே வந்தார். அவர் இங்கேயே நோய் வர இறந்து போனதால் அவரது உடலை இங்ககேயே அடக்கம் செய்தனர். அதன் பிறகு ஒரு ஏழை இறந்து போனதால் அரசன் அருகிலேயே அந்த ஏழையின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது .

Saturday 21 September 2013
ஆசையை முறைபடுத்தச் சொன்னது அறிவு
ஆசைப் பட ஆசை
ஆசைக்கு அளவே இல்லை
ஆசை நிறைவேற அசைவு தர ஆசை
ஆசை நிலைத்து நிற்க ஆசை
ஆசை அசைந்து வர ஆசை
ஆசைப் பட்டது விரைந்து வர ஆசை
ஆசை அற்ற நிலை தேக்கத்தை தருகின்றது
ஆசை பெற்ற நிலை வேகத்தை தருகின்றது
உயர உயர ஆசை
உயர்ந்தது உருவாக்க ஆசை
ஆசை உயிரோடு நிற்கிறது
ஆசை அற்ற நிலை உயிரை நிறுத்திக் கொள்வதில்லை
ஆசை பேராசையாக மாற வேதனை வந்து விட்டது
ஆசைப்பட்டதை அடைய அவதி வர விருப்பமில்லை
ஆசைப்பட்டதை அடைய உயர்வு தாழ்வு வந்து சேரும்
ஆசைப்பட்டால்தானே அசைவு யென்று ஒன்றிருக்கும்
ஆசையை உண்டாக்கிய மனது
ஆசையை முறைபடுத்தச் சொன்னது அறிவு
ஆசை நேசத்தோடு நிற்க மகிழ்வை சேர்ந்துக் கொண்டது
ஆசை இறை நேசத்தோடு நெருங்கி மாட்சிமை கொண்டது
Friday 20 September 2013
இமாம்களின் சேவை தேவை.
ஒரு இஸ்லாமிய சூழலில் ஒரு அடிப்படை நபர் இமாமாக இருக்கிறார்.
இமாம் முஸ்லீம் சமூகத்தின் மையப் புள்ளியாக இருக்க வேண்டும்.
இமாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்களது வாழும் முறை மக்களால் கண்காணிக்கப் படுகின்றது .
பெரும்பாலான இமாம்கள் இப்பொழுது தொழ வைப்பதோடு, ஹதீஸ் சொல்வதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.
இமாம்கள் மக்களோடு நெருக்கம் கொண்டு சமூக அக்கறையோடு மற்றவர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். மக்கள் மனதை தொட மக்களுக்கு நெஞ்சை வருடி விடுமாறு ஆறுதலும் ஊக்கமும் கொடுக்க வேண்டும். குறையை சுட்டிக் காட்டுவதை விட நிறையை சொல்வதில் மக்கள் அவரது தொடர்பை விரும்புவர். நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கொள்ளாமல் கெட்டவரையும் நல்லவராக்க அவர்களின் தொடர்பு அறுபடக் கூடாது

மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்
மனதில் விரிசல்
உள்ளத்தில் நடுக்கம்
நினைப்பில் தடுமாற்றம்
புரிதலற்ற போக்கு
அறிதளற்ற நிலை
சிக்கலில் சிக்கும் குழப்பம்
வடிகால் அற்ற தேக்கம்
தவறான பாதையில் தவறிப் போதல்
அனாதையாய் விடுபட்ட நிலை
வார்த்தைகள் மற்றும் நம்பிக்கை துரோகம்,
நொறுங்கிய மனமாய் மாய்த்துக் கொள்ளும் நிலை
பாராமுகமாய் படைத்தவனை அறியாமல் இருந்த நிலை
கடலில் சிப்பிக்குள் இருக்கும் முத்து மறைந்திருக்க
உலகில் உயர்ந்திருக்கும் இருக்கும் இறையோனும் மறைந்திருக்க
கடலில் மூழ்கி முத்தெடுத்து சேர்ப்பதுபோல்
இறைமறை கற்று அதில் மூழ்கி உயர்வை பெற வழி கண்டேன்
இறையை நாடும் மனம் இயல்பானது
வாழும் வாழ்க்கை உயர்வானது
செய்யும் செயல் சிறப்பானது

