Friday 17 June 2016

இறைவா துன்பம் வரும்போது துயர் கொள்ளாத உள்ளத்தை தா !.



  என் முடி இப்போது வெள்ளையாகி  விட்டது , இளமையில் இருந்த  மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும்   பக்குவம் எப்போழுதுதான் வரும்?

பெண்கள் அழுவதின் பொதுவான காரணங்கள் ...!

பெண்கள் ஏன் அழுகின்றனர்
கவலை கவ்வியதாலும் அல்லது நினைத்த காரியம் சாதிக்க வேண்டியும் இருக்கலாம்
உண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை செய்கின்றார்களா!
அழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா!
தன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா!
தன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா
அனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா

முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர்

உலக முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர் / Muslim scientists of the world 

இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
முஸ்லிம்கள் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்புகளை உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தந்துள்ளார்கள் .அவர்கள் விஞ்ஞானத்திலும் சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அந்த விஞ்ஞானிகள் மார்க்க பற்றிலும் தங்களை உட்படுத்திக் கொண்டு சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அவர்களது உடுத்தும் உடைகள் மற்றும் வாழ்வின் நெறி முறைகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையிலேயே இருக்கும்.
----------------------------------

Tuesday 14 June 2016

முன்னாள் குத்துச் சண்டை வீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்

முன்னாள் குத்துச் சண்டை வீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்
வீரர் மகம்மது அலி அவர்களின் மகள்கள் (hana (ஹன) மற்றும் லைலா) வீட்டிற்கு வந்தபோது அவர்கள் முறையான ஆடைகள் அணியாமல் மிதமான ஆடைகளை அணிந்து வந்தனர். அந்த நிகழ்வினை அவரது மகள் விவரித்தது நம் மனதில் காலமும் நினைவில் நிற்கக் கூடியது.
கார் ஓட்டுனர் வீரர் மகம்மது அலி சூட் (அறை) வரை வந்து அவர்களை விட்டுச் சென்றார் .எப்போழுதும்போல் மகம்மது அலி கதவுக்குப்பின் நின்று தன மகள்களை வேடிக்கையாக பயமுறுத்தினார் , பின்பு அன்பாக அவர்களை தன மடியில் அமரவைத்து அன்போடு முத்தங்களைக் கொடுத்தார்.அப்பொழுது அவர் சொன்ன அறிவுரைகளும் ஆலோசனைகளும் தன்னால் மறக்க முடியாது என்று அவரது மகள் சொல்கின்றார்

Monday 13 June 2016

நின் அருள் பெற வேண்டும்

நெடு காலம் வாழ வேண்டும் 
நின் அருள் பெற வேண்டும் 
நின் அருளைக் கொண்டு மற்றவருக்கு உதவ வேண்டும்
உழைத்து தேட வேண்டும் 
தேடியதை பகிர்ந்து அளிக்க வேண்டும்
வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன் 
இறைஞ்சுவதை உன்னிடமே இறைஞ்சுவேன்
வேண்டுவது எனக்காக மட்டுமல்ல 
வேண்டுவது அனைவருக்காகவும்

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்
வேண்டுதல் வேண்டப்படுபவர்காளாய் நாங்கள் இருக்கிறோம்
பெறுதல் பெறப்படாதவனாய் நீ இருக்கிறாய்
பெறுதல் பெறப்பட்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்
பிறப்பும் இறப்பும் உனக்கில்லை
பிறப்பும் இறப்பும் உன்னால் நாங்கள் பெற்றோம்
வியாதியும் தந்தாய்
வியாதி தீர மருந்தும் கற்றுக் கொள்ளச் செய்தாய்

கடிய சொல் சொல்வதில்லை

கடிய சொல் சொல்வதில்லை
கருணை சொல் சொல்வார்
முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்
துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி

விவேகமில்லா வீரம் விரயமாகும்

விவேகமில்லா வீரம் விரயமாகும்
பணிவில்லா பாசம் குறையாகும்
அறிவில்லா ஆற்றல் நாசமாகும்
நமக்கோர் பக்குவம் வந்திட
எல்லோரும் ஒட்றுமை அடைந்திட
எடுத்தோம் தொடுத்தோம் என்றில்லாமல்
நல்லதோர் திட்டம் தீட்ட
செம்மையாய் செய்து முடிக்க
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய் மனதில் நிறுத்திட
இறை வணக்கம் இயல்பாய் இருந்திட
இறைக் கருணையும் இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்