Thursday 19 September 2013
தமனியிலிருந்து குருதி ஊடுருவியது தரைக்குள்
எத்தனை சிவப்பு நீரோடைகள்,
தமனியிலிருந்து குருதி ஊடுருவியது தரைக்குள்
தாய்நாட்டில் தரம் பார்த்து இனம் பார்த்து தலையை துண்டிக்கின்றார்
அவர் பேச முடியும் என்றால் அது அரசியல் தலைகள் தந்த துணிவு
இறந்தவர்களின் துர்நாற்றம்,
தேடியது பரிச்சயம், மத்தியில் சடலங்களை,
உயிரற்ற உடல் உறுப்புக்களை கண்டு
மூச்சு தடுமாறியது கண்ணீர் வழிந்தது
அரவணைப்பு ஒரு இறுதி சுவடு,
உதடுகள் இடையே ஏற்கனவே ஒரு ஓட்டல்
அடிக்கிறாய் இதயங்களை குறி பார்த்து
இன்னும் அடித்து அது நாடு முழுவதும் பரவ முயற்சி
இனப்படுகொலை,
இதயமற்ற மோதல்,
துக்கம் இசையாக எதிரொலித்தது ,

Wednesday 18 September 2013
செலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்
பிரஞ்சு சமையல் புத்தகம், புதிய முகப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. உங்களது விருப்பங்களுக்குத் தகுந்ததுபோல் வெவ்வேறு முறையில் வழி காட்டும் பக்கங்களை பெரிது படுத்தியும் பார்க்க முடியும் . ஒவ்வொரு பக்கமாக புரட்டி பார்த்து படிக்க முடியும்.படங்களை பார்க்கும்பொழுதே உடன் சமைத்து உண்ண ஆர்வம் அதிகமாகும். முடிந்தவரை இல்லாளுக்கு உதவியாக இருந்து சமைத்து சாப்பிடுங்கள். மொழி தெரியவில்லையானால் இருக்கவே இருக்கிறது கூகிள் மொழிமாற்றம் (தப்புத் தவறுமாய் மொழி மாற்றம் செய்து காட்டினால் சமைத்ததும் புதுவிதமாக அமைந்து அவதிக்குள்ளாகலாம்)
அவசியம் பார்த்து ஆவன செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யவும்
Source :http://www.flash-ebook.com/demos.html
அவசியம் பார்த்து ஆவன செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்யவும்
Source :http://www.flash-ebook.com/demos.html
வல்லமையும் , திறமையும் வாய்ப்பை தேடி நிற்கும்
பொதுயுடைமை , சமயுரிமை , தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொள்கையளவில் மாறுபட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள்
மக்கள் தேவையானதை தேர்வு செய்யட்டும்.
சமய உடன்பாடு , மனித நல மேன்பாடு உயர்ந்த கொள்கை
இவை வளர மக்கள் ஒன்று சேரட்டும்
சமய முரண்பாடு ,சமய பிரிவினை கொள்கை இதுவே இன்றைய நிலை. நச்சுக் கருத்துகள் நசுக்கப் பட வேண்டும்

விரும்பியதை காதல் கொண்டதை நான் உருவாக்க முடியாமல் உருகுகின்றேன்
வார்த்தைகளை விரும்புகிறேன்
கவிதைகளை காதல் கொள்கிறேன்
விரும்பியதை காதல் கொண்டதை மனதில் மனனம் செய்கிறேன்
விரும்பியதை காதல் கொண்டதை நான் உருவாக்க முடியாமல் உருகுகின்றேன்
வார்த்தைகள் அறிவேன்
கவிதைகள் யாக்க அறியேன்
சிலரால் செயற்கறிய செயல்கள் செய்ய முடிகின்றது
சிலரால் செயற்கறிய செயல்கள் செய்ததாய் மார்தட்டிக் கொள்ள முடிகின்றது
சிந்தனையும் செயல்பாடும் உருவாக உழைக்க வேண்டும்
சிந்தனையும் செயல்பாடும் இருந்தாலும் உருவாக்க இறைவன் அருளும் வேண்டும்
பேச முடிந்தவனுக்கு எழுத முடிவதில்லை
எழுத முடிந்தவனுக்கு உருவாக்கத் தெரியவில்லை
எந்த வடிவிலும் என்னால் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை
எந்த முயற்சியும் எடுக்காமல் என்னை நானே எவ்வாறு உருவாக்கிக் கொள்ள முடியும்!
காலத்தே பயிர் செய்வதை தவிர்த்து வந்தேன்
காலம் கடந்த பின் வருந்தி நிற்கிறேன்.
முகம்மது அலி ஜின்னா
நாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது
என்று வரும் இந்த ஒற்றுமை
மென்று விழுங்குவது எப்பொழுது இந்த வேறுபாடை
கருத்தொருமித்து கணவன் மனைவியாவதில்லை
கருத்தோடு கருத்து மோதுவதில்லை
கடின மனம் கொண்டோர் கருத்தையும் சண்டைக் களமாக்குகின்றனர்
கொள்கை பிடிப்பு உள்ளோர் மற்றவர் கொள்கையை ஏளனம் செய்கின்றனர்
இன வெறி பிடித்து மாற்று மார்க்கத்தை பேணுவோரை வெட்டிப் போடுகின்றனர்
இனமான நெறி கொண்டு இயற்கையாய் இருக்க விரும்பாத சதி உள்ளம் கொண்டார்
உடலில் உள்ள உறுப்புகளில் நாக்கு செய்யும் வேலை உயர்வாய் இருக்க வேண்டும்
நல்ல வார்த்தைகள் சொல்லி நயம்பட வாழ வேண்டும்
நாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது
நாக்கால் உருவாகி உதிரப் படும் வார்த்தைகள் உடலுக்கே தீங்கை கொடுக்கும்
சொல்லிய வார்த்தைகள் தவறாய் போக தண்டிக்கப் படப் போவது மற்ற அவையங்கள்
நாக்கால் வந்த நாசமான வார்த்தைகள் நாட்டையே உலுக்குகின்றன
ஒற்றுமையின்றி உயர்வில்லை
வேற்றுமை பார்க்கின் சுற்றமில்லை
Tuesday 17 September 2013
தங்கத்தை கை நழுவ விட்டு விடாதே
நட்பு உயர்வானது
நட்பு சேர்க்கப் பட வேண்டியது
தங்கம் வெள்ளியை விட உயர்வானது
தங்கம் சேர்க்கப் பட வேண்டியது
தங்கமான நட்பை நிறுத்தி வைக்க வேண்டும்
தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும்
தங்கம் சந்தையில் நல்ல விலை போகும்
நட்பும் மக்களிடத்தில் நல்ல விலைக்கு போகும்
தங்கத்தை கை நழுவ விட்டு விடாதே
நட்பையும் கை நழுவ விட்டு விடாதே
இனிய வார்த்தையால் உனை இழுப்பார்கள்
கனிவு காட்டி உனை அசைப்பார்கள்
நய வஞ்சகம் கொண்ட மனமுடையோர்
கடிய வார்த்தையால் உனை கண்டிப்பாகள்
பிரிவு வர உதிர்ந்து போவார்கள்
நல்ல மனம் கொண்ட நட்புடையோர்
Friends are like flowers நண்பர்கள் - நட்பு

Sunday 15 September 2013
எனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவில்லை!
புகழ் பாடும் மக்களை பார்த்து விட்டேன்
குழி தோண்டி புதைக்கும் மக்களை பார்த்து விட்டேன்
பெருமை பேசி அலைந்து அழியும் மக்களை பார்த்து விட்டேன்
குற்றம் காணும் மக்களை பார்த்து விட்டேன்
குறை கூறி கண்டிக்கும் மக்களை கண்டு கொண்டேன்
மக்கள் மக்களை அழிக்கும் கொடுமையை கண்டு கொண்டேன்
எனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவில்லை
எனக்குள் இருக்கும் சிந்தனையை என்னால் இயக்க முடியவில்லை
என் பிழைகளை அறியாமல் தடுமாறுகின்றேன்
என் பிள்ளைகள் அறியாமல் செய்த பிழைகளை தண்டிக்கின்றேன்
தேடுதலை நம் கையில் விட்ட இறைவன் நம் திறமையை வளர்க்கவே!
கற்பனைகளும் கவிதைகளும் பகலில் மறைகின்றன
நினைவில் நின்றவைகளை கவிதையாக்கவும் முடியவில்லை
செயலில் செய்ய நினைப்பவைகள் கனவாய் மறைகின்றன
செயல் படுத்தவும் ஒரு திறன் வேண்டும்
முயற்சி இன்றி பலனை நாடும் வேட்கை விரயம்
இறைவன் அனைத்து பறவைகளுக்கும் உணவு அளிக்கின்றான்
இறைவன் அனைத்து பறவைகளின் கூட்டில் உணவை போடுவதில்லை
உலகில் அனைத்தையும் பரவச் செய்தவன் இறைவன்
உலகில் உள்ளவைகளை தேடுதல் பொறுப்புகளை நம்மிடம் தந்தான் இறைவன்
அன்னை மரியம் (அலை) ஆண் துணையின்றி கருவுற்றதும் மகவைப் (ஈசா நபி) பெறச் செய்தவனும் இறைவன்
Friday 13 September 2013
'ஓ' வென கதறி அழுதேன்
"And He gave you of all that you asked for, and if you count the blessings of Allah, never will you be able to count them…" Al Quran (14:34
இதயக் கோளாறு வந்தது
இதய அறுவை அவசியமென்றார் மருத்துவர்
இதய சிகிச்சை சிறப்பாக முடிவுற்றது
இதய அறுவையை முடித்து மருத்துவர் செலவுக்கான தொகையைச் சொன்னார்
இதயமே வெடித்துவிடும் போல் 'ஓ' வென கதறி அழுதேன்
இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆறுதல் சொல்லி சிகிச்சைதொகையை குறைக்கச் சொன்னார்
நான் மருத்துவரிடம் சொன்னேன் ' உங்கள் சேவைக்கு நன்றி தெரிவித்தேன் மற்றும் உங்கள் சிகிச்சைக்கு கொடுக்கும் தொகைக்கு நான் அழவில்லை . எழுபது ஆண்டு காலம் எனது இதயத்தை சீராக ஓட வைத்த எனை படைத்த இறைவனுக்கு இத்தனை ஆண்டுகளாக நன்றிக்காக அவனை தொழுது வராமல் இருந்தோமே! என நினைத்து என் மனம் குமுறுகிறது மனதை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன்' என்றேன்

கண்களில் கசியும் நீர் உயர்வானது
அழுகை இயற்கையாய் கொட்டும் மழை
மனதை இயல்பாய் வைத்திருக்க இமைகளில் வழியும் நீர்
கண்களில் ஊரும் நீர் ஒரு கேலன் நீருள் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி பெற்றது
கண்களை பாதுகாப்பது விழிகளில் ஊரும் நீர்
மனதின் பாரத்தை,சோகத்தை நீக்க அழுகை உதவுகிறது
அழுகை இயற்கையாக வர மனம் அமைதி பெறுகிறது
அழுகை ஒப்பாரியாகவும் ,ஓலமாகவும் வர அழுகை தன் இயல்பை இழக்கின்றது
மனிதனைத் தவிர மற்ற இனங்கள் தன் உணர்சிகளை கட்டுப்படுத்துவதில்லை
மனிதன் மட்டும் அனைத்தையும் கட்டுபடுத்த அவனுக்கு பல வியாதிகள் வருகின்றது
மனிதன் அனைத்து உபாதைகளையும் கட்டுபடுதுகின்றான்
அழுகையை அடக்குகின்றான்
சிரிப்பை முடக்குகின்றான்
மகிழ்வை காட்டுவதிலும் நேரம் பார்க்கின்றான்
சிறுநீர் வருவதையும் நிறுத்தி வைக்கின்றான்
இறுதியில் வரக் கூடாத வியாதி வந்து வேதனைப் படுகிறான்
உணர்ச்சி இறைவன் தந்த அருள்
மகிழ்வான உணர்ச்சியின் காரணமாக வருவது ஆனந்தக் கண்ணீர்
அடக்க முடியாத சிரிப்பால் வரும் ஆனந்தக் கண்ணீர் ஆரோக்கியமானது
துயரத்தால் வரும் அழுகை மனதை எளிமையாக்குகிறது
Thursday 12 September 2013
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !
அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !
நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.

வைர வரிகள் வைரத்தின் ஒளிபோல் மின்னி பிரகாசிக்கிறது
அழகான மக்கள் தங்கள் முத்திரையை நம் மனதில் பதித்து விட்டார்கள்
சூரிய ஒளியில் பூக்கும் பூக்கள் தனது அழகை நம் கண்களுக்கு விருந்தளிப்பதுபோல்
தேன் போன்ற இறைவனின் அருள் அவர்கள் எழுத்தில் பிரகாசிக்கின்றது
அவர்கள் விட்டுச் சென்ற துல்லியமான படைப்புகள் நம் இதயத்தில் பதிந்துவிடுகின்றது
அவர்கள் விட்டுச் சென்ற வைர வரிகள் வைரத்தின் ஒளிபோல் மின்னி பிரகாசிக்கிறது
பேசுவது பேச்சோடு முடிந்து விடுகின்றது
எழுதி வைத்த உயர்ந்த கருத்துகள் காலத்தை வென்று நிற்கின்றது
கவிதையாக தந்த சிறப்பான தத்துவங்கள் மனதில் பதிந்து விடுகின்றது
எழுதி வைத்த உயர்ந்த சிந்தனைகள் பாட நூலாக வந்து விடுகின்றது
எழுத்தில் இருக்கும் படைப்புகள் மக்களுக்கு வழி காட்டியாகிவிடுகின்றது
எழுத முடிந்தவர்கள் எழுதி விடுங்கள்
இறைவன் தந்த சிறப்பான எழுதும் ஆற்றலை முடக்கி விடாதீர்கள்
எழுதும் ஆற்றல் உங்களுக்கு கொடுக்கப் பட்டது பொதுயுடைமையானது

பாட்டியை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
பாட்டி முகம் பால் வடியும் முகமானது
பாட்டி அணிந்த கண்ணாடி அவள் முகத்தில் பதிந்துவிட்டது
பாட்டி குனிந்து கண்ணாடிக்கு மேல் பார்வையை செலுத்தி பார்ப்பது தனி அழகு
பாட்டி வேத நூலை படிக்கும் நிலை அவள் மனம் அமைதியடைகின்றது
பாட்டி கடுமையான குளிரிலும் எழுந்து இறைவனை தொழுவது அவளது இறை பக்தியை காட்டுகின்றது
பாட்டி மென்மையாக தனது கடந்த கால வாழ்கையை நம்மிடம் சொல்லி பூரிப்பது அவளது கபடமற்ற மனதை காட்டுகின்றது
பாட்டியை தொட்டு பேசும்போது பட்டு போன்ற அவளது மேனி நம் இதயத்தை மேன்மை படுத்துகின்றது
பாட்டியின் உறவை குழந்தைகள் மிகவும் நேசிப்பது நம் இதயத்திற்கு மகிழ்வைத் தருகின்றது
பாட்டியின் கடந்த கால உழைப்பு அவள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது
பாட்டிக்கென மருத்துவ செலவில்லை ஆனால் அந்த செலவை மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்
பாட்டி வீட்டில் உலா வருவது வீட்டிற்க்கே ஒளி வீசுகின்றது
பாட்டி இல்லாத வீடு பசுமை இல்லாத இல்லமாக மாறிவிடும்

நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை
நான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை
நாளா பக்கமும் உன் பார்வை போனால்
நான்கு பேர்களால் நீ பேசப் படுவாய்
உனக்கென்ற மனம் உன்னிலிருக்க
உனக்கேற்ற மனம் உயர்வாயிருக்க
நோக்கமும் செயலும் உயர்வாயிருக்க
நேசமற்ற மக்கள் உனை புறம் பேசுவதேன் !
உலகம் மக்களுக்காக படைக்கப் பட்டிருக்க
உலக மக்களில் நீயும் ஒருவராய் படைக்கப் பட்டிருக்க
உனக்குள் இருக்கும் அறிவு உயர்வடைய
உனக்காக மட்டும் நீ வாழாமலிருக்க
உயர்ந்தோர் உரையைக் கேட்டு உன்னை உயர்த்திக் கொள்
Wednesday 11 September 2013
உனை நினைத்து எனை மறப்பேன்!
உனை நினைத்து எனை மறப்பேன்
எனை நினைத்து உனை மறப்பாய்
இறை நினைத்து உயிர் வாழ்வேன்
மறை படித்து உளம் மகிழ்வேன்
வாரிசு தொடர இல்லாள் வேண்டும்
வேண்டியது கிடைக்க உழைப்பு வேண்டும்
காதல் நினைவு மனையாள் மீது
வாழ்தல் சிறப்பு மனையாளை சிறப்பிக்க
காதல் வயப்பட்டதால் உலகம் உயர்வானது
காதல் நீடித்ததால் உலகம் தொடர்வானது
எனை நினைத்து உனை மறப்பாய்
இறை நினைத்து உயிர் வாழ்வேன்
மறை படித்து உளம் மகிழ்வேன்
வாரிசு தொடர இல்லாள் வேண்டும்
வேண்டியது கிடைக்க உழைப்பு வேண்டும்
காதல் நினைவு மனையாள் மீது
வாழ்தல் சிறப்பு மனையாளை சிறப்பிக்க
காதல் வயப்பட்டதால் உலகம் உயர்வானது
காதல் நீடித்ததால் உலகம் தொடர்வானது
Tuesday 10 September 2013
நான் விழுவேன் விழுந்த வேகத்தில் எழுவேன்!
கொள்கை உண்டு பிடிப்பு இல்லை
பிடிப்பு உண்டு கொள்கை இல்லை
நாளுக்கு ஒருகட்சி
ஆளுக்கு ஒரு கட்சி
இன்று இந்த கட்சி
நாளை அந்த கட்சி
நேற்று போற்றப் பட்டவர்
இன்று தூற்றப் படுகிறார்
வந்தாரை வரவேற்கும் கட்சி
போவாரை தூற்றும் கட்சி
எத்தனை கட்சி இருந்தாலும் நான் ஒரு சுதந்திரப் பறவை
சுதந்திரமாக நின்று உன் வாக்கு சீட்டைப் பிரிப்பேன்
சுதந்திரமாக இருபதற்கும் சன்மானம் உண்டு
மானம் போனால் என்ன! பணமும் பதவியும் வந்தால் மாலைகள் வர மானம் வரும் .

வாழ்க்கைக் கல்வி அறியாத பேதை
காமப் பசி காலம் பொறுக்கவில்லை
கடிமணம் காமப் பசியை அடக்கியது
காலம் கடந்தது மனம் கொண்டவள் விலகி நின்றாள்
காமப்பசி பாலைவன காற்றுபோல் சூடாய் வீசியது
கடிமணம் கொண்டவள் காதல் வசப்பட்டிருந்தால்
காமம் கரைந்து காதல் மிகுந்திருக்கும்
வந்தவள் கொண்டவனை காதலில் மிகைக்கவில்லை
கடிமணமும் கடும்மனமாக மிகைத்துப் போனது
கற்றவள் பெற்ற கல்வி வாழ்கைக் கல்வியல்ல
கற்றவள் கற்றது தேர்வில் முதல மதிப்பெண் பெறவே
கற்றவளின் கல்வி ஏட்டுக் கல்வியானது
கற்று இணைந்தவள் இணைந்தவனின் மனம் அறியவில்லை
நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்
உடலில் சோர்வு
குருதியில் மாற்றம்
பார்வையில் தடுமாற்றம்
செயலில் வெறுப்பு
மனதில் நம்பிக்கை
கண்களில் நெடு நோக்கு
செயலில் ஈடுபாடு
விடியலில் வெற்றி
வாழ்க்கை நம்பிக்கை
நம்பிக்கை மனதின் ஈடுபாடு
ஈடுபாடு இதயத்தின் வெளிப்பாடு
வெளிப்பாடு ஈர்ப்பின் சக்தி
கண்கள் காட்டிக் கொடுக்கும்
கண்கள் கண்டதை நெஞ்சம் நினைக்கும்
நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்
பேசும் வார்த்தைகள் மனதின் மாண்பு
குருதியில் மாற்றம்
பார்வையில் தடுமாற்றம்
செயலில் வெறுப்பு
மனதில் நம்பிக்கை
கண்களில் நெடு நோக்கு
செயலில் ஈடுபாடு
விடியலில் வெற்றி
வாழ்க்கை நம்பிக்கை
நம்பிக்கை மனதின் ஈடுபாடு
ஈடுபாடு இதயத்தின் வெளிப்பாடு
வெளிப்பாடு ஈர்ப்பின் சக்தி
கண்கள் காட்டிக் கொடுக்கும்
கண்கள் கண்டதை நெஞ்சம் நினைக்கும்
நெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்
பேசும் வார்த்தைகள் மனதின் மாண்பு
Monday 9 September 2013
மல்லிகைப் பூவை விரும்பாதவர் யார் !
மல்லிகைப் பூ வை கண்டவுடன் கூந்தலில் சூட விரும்பும் பெண்கள்
மல்லிகைப் பூவின் மணத்தில் மயங்கும் ஆண்கள்
மல்லிகைப் பூ வை தினம் பறித்து சுட வேண்டும்
மல்லிகைப் பூவில் மதுரைப் பூ மிகவும் மணம் தரும்
மல்லிகைப் பூ வெளி நாட்டிற்கு தினம் விமானத்தில் ஏற்றுமதியாகின்றது
மல்லிகைப் பூ சென்னையில் படப்பையில் அதிகம் உற்பத்தி செய்து விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு வருகிறார்கள்
மல்லிகைப் பூ மனதை சுண்டி இழுக்கும் சக்தி கொண்டது
பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி கல்லூரிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் வருகிறதாம்
அந்த சட்டம் மல்லிகைப் பூவிற்கு வராது . வந்தாலும் எடுபடாது .
சட்டம் உருவாக்குபவர்கள் அடந்த சட்டத்தை மக்கள் மதித்து நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும் .இல்லையென்றால் சட்டத்தின் மதிப்பே கெட்டு விடும்

ஒப்புதலுக்கு ஓயாத வேலை /கல்யாணமாம் கல்யாணம்
திருமணப் பெண்ணிடம் திருமண ஒப்புதல் கையெழுத்து வாங்க இருவர் சென்றனர்.
ஒப்புதல் பெற்று சபையோரிடத்து ஓங்கி உரைத்தனர் 'அஸ்ஸலாமு அலைக்கும் '
என்று.
'அஸ்ஸலாமு அலைக்கும் ' என்று சபையோரிடத்தில் சொன்னது பெண் ஒப்புதல் தந்தமைக்கு மறைமுக விளக்கமாகிவிடும்
பெண்ணின் பத்து விரலுக்கும் பவுனால மோதிரங்கள் போட்டு வைக்க
பெண்ணின் முகத்தை முந்தானையால் மூடி வைக்க
மணப்பெண் ஒப்புதல் பத்திரத்தை படிக்காமல் ஒப்புதல் தர
பெண்ணின் கையை ஒப்புதல் தருமிடத்தில் ஒப்புதல் போடச் சொல்ல
பெண்ணின் கையெழுத்து ஒப்புதலாக இருக்க வைக்க
பெண்ணின் விரல்கள் ஆட கையெழுத்து ஒரு கிறுக்கலாக அமைந்து விட
பெண்ணின் முகமோ பதுமையாக சலனமற்ற நிலையாக நிற்க
பெண்ணின் மனம் படும் பாடு அவளே அறியும் நிலையாக
பெண் சம்மதம் தந்ததற்கு சாட்சியாக கையெழுத்தும் நாங்களும் ஒப்புதல் தந்துவிட்டதாக ஓங்கி சபையோரிடத்து உரைத்துச் சொன்னோம் .
Tuesday 3 September 2013
ஒரு செடியில் மற்றொரு செடி / புதிய கலவை
இது நந்தோட்டச் செடி .இதன் பூ பெரியதாக இருக்கும் .கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் .
இது நந்தியாவட்டை.இரவில் பூக்கும் நல்ல வாசனை உள்ளாது.குளிர்ச்சி தருவது....கண்களுக்கும் நல்லது
அதே செடியில் வேறு செடியின் சிறிய பூக்கள் பூத்துள்ளன . காரணம் அடிசெடிஅதன் மேல் வளர்ந்துள்ள செடி வேறு .
இது நந்தியாவட்டை.இரவில் பூக்கும் நல்ல வாசனை உள்ளாது.குளிர்ச்சி தருவது....கண்களுக்கும் நல்லது
அதே செடியில் வேறு செடியின் சிறிய பூக்கள் பூத்துள்ளன . காரணம் அடிசெடிஅதன் மேல் வளர்ந்துள்ள செடி வேறு .
Monday 2 September 2013
பாச இழைகளின் பரிமாற்றங்கள்
அம்மாவின் மகிழ்வான தகவல்
மகனே உனக்கோர் குழந்தை
மகனே உன்னைப்போல் அக் குழந்தை
நான் பாட்டி யானதால் பெருமை கொள்கிறேன்
தாயும் சேயும் நலம் .
நீல நிறக் கண்ணோடு குழந்தை
கண் கொள்ளா காட்சி தருகிறது
பிறக்கும் குழந்தைகள் அனைத்தும்
நீல நிறக் கண்ணோடுதான் பிறக்குமாம்
நீல நிறக் கண் நீடித்தால் நான் மகிழ்வேன்
நீலமோ .பழுப்போ கருப்போ குழந்தை நலமே பெரிது
--------------------------------------------

Subscribe to:
Posts (Atom